கிணறுகள் ஏன் வட்ட வடிவில் உள்ளன தெரியுமா?

Do you know why the wells are circular?
Do you know why the wells are circular?https://ta.quora.com

கிராமப்புறங்களிலும், நகரங்களின் சில இடங்களிலும் இன்றும் கூட கிணறுகள் இருக்கத்தான் செய்கின்றன. மழை நீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் குழியே கிணறு ஆகும். அவை ஏன் சதுரமாகவோ, முக்கோணமாகவோ, நீள்சதுரமாகவோ, முட்டை வடிவிலோ, அறுகோணமாகவோ இல்லாமல் வட்ட வடிவில் இருக்கின்றன என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?

உலகம் முழுவதுமே கிணறுகள் வட்ட வடிவில் மட்டும்தான் தோண்டப்பட்டுள்ளன. உண்மையில் கிணற்றின் வட்ட வடிவத்திற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் ஒன்று உள்ளது.

வட்ட வடிவ கிணற்றில் மூலைகள் கிடையாது. இதனால் கிணற்றைச் சுற்றியுள்ள நீரின் அழுத்தம் சமமாக இருக்கும். வட்ட வடிவமான கிணற்றில் நீரின் அழுத்தம் எல்லா பக்கங்களிலும் ஒரே சீராக இருக்கும். இதனால் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

கிணற்றின் வளைவான வடிவம் அதன் வெளிப்புற மண்ணின் அழுத்தத்தை நன்கு தாங்கிக் கொண்டு இடிந்து விழாமல் காக்கிறது. கிணற்றை வட்ட வடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது. அத்துடன் வட்ட வடிவத்தில் உள்ள கிணற்றின் கொள்ளளவு மற்ற வடிவத்தில் அமைக்கப்படும் கிணறுகளின் கொள்ளளவை விட அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால உடல் களைப்பைப் போக்க சில ஆலோசனைகள்!
Do you know why the wells are circular?

இதுவே கிணறு சதுரமாக இருந்தால் நான்கு மூலைகளிலும், அறுகோணமாக இருந்தால் ஆறு மூலைகளிலும் தண்ணீர் அழுத்தம் இருக்கும். இதனால் மண் சரிவு அபாயம் ஏற்படும். மேலும், கிணறுகள் நீண்ட காலம் நீடிக்காது.

வட்ட வடிவில் உள்ள கிணற்றை எளிதில் அசுத்தப்படுத்தவும் முடியாது. பல தலைமுறைகள் தாண்டி கிணறுகள் நீடித்திருப்பதற்கு அதன் வட்ட வடிவம்தான் காரணம். அத்துடன் கிணற்றை சதுரமாகவோ முக்கோணமாகவோ தோண்டுவதை விட, வட்டமாக தோண்டுவது மிகவும் எளிதானது. இதனால்தான் குளங்கள் மற்றும் கிணறுகள் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com