
ஜெருசலேமில் கண்டுபிடிக்கப்பட்ட 2,600 ஆண்டுகள் பழமையான களிமண் முத்திரையில் மர்மமான கைரேகை மற்றும் யெடா'யா என்ற பைபிள் நபருடன் தொடர்புடைய கல்வெட்டு உள்ளது. இந்த களிமண் முத்திரை டெம்பிள் மவுண்ட் ஷிஃப்டிங் ப்ராஜெக்ட் மூலம் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முத்திரை, முதல் கோயில் காலத்தில் உணவுப் பொருட்களை நிர்வகிப்பதில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
பண்டைய எபிரேய மொழியில் உள்ள கல்வெட்டு இந்த முத்திரையை 'யெடா'யா(அசாயாஹுவின் மகன்) என்று அடையாளப்படுத்துகிறது. இந்த யெடாயா ஒரு சுருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அது கீழ்படியாமைக்கான சாபங்களை கோடிட்டு காட்டுகிறது. இது ஒரு வகையான அழிவு நாள் எச்சரிக்கையாகும். உபாகமம் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரவிருக்கும் அழிவின் காலத்துடன், குறிப்பாக கீழ்ப்படியாமைக்கான சாபங்களுடன் இது ஒத்துப் போவதால் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உபாகமத்தின் பதிப்பாக நம்பப்படும் இந்த சுருள் கீழ்ப்படியாமைக்கான கடுமையான சாபங்களை பஞ்சம், போர், நாடுகடத்தல், நிலம் மற்றும் கோயில் இரண்டின் பேரழிவு ஆகியவற்றை கோடிட்டு காட்டியது.
முத்திரையில் கைரேகை இருப்பது, ஆவணத்தை முத்திரையிட்ட நபருக்கு ஒரு தனிப்பட்ட தொடுதலை சேர்ப்பதுடன், அவரைப் பற்றிய குறிப்புகளையும் தருகிறது. இந்த முத்திரை முதல் கோயில் காலத்திற்கு முந்தையது. அந்த காலத்தில் ஜெருசலேம் நிர்வாக மையமாகவும், மத முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. இது போன்ற முத்திரைகள் பொதுவாக உயர் பதவியில் உள்ள அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டன. இது யெடாயா ஒரு அதிகாரப் பதவியை வகித்ததை குறிக்கிறது.
களிமண் முத்திரையின் பின்புறத்தில் உள்ள அடையாளங்கள், இது ஒரு காலத்தில் பை அல்லது சேமிப்பு கொள்கலனைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டதாக கூறுகின்றன. இது ஒரு கயிறால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், மேலும் இந்த ஸ்கிரிப்ட் பாணி இது முதல் கோயில் காலத்தின் பிற்பகுதியைச் சுற்றி, தோராயமாக கிமு 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு இடையில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சாச்சி த்விரா, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலிடம், "வெளிப்படையாக முத்திரையிடப்பட்டதில் குறிப்பிடப்பட்டுள்ள அசாயாஹு பைபிளில் தோன்றும் அதேதானா என்பது தங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றும், இருப்பினும் டெம்பிள் மவுண்ட் பகுதியில் காணப்படும் இது போன்ற பல கலைப் பொருட்கள் பைபிள் பெயர்களைக் கொண்டுள்ளன. அத்துடன் இவை சாதாரண மக்களால் பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்ல என்பதால் இது அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார்.