வால்ட் டிஸ்னி, உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நேசத்துக்குரிய கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய பிரபலமான ஒரு கார்ட்டூனிஸ்ட். அமெரிக்கக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் டிஸ்னி நிறுவனத்தை உருவாக்கியவர். தனது கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர்களை பின்னணி குரல் கொடுக்க வைத்ததன் மூலம் ஒட்டுமொத்த பொழுதுபோக்கு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு அன்பு நட்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்த வால்ட்னியின் தினம் டிசம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
அனிமேஷன் என்பது உயிரற்ற பொருட்களை அசைவது போல் செய்யும் கலை. சினிமா கண்டுபிடிப்பதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை வடிவம் ஆகும். அது ஒரு பிரபலமான பொழுதுபோக்கு வடிவமாக இருந்தது. வால்ட் டிஸ்னி பல பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கினார். அவை அனிமேஷன் கலாசாரத்தின் பிரதான சின்னமாக மாறின.
மிக்கி மவுஸ்: 1928ல் வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்ட மிக்கி மவுஸ் கதாபாத்திரம் டிஸ்னியின் பிராண்ட் ஆக உருவெடுத்தது. பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறியது. மிக்கி மவுஸ் ஒரு மகிழ்ச்சியான, நம்பிக்கையான மற்றும் வளமான மானுடவியல் சுட்டியாக வடிவமைக்கப்பட்டது. தனது விளையாட்டுத்தனமான செயல்கள் மற்றும் வசீகரமான ஆளுமையால் பார்வையாளர்களை விரைவாகக் கவர்ந்தது. பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றது.
மின்னி மவுஸ்: மிக்கியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னி மவுஸ், மிக்கி மவுஸின் காதலி. அது பெண்மை மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது. போல் கா புள்ளி உடை மற்றும் தலையில் கட்டி இருக்கும் பௌவினால் ஒரு உற்சாகமான ஆளுமையை வெளிப்படுத்தியது. மிக்கி மவுஸ் உடன் சேர்ந்து சாகசங்களில் ஈடுபடுவது தனது அன்பையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துவது என ஒரு பிரியமான கதாபாத்திரமாக அது மாறியது.
டொனால்ட் டக்: இது 1934ல் உருவாக்கப்பட்டது. நகைச்சுவையான செயல்கள் மற்றும் சட்டென்று கோபப்படும் இயல்புக்காக பெயர் பெற்றது. அதன் தனித்துவமான க்வாக்கின் குரல் நடிகர் டக்கி நாஷ் ஆல் பின்னணிக் குரல் கொடுக்கப்பட்டது. மிக்கியைப் போல அல்லாமல் டொனால்ட் அடிக்கடி நகைச்சுவையான மோதல்கள் மற்றும் விபத்துகளில் சிக்கிக்கொண்டு, பெரும்பாலும் நகைச்சுவையான விளைவுகளுக்கு வழிவகுத்தது.
கூஃபி (Goofy): இது மிக்கி மற்றும் டொனால்டுக்கு முரட்டுத்தனமான நண்பராக சித்தரிக்கப்பட்டது. இதன் ஆழ்ந்த குரல் மற்றும் தனித்தன்மையான சிரிப்புடன் முட்டாள்தனமான நகைச்சுவை உணர்வு பார்வையாளர்களுக்கு விடாமுயற்சி மற்றும் சுய ஏற்றுக்கொள்வதைப் பற்றிய பாடங்களை டிஸ்னி கற்பித்தார்.
புளூட்டோ: மிக்கி மௌஸின் செல்ல நாய் புளூட்டோ. தனது விசுவாசம் மற்றும் விளையாட்டுத்தனமான நடத்தைக்கு பெயர் பெற்றது. முட்டாள்தனமாக அல்லாமல் தனது முக பாவனைகள் மற்றும் ஒலிகள் மூலம் தனது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்தும் அதன் சாகசங்கள் செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான நேசத்தையும், தோழமை மற்றும் விசுவாசத்தின் கருப்பொருளையும் தெரிகின்றன.
பாம்பி: இது ஒரு இளம் மான் கதாபாத்திரம். அப்பாவித்தனத்தையும் வாழ்க்கையில் சுழற்சியையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரம். இது வளர்ச்சி, பயணம் மற்றும் இயற்கையின் அழகு பற்றிய கருப்பொருள்களை சித்தரிக்கும் நிலைத்து நிற்கும் கதாபாத்திரமாக மாறியது.
ஸ்நோ ஒயிட்: டிஸ்னியின் முதல் அனிமேஷன் திரைப்படமான 'ஸ்நோ ஒயிட் அண்ட் தி 7 ட்வார்ஃப்சில்| வரும் கதாபாத்திரமான ஸ்நோ ஒயிட் தனது கருணை, அழகு மற்றும் நெகிழ்ச்சிக்கு பெயர் போனது. ஏழு குள்ளர்களுடனான அவளது நட்பு, காதல், தைரியம், தீமையின் மீது நன்மையின் வெற்றி போன்ற கருப்பொருளை வெளிப்படுத்துகிறது.
சிண்ட்ரல்லா: இது நம்பிக்கை, விடாமுயற்சி, கருணை போன்றவற்றை சித்தரிக்கும் ஒரு அருமையான கதாபாத்திரம் ஆகும். தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் இரக்கத்தின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது.