தேசிய விலங்காக புலியை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?

புலி
புலி
Published on

ந்தியாவின் தேசிய சின்னங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. தேசிய மலர், தேசிய பறவை,தேசிய மரம், தேசிய மொழி, தேசிய விலங்கு, தேசிய விளையாட்டு இப்படி அனைத்தும் பழம்பெருமைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. அதைத் தவிர, நாட்டின் கண்ணியத்தைக் காட்டும் சின்னங்களாகவும் இவை விளங்குகின்றன. அந்த வகையில் தேசிய விலங்கு புலியும் இதில் அடங்கும். 1973ம் ஆண்டு புலி தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒவ்வொரு தேசிய சின்னத்தையும் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதேபோல், புலியை தேசிய விலங்காக தேர்வு செய்ததற்கும் பல காரணங்கள் இருந்தன. அதற்கு முக்கியக் காரணம், புலியின் சுறுசுறுப்பு, மகத்தான சக்தி மற்றும் விடாமுயற்சி ஆகியவையே புலி தேசிய விலங்காக தேர்வு செய்யப்பட்டதற்காக காரணங்களாகும்.

இந்தியாவின் தேசிய விலங்காக புலிக்கு முன் காட்டுக்கு ராஜாவான சிங்கம்தான் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை நீங்கள் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. 1969ம் ஆண்டு வனவிலங்கு வாரியம் சிங்கத்தை தேசிய விலங்காக அறிவித்தது. ஆனால், 1973ம் ஆண்டு சிங்கத்திற்கு தேசிய விலங்கு அந்தஸ்து நீக்கப்பட்டு, புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.

சிங்கத்துக்கு பதிலாக புலியை ஏன் தேசிய விலங்காக தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்புதான். உண்மையில், ஒரு காலம் வரை ஜார்கண்ட், டெல்லி, ஹரியானா போன்ற இடங்களில் புலிகள் அதிக அளவில் காணப்பட்டன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. எனவே, புலியை அழிவிலிருந்து காப்பாற்ற தேசிய விலங்காக அது தேர்வு செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பேபி வாக்கர் பயன்படுத்துவது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுமா?
புலி

புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 9 மட்டுமே. இதனால்தான் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதை தடுக்க 1979ம் ஆண்டு முதல் 'Project Tiger ' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி அழிந்து வரும் புலிகளை அரசு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது.

புலி இந்தியாவிற்கு மட்டுமல்ல, வங்காளதேசம், தென்கொரியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் தேசிய விலங்கு. அது மட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவில் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புலி தேசிய விலங்காக அறிவிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதன் சுறுசுறுப்பு என்பதுதான் நம் மனதில் மீண்டும் மீண்டும் எழுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com