குழந்தைகள் இன்னும் ஏன் உட்டி மரங்கொத்தியை ரசிக்கிறார்கள் தெரியுமா?

(ஏப்ரல் 27, Woody Woodpecker தினம்)
Woody Woodpecker
Woody Woodpeckerhttps://www.daysoftheyear.com
Published on

ட்டி உட்பெக்கர் என்பது இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் அறிமுகமான ஒரு அனிமேட்டட் கார்ட்டூன் கதாபாத்திரம். ஆனால், அதை இன்றும் குழந்தைகள் மிகவும் ரசிக்கிறார்கள். அதற்கான காரணத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அமெரிக்க அனிமேட்டர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் வால்ட்டர் லாண்ட்ஸால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம்தான் உட்டி என்கிற மரங்கொத்தி. 1940ல் ‘நாக் நாக்’ என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமானது. 1940ல் இருந்து அறுபது வரை வால்டர் லாண்ட்ஸ் ஸ்டுடியோ தயாரித்த பல அனிமேஷன் குறும்படங்களில் உட்டி கதாபாத்திரம் நடித்தது. அவை திரையரங்குகளிலும் பின்னர் தொலைக்காட்சிகளிலும் பரவலாக ஒளிபரப்பப்பட்டன.

வுட்டி வுட்பெக்கரின் சிறப்பம்சங்கள்:

1.அதனுடைய தனித்துவமான சிரிப்பு மற்றும் கலகலப்பான குறும்புத்தனமான செயல்களால் பார்வையாளர்களின் இதயங்களை உடனடியாக கவர்ந்தது. இதனுடைய பிரகாசமான சிவப்பு முகடு மற்றும் தனித்துவமான சிரிப்பு மிகப் பிரபலம்.

2. தனது எல்லையற்ற ஆற்றல், ஆளுமை மற்றும் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தும் தன்மைக்காக அந்தக் கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது. நகைச்சுவை காட்சிகளிலும், அபத்தமான சூழ்நிலைகளிலும் இது எப்படி வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும் அந்த அனிமேஷனில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

3. கிளாசிக் கார்ட்டூன்களின் மறு ஒளிபரப்பு மூலம் பல குழந்தைகளுக்கு அவை அறிமுகப்படுத்தப்பட்டது. அவை இன்னும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் கிடைக்கின்றன.

4. எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் குறிப்பாக ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை குழந்தைகள் மற்றும் டீன் பருவத்தினர் இடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. அவர்கள் மனதை கவர்ந்திருக்கிறது.

5. மிக சமீபத்திய அனிமேஷன் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் உட்டி உட்பெக்கர் இடம்பெற்றுள்ளது. இந்தத் தலைமுறை பார்வையாளர்களையும் கவரும் வண்ணம் அந்தக் கதாபாத்திரம் உள்ளது. சமகால பாப் கலாசாரத்தில் கூட அவரது கதாபாத்திரம் மிக பொருத்தமாக பொருந்துகிறது.

6. உட்பெக்கரின் உருவம் பதித்த பொருட்கள் ஐகானாக மாறின. பொம்மைகள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் போன்ற வணிகப் பொருட்களில் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இவை அமைக்கப்பட்டிருப்பதால் அவற்றை ஆர்வமுடன் வாங்குகிறார்கள்.

7. வார்னர் பிரதர்ஸ் இயக்கிய கார்ட்டூன்களுக்கு குரல் கொடுத்த மெல் பிளாங்க் என்கிற பின்னணி குரல் நடிகர் ஆரம்பகால படங்களில் மரங்கொத்திக்கு குரல் வழங்கினார். இந்த மரங்கொத்திக்கு பின்னணி பேசிய ஒவ்வொருவரும் தனித்துவமான சிரிப்பு மற்றும் பேச்சுக்கு சுவை சேர்த்தனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியர்களை அச்சுறுத்தும் DeepFake வீடியோக்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்! 
Woody Woodpecker

8. உட்பெக்கரின் செல்வாக்கு பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்டது. இந்த கதாபாத்திரம் பெரும்பாலும் , கல்வி சார்ந்த பொருட்கள், விளம்பரங்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஒரு ஐகானிக் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 27, உட்டி மரங்கொத்தி தினம் என்பது இந்தக் கதாபாத்திரத்தை சிறப்பிப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பாத்திரத்தின் நீடித்த மரபு மற்றும் தலைமுறை தலைமுறையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு உட்டி அளித்த மகிழ்ச்சியையும் சிரிப்பையும் கொண்டாடும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் குறும்புத்தனம் மற்றும் ஆற்றல் மிக்க உட்டியின் கார்ட்டூன்களையும் அனிமேட்டட் படங்களையும் பார்வையாளர்கள் ரசித்து சிரிக்கலாம். சமூக ஊடகங்களில் தான் ரசித்த, பிடித்த தருணங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com