பேபி வாக்கர் பயன்படுத்துவது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுமா?

பேபி வாக்கர்
பேபி வாக்கர்https://www.eurokidsindia.com
Published on

குழந்தைகள் பொதுவாக, நடைபழகும்பொழுது சுவரை பிடித்துக்கொண்டு அல்லது யாரையாவது பிடித்துக் கொண்டு தத்தித் தடுமாறி நடக்கத் தொடங்கும். இது பார்க்க அழகாக ரசிக்கும்படி இருக்கும். அதை விடுத்து, வாக்கர் வாங்கினால் (பெற்றோரின் ஆசைக்காக) அதில் குழந்தைகளை நீண்ட நேரம் உட்கார வைக்காமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு மேல் குழந்தைகளை வாக்கரில் அமர்த்தக் கூடாது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, பிறந்த குழந்தைகள் 10 மாதத்தில் இருந்து நடக்கத் தொடங்கும். அதற்கு முன்னரே பெற்றோர்கள் குழந்தைக்கு வாக்கரை அறிமுகப்படுத்துகின்றனர். வாக்கரை பயன்படுத்துவதால் உட்காரும் பருவத்திலிருந்து நேரடியாக நடக்கும் பருவத்திற்கு செல்லும்படி குழந்தை தள்ளப்படுகிறது. இதனால் தவழும் பருவத்தில் உள்ள வளர்ச்சி நிலைகள் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

பெற்றோர்கள் தங்கள் வசதிக்காக குழந்தைகளை வாக்கரிலேயே நீண்ட நேரம் உட்கார வைத்து விடுகின்றனர். ஆரம்பத்தில் நடக்கப் பழகுவதற்காக வாக்கரில் அமர்த்தப்பட்ட குழந்தைகள் நாளடைவில் மணிக்கணக்கில் அதில் உட்கார வைக்கப்படுகின்றனர். இப்படி நீண்ட நேரம் உட்காரும்போது குழந்தைகள் ஒரு பக்கமாக சரிந்தவாறு உட்காருவதும், இப்படித் தவறான கோணத்தில் நீண்ட நேரம் இருக்கும்போது குழந்தைகளுக்கு முதுகெலும்பு பாதிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே, குழந்தைகளை நீண்ட நேரம் வாக்கரில் அமர்த்துவதை தவிர்க்கலாம். அதற்கு மாற்றாக பழங்கால முறைப்படி மரத்தாலான நடை வண்டியில் பழக்கலாம்.

நடை வண்டியில் நடை பயில்வது எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நடை வண்டியில் நடை பழகும்பொழுது தட்டுத் தடுமாறி தள்ளிக் கொண்டு நடந்து செல்வதால் இடுப்பு மற்றும் கால் தசைக்கு தேவையான பயிற்சி கிடைத்து நடையை ஒழுங்குபடுத்தும். பேபி வாக்கரில் நீண்ட நேரம் உட்காரும்போது அவர்களை சரியாக கண்காணிக்கவில்லை என்றால் கீழே விழுவதும், அடிபடுவதும், படிக்கட்டுகளுக்கு அருகில் சென்று ஆபத்தை தேடிக்கொள்வதும் ஏற்படும். எனவே, குழந்தைகளை நீண்ட நேரம் வாக்கரில் உட்கார விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
மன உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படுத்தும் மனிதக் கைகளின் மகத்துவம்!
பேபி வாக்கர்

சமையலறை, குளியலறை, மாடிப்படி அருகில் போன்ற ஆபத்தான இடங்களில் வாக்கரில் குழந்தைகள் அமர்வதை அனுமதிக்கக் கூடாது. அதேபோல், நம்முடைய கண்காணிப்பு இன்றி ஒருபோதும் வாக்கரில் குழந்தைகளை தனியாக விடாதீர்கள்.

புஷ் வாக்கர்ஸ்: இவை வாக்கர்களைப் போலவே இருக்கும். ஆனால், சக்கரங்களுக்கு பதிலாக நம் குழந்தை நடை பயிற்சிக்கு தள்ளுவதற்கும், இழுப்பதற்கும் ஒரு கைப்பிடி இருக்கும். இதைத் தள்ளிக் கொண்டோ, இழுத்துக் கொண்டோ குழந்தைகள் செல்ல வசதியாக இருக்கும்.

மொத்தத்தில், வாக்கர் நடைவண்டி, தள்ளுவண்டி, புஷ் வாக்கர்ஸ் போன்ற  அனைத்துமே பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகள் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com