கலைகளின் அரசி! எக்காலத்திலும் வளர்ச்சி!

Nadaga kalai
Nadaga kalai
Published on

கலைகளின் அரசியெனக் கூறப்படும் நாடகம் என்பது ஒரு கலை அல்லது பல்வேறு கலைகளின் கூட்டாகும். நிகழ்ச்சிகளை, பல்வகைச் சுவைகளுடன் மக்களிடையே எடுத்துக் காட்டும் கண்ணாடி, நாடகமாகும். பாட்டும், உரையும், நடிப்பும் கலைகளின் அரசியாகிய நாடகத்தில் உண்டு.

ஆய கலைகள் அறுபத்து நான்கில் பார்த்து மகிழ்வது ஓவியக்கலை ; கேட்டு ரசிப்பது இசைக்கலை; ருசித்து உண்பது சமையற்கலை. ஆனால் பார்த்தும், கேட்டும், ரசிப்பதும் கலைகளின் அரசியாகிய நாடகத்தைத்தான்.

நம் நாடு சுதந்திரமடைய, கலைகளின் அரசி ஆற்றிய பணிகள் இன்றும் பேசப்படுகின்றன. பெரிய மற்றும் சின்னத் திரைகள் வருகை தருகையில், கலைகளின் அரசி மெல்ல மறைந்து விடுவாள் என எண்ணியவர்கள், பேசியவர்கள் அனைவரும், கலைகளின் அரசியின் அசுர வளர்ச்சி கண்டு பிரமித்துப் போயினர்.

நாடகம் எழுதுவது என்பது மற்றவைகளை விட கடினம். உலகப் புகழ் பெற்ற பெர்னாட்ஷா, நாடகம் எழுதிய பிறகுதான் புகழ் பெற்றார். நாடகத்தின் மூலம் ஒரு கொலைகாரனைக் கூட கண்டு பிடிக்க முடியுமென கூறியிருக்கிறார் ஷேக்ஸ்பியர்.

எம்மொழி நாடகமாக இருந்தாலும், 'இன்பியல்' மற்றும் 'துன்பியல்' என்று கூறப்படும் இரண்டு வகை முடிவுகளைக் கொண்டே விளங்குகிறது.

இறைவன் ஆடிய ஆதிக் கூத்திலிருந்து படிப்படியாக நாடகம் தோன்றியதென்பதை--

" மோனத்திருந்த முன்னோன் கூடத்தில்,

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே!

ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே!

இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே!

ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே!

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே!

நாட்டியம் பிறந்தது நாடக வகையே! "

என்கிற பாடல் உணர்த்துகிறது.

**நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் :-

மக்களின் பார்வையில் தமிழ் நாடகம் உயர்ந்த மதிப்பிற்குரியதாக திகழ ஒரு முன்னோடியாக இருந்தவர் நாடகத் தந்தையெனப்படும் காலஞ்சென்ற பத்ம பூஷண் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார். அன்றைய கால கட்டத்திலேயே நாடக உலகில் புகுந்ததோடு, தெருக்கூத்தினை மாற்றி நல்ல மேடைகளமைத்து பலவகை நாடகங்களை நடத்திக் காட்டியவர் பம்மல் அவர்கள். ஷேக்ஸ்பியரின் பிரபல ஆங்கில நாடகங்களாகிய HAMLET, AS YOU LIKE IT போன்றவைகளை கலை நயம் குறையாமல் தமிழில் மொழி பெயர்த்து நாடகங்களாக மேடையில் அரங்கேற்றினார்.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய மனோகரா, சபாபதி போன்ற பல நாடகங்கள் திரைப்படங்களாக ஆக்கப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றன. தன்னுடைய 81 ஆவது வயதுவரை தமிழ் நாடகக் கலைக்கு பெரும் பணியாற்றியவர். தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரை நடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார்.

இதையும் படியுங்கள்:
சக்ஸஸ் தருமே சமயோசிதமான செயல் பாடுகள்!
Nadaga kalai

** உபரி தகவல்கள் :-

** முதன் முதலில் மேடையில் அரங்கேறிய சமூக நாடகம்:

- டம்பாச்சாரி

எழுதியவர் :- காசி விஸ்வநாத முதலியார்

** தமிழ் நாடகத்தின் தாத்தா:

நவாப் கோவிந்தசாமி ராவ்

** தமிழ் நாடக மூவர்கள் :-

1) பம்மல் சம்பந்த முதலியார்

2) சங்கரதாஸ் ஸ்வாமிகள்

3) பரிதிமாற் கலைஞர்

புராணம், இதிகாசம், வரலாறு, பக்தி, சமூக சீர்திருத்தம், நகைச்சுவை ஆகிய பல்வேறு விஷயங்களை பிரதிபலிக்கும் நாடகங்கள், பார்ப்பவர்களின் உள்ளத்தில் பதிந்து அவரவர் பண்புக்கேற்ற செயலாக மாறி வெளிப்படுவதும் உண்டு.

கலைகளின் அரசியாகிய நாடகத்திற்கு என்றென்றும், எக்காலத்திலும் வளர்ச்சி நிறைவாக இருக்க வாழ்த்துவோம் ! ஆதரவளிப்போம்!

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கு பொது நலனே மருந்து!
Nadaga kalai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com