
பெண்களுக்கு தாய்மை என்பது ஒரு வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். ஒரு உயிரை உருவாக்க பெண்களால் மட்டுமே முடியும் என்று சொல்லிய காலம் இப்போது மலையேறி விட்டது. ஆம். தற்போது ரோபோக்கள் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்க ரோபோக்களை பயன்படுத்த சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, சர்ஜெரி செய்வது, நம் வேலை பலுவை குறைப்பது என்று ரோபோக்களை பயன்படுத்தியது மாறி தற்போது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் ரோபோக்களை மனிதர்கள் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த ரோப்போக்களுக்கு செயற்கையான கருப்பை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் குழந்தை பத்து மாதம் வளரும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் டியூப் மூலம் குழந்தைக்கு செலுத்தப்படும். இதன் மூலமாக குழந்தை பத்து மாதம் ஆரோக்கியமாக செயற்கை கருப்பையில் வளரும் என்று சொல்லப்படுகிறது. எப்படி கருவை உருவாக்குவார்கள், அதை எப்படி ரோபோவிற்குள் செலுத்துவார்கள் என்பதை விஞ்ஞானிகள் தெளிவாக குறிப்பிடவில்லை.
குழந்தையில்லாத தம்பதிகள் மற்றும் குழந்தை பெற்றெடுக்க விருப்பமில்லாதவர்களுக்கு இந்த கண்டுப்பிடிப்பு பெரிதும் உதவும். இந்த ரோபோக்கள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. 2026 ல் சந்தைக்கு கொண்டு வர போவதாகவும் இதன் விலை 14,000 டாலர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுப்பிடிப்பு மக்கள் மத்தியில் பேசு பொருளாக ஆனாலும் இது குழந்தையில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இருப்பினும், குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பந்தம், குழந்தையின் மனநிலை, கருவுருதல் போன்றவற்றில் உண்டாகும் பாதிப்புகளை பற்றி கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நான்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தை சேர்ந்த ஜான் கென்ஃபெங் தலைமையில் தான் இந்த ரோபோக்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு Biobag என்ற முறையில் ஆட்டுக்குட்டியை பெற்றெடுத்திருப்பதாகவும். எனவே, இந்த முறை புதிதில்லை என்றும் கூறியுள்ளார். இந்த Biobag முறையை மேம்படுத்துவது மூலமாக இந்த ரோபோக்களை தயாரிப்பதாக சொல்கிறார். இது அடுத்த ஆண்டு தயாரான நிலையில் இருக்கும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் 12.96 லட்சம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.