நீங்கள் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களா? உங்களுக்கு என்று சில விசேஷ குணங்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள் என்கிறார்கள்.105 வயதிற்கு மேற்பட்டு உலகில் வாழ்ந்த பெரும்பாலானோர் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள்தானாம்.
டிசம்பரில் பிறந்தவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை விட குறைவாகவே மற்றவர்களைப் பற்றி புகார்கள் தெரிவிப்பதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது. மற்றவர்களுடன் இணக்கமாக செயல்படுவதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாம். இந்த காரணத்தினால் டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ‘மூட் அவுட்’ஆவது குறைவுதானாம்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் வருவது குறைவுதானாம். கிட்டத்தட்ட 70 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட வாஷிங்டன் ஆய்வில் தெரிய வந்த உண்மை இது. அமெரிக்காவில் 17.49 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், `டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இதயம் மற்றும் இரத்தநாளம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு' என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அதிகாரபூர்வமாக `வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் வெளியிட்டது. காலநிலை மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேடிக்கையான உண்மை: டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலானோர் தங்கள் வர விரும்பும் தொழில் எனக் குறிப்பிட்டது. ‘பல் மருத்துவர்’ பணியைத்தானாம். பெரும்பாலான பல் டாக்டர்கள் பிறந்தது கூட டிசம்பர் மாதத்தில்தானாம்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலானோர் அதிகாலையில் எழுவதில் ஆர்வம் உள்ளவர்களாம். டிசம்பர் என்பது குளிர்காலம் என்பதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தூங்குமூஞ்சிகளாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இரவில் சீக்கிரமே உறங்கச் சென்றுவிட்டு, அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்களாம். அதிகாலையில் எழுவதை சந்தோஷமாக அனுபவிக்கும் மனநிலையும் இவர்களிடம் காணப்படுமாம்.
ஒருவரின் பிறந்த மாதம் அவருடைய ஆளுமையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுடன் இருப்பவர்களும் கூட அதிர்ஷ்டசாலிகள்தான்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உங்களுடன் இருந்தால் உங்களைச் சுற்றி எப்போதும் நேர்மறையான சக்திகள் இருக்கும். இவர்களின் குணங்கள் எப்போதும் மற்றவர்களை கவரக்கூடிய வகையில் இருக்கும். இவர்கள் உங்களுடன் இருப்பது ஓர் அறிவாளி உங்களுடன் இருப்பதற்கு சமம் என்கிறார்கள்.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள், ஆன்மிகத்தில் ஆர்வம் உள்ளவர்கள், எப்போதும் பணிவுடன் நடந்துகொள்வார்கள். புத்தி கூர்மை மற்றும் உறுதியான மனம் படைத்தவர்கள், இயற்கையாகவே உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களை எளிதில் புரிந்துகொண்டு அனுசரணையாக இருப்பார்கள். அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்கள். இவர்களின் மிகப்பெரிய பலவீனம் பிடிவாத குணம்தான்.