‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என ஆல்பிரட் ஹிட்ச்காக் ஏன் அழைக்கப்படுகிறார் தெரியுமா?

(ஏப்ரல் 29, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் நினைவு தினம்)
‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என ஆல்பிரட் ஹிட்ச்காக் ஏன் அழைக்கப்படுகிறார் தெரியுமா?
https://screenrant.com

ல்ஃப்ரெட் ஜோசஃப் ஹிட்ச்காக் பிரபல ஆங்கிலத் திரைப்பட இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். சுமார் 60 வருடங்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்ட இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். ஊமைத் திரைப்படங்கள் தொடங்கி, கறுப்பு - வெள்ளை திரைப்படங்கள், வண்ணத் திரைப்படங்கள் என பலவித திரைப்படங்களை உருவாக்கினார். தொடந்து பல வெற்றிப் படங்களை இயக்கி, தனது காலத்தில் மிகவும் பிரபலமடைந்த இயக்குநராகத் திகழ்ந்தார். பல மர்மப் படங்களை இயக்கிய இவர், தனது சிறந்த இயக்கும் பாணிக்காக இன்றும் பேசப்படுகிறார்.

குழந்தை பருவ குறும்பும் தண்டனையும்: சிறு வயதில் இருந்தே அதிகமான உடல் பருமனுடன் இவர் இருந்ததால் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இவருக்கு ஐந்து வயதாகும்போது குறும்பு செய்த காரணத்தால் அவரது தந்தை அவருக்குப் பாடம் புகட்ட எண்ணி ஒரு கடிதம் எழுதி அதை அவரிடம் கொடுத்து, அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தார். அதில் ஹிட்ச்காக்கிற்கு தண்டனையாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவரை சிறையில் வைத்து பூட்டி விடுமா று எழுதப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஹிட்ச்காக் வாழ்நாள் முழுவதும் காவல்துறை மற்றும் போலீசை பற்றிய அச்சத்துடனே வாழ்ந்தார். அவரது திரைப்படங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனை மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் பற்றிய காட்சிகள் அதிகம் வைக்கப்பட்டு இருக்கும்.

மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்: அவரது திரைப்படங்களில் சுவாரஸ்யமான மர்மங்கள் நிறைந்திருக்கும். திரைப்படத் தயாரிப்பில் பல புதுமையான நுட்பங்களுக்காக இவர் அறியப்பட்டார். தனது படங்களில் பதற்றத்தையும் சஸ்பென்சையும் உருவாக்க வித்தியாசமான கேமரா கோணங்கள் எடுத்து, மற்றும் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றை மிகவும் சிறப்பாக உருவாக்கினார். திரைத்துறையில் அவர் ஏற்படுத்திய பங்களிப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னணியில் பிரபலமான அடையாள சின்னங்களை பயன்படுத்தும் ஒரு பாணியை இவர் தொடங்கினார். இதனால் அவர், ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
சின்ன விஷயத்துக்கெல்லாம் குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் தெரியுமா?
‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என ஆல்பிரட் ஹிட்ச்காக் ஏன் அழைக்கப்படுகிறார் தெரியுமா?

அவர் படங்களில் சஸ்பென்ஸோடு சேர்ந்து உளவியல் மற்றும் மனித ஆன்மாவின் கருப்பொருள்களையும் ஆராயும் வண்ணம் இருந்தது. மனித மனத்தின் உந்துதல்கள், அச்சங்களை ஆராய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவரது கதை சொல்லலில் ஆழம் அதிகரித்தது. இன்றும் திரைப்படப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவரது படங்களும் அவர் பயன்படுத்திய நுட்பங்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்களைப் பற்றி மாணவர்கள் மற்றும் இயக்குநர்களால் அலசி ஆராயப்படுகின்றன.

ஐகானிக் படங்கள்: ஹிட்ச்காக் பல சின்னத்திரை படங்களை இயக்கியுள்ளார், அவை சினிமாவின் கிளாசிக் ஆகி விட்டன. ‘சைக்கோ’,  ‘வெர்டிகோ’,  ‘நார்த் பை நார்த்வெஸ்ட்’, ‘தி பேர்ட்ஸ்’  மற்றும் ‘ரியர் விண்டோ’ ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில. இந்தத் திரைப்படங்கள் அவற்றின் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களங்கள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் தலைசிறந்த இயக்கத்திற்காக கொண்டாடப்படுகின்றன.

தொலைக்காட்சிப் பணி: ஹிட்ச்காக் தொலைக்காட்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். அவர், ‘ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் பிரசண்ட்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரை தயாரித்துத் தொகுத்து வழங்கினார். அதில் சஸ்பென்ஸ் மற்றும் அடிக்கடி திருப்பங்கள் நிறைந்த கதைகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றது. மேலும் ஒரு தலைசிறந்த கதைசொல்லியாக ஹிட்ச்காக்கின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தியது.

எனவேதான், அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனபோதிலும், இன்னும் அவர் செல்வாக்கு மறையவில்லை. இன்றும் அவர், ‘மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ்’ என்கிற பெயரைத் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com