உலகின் விலை மதிக்க முடியாத பொருள்களில் ஒன்றாக கோகினூர் வைரம் உள்ளது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இந்தியாவிலுள்ள சாமி சிலைகள் அமெரிக்க மியூசியம், லண்டன் மியூசியம் ஆகியவற்றில் உள்ளது. அதேபோன்று செப்பேடுகளும் நாணயங்களும் நெதர்லாந்து மியூசியத்தில் உள்ளது. இவை பல ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பான பராமரிப்பில் உள்ளது.
இங்குள்ள ஆட்சியாளர்கள் அதை இந்தியாவிற்கு கொண்டு வர இன்றைய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோன்றுதான் கோஹினூர் வைரம் இங்கிலாந்து ராணி எலிசபெத் கிரீடத்தில் அலங்காரமாக உள்ளது. இந்த வைரம் ஆரம்ப காலத்தில் கோல்கொண்டா சுரங்கத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஆட்சி செய்த காகத்தியர்கள் இதனை வெளிக்கொணர்ந்தனர்.
இது ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. காகத்திய மன்னர்களிடமிருந்து டெல்லி சுல்தான் இதை கைப்பற்றி 1849 இல் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் இந்த வைரம் பிரிட்டிஷ் ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு ஒளியின் மலை என்ற பெயர் உண்டு. எடை 105.6 காரட். சுமார் 21.6 கிராம் எடை கொண்டது. 3.6 சென்டிமீட்டர் நீளம், 3.2 சென்டிமீட்டர் அகலம், 1.3 சென்டிமீட்டர் ஆழம் கொண்டது.
ஆரம்பத்தில் காகத்தியர்கள் இந்த வைரத்தை எடுத்த போது அதனை அங்குள்ள பத்ரகாளி அம்மன் கண்களில் பதித்து அழகு பார்த்தனர். அதன் பின்னால் டில்லி சுல்தான் இதனை கைப்பற்றி கில்ஜி இடம் கொடுத்தார். 1740ல் முகமது மகரவி என்பவர் இதை கைப்பற்றி முகலாய சிம்மாசனத்தில் பதித்து அழகு பார்த்தார். இப்படி பலரிடமிருந்தும் கைமாறி கடைசியாக 1849 இல் விக்டோரியா ராணி வசம் வந்தது. இந்த வைரம் முழு உயிரோட்டம் கொண்டது.
இதில் விதி என்னவென்றால் ஆண்கள் யாரிடமும் தங்காது, ஆண்களிடம் இருந்தால் ராசி இருக்காது. ஒன்று திருடு போகும் அல்லது இறந்து விடுவார்கள். எனவே இதற்குப் பயந்து போய் இந்த வைரத்தை இங்கிலாந்து ராணியிடம் பிரிட்டிஷ்காரர்கள் வழங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ராணியும் இதனை பராமரித்து வந்தனர். தங்கள் கிரீடத்தில் அணிவித்து வந்தனர். 1911இல் இந்த வைரம் பிரிட்டிஷ் ராணி மேரி வசம் வந்தது.
அதன் பின்னர் 1937 இல் பிரிட்டிஷ் ராணி எலிசபெத் மகுடத்தில் அணிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பிரிட்டிஷ் ராணி கிரீடத்தில் ஒரு அம்சமாக இருந்து வருகிறது. இன்னும் இந்தியா வந்தபாட்டை காணோம். மத்திய அரசும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது வேதனை அளிக்கிறது.
2,800 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல் இன்று வரை பல மன்னர்களிடமும் சிக்கி கடைசியில் இங்கிலாந்து ராணி வசம் உள்ளது. ஒருவேளை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயத்தினால் கூட இதை இன்றுவரை இங்கு கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்காதது வருந்தத்தக்க செயலாகும். இன்றைய தேதி வரை இந்த வைரத்தின் மதிப்பை யாராலும் அளவிட முடியவில்லை.