கணுப்பிடி ஏன் எல்லோரும் வைக்கணும் தெரியுமா?

Do you know why everyone has to keep the KanuPidi?
Do you know why everyone has to keep the KanuPidi?https://rajiyinkanavugal.blogspot.com

‘கார்த்திகையும் கணுப்பிடியும் உடன் பிறந்தானுக்கு’ என்றே ஒரு பழமொழி உண்டு. கூடப்பிறந்த அண்ணன், தம்பிகள் நன்றாக இருப்பதற்காக வைக்கப்படுவது கணுப்பிடி. பொங்கலுக்கு அடுத்த நாள் கணுப்பிடி வைக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இன்று காலையில் எழுந்ததும் பல் தேய்த்துவிட்டு, குளிப்பதற்கு முன்பு வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வீட்டிலுள்ள பெரியோர்கள் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும்.

அவர்கள் நமக்கு பச்சை மஞ்சளை நெற்றியில் கீற்றி தேய்த்து விட்டு வாழ்த்தி ஆசி வழங்குவார்கள். இந்தப் பழக்கம் இப்பொழுது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. காரணம் கூட்டுக் குடும்பம் இல்லாதது மட்டுமல்ல, வேலை நிமித்தம் வெளியூர் சென்று விடுவதாலும் இந்தப் பழக்கம் குறைந்து வருகிறது. வெளியூரில் இருந்தாலும் ஃப்ளாட்டில் வசித்தாலும் அருகில் உள்ள வயதில் மூத்தோர்களை சென்று வணங்கி நெற்றில் மஞ்சள் கீற்றிக் கொண்டு வருவது நல்லது.

மஞ்சள் கீறிக் கொண்டு வயதில் மூத்தவர்கள் காலில் விழும்போது அவர்கள் நமக்கு எல்லா செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வளமோடும் வாழ வாழ்த்துவார்கள். நம் குழந்தைகளுக்கு வாழ்த்தும்போது ஆரோக்கியமும், கல்விச் செல்வமும், எல்லா கலைகளும் பெற்று சிறப்போடு வாழவும் வாழ்த்துவார்கள். வாழ்வில் முன்னேற பெரியோர்களின் ஆசி மிகவும் முக்கியம் அல்லவா?

இதையும் படியுங்கள்:
வரலாற்றில் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு!
Do you know why everyone has to keep the KanuPidi?

குளிக்க செல்வதற்கு முன்பு முதல் நாள் செய்த பொங்கல்,  ஐந்து வகையான சாதங்கள் - மஞ்சள் பொடி கலந்த சாதம், குங்கும சாதம், கரும்பு துண்டுகள், வாழைப்பழம், தயிர் சாதம் என மஞ்சள் இலையை மொட்டை மாடியில் விரித்து காக்கைகளுக்கு கணுப்பிடி வைத்து விட்டு, வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து நெய்வேத்தியம் செய்து கிழக்கு திசை நோக்கி சூரிய பகவானுக்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு கணுப்பீடை போக குளிக்கச் செல்ல வேண்டும்.

காகங்கள் கூட்டமாக வாழும். காக்கைகளைப் போல நாமும் உறவுகள் சூழ வாழ வேண்டும் என்ற நோக்கில் இது செய்யப்படுகிறது. ‘காக்கா பிடி வச்சேன்! கண்ணு பிடி வச்சேன்! பிறந்த வீடு காக்கா கூட்டம் போல என்றும் பிரியாமல் இருக்கணும்!’ என்று கூறிக்கொண்டே கணுப்பிடி வைக்க வேண்டும்.

அன்று தேங்காய் சாதம், எலுமிச்சம்பழ சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை என கலந்த சாதங்கள் செய்து வடாம் வத்தல் பொரித்து சாப்பிடுவது வழக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com