ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மனோரா கோட்டை வரலாறு!

Manora Fort
Manora Fort
Published on

ன்னர்கள் கட்டிய ஒவ்வொரு கோட்டைக்குப் பின்னாலும் ஒவ்வொரு வெற்றி வரலாறு நிச்சயம் இருக்கும். அதேபோல், ஒவ்வொரு கோட்டையிலும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அந்த வசதிகளெல்லாம் அப்பொழுதே அவர்கள் வடிவமைத்து இருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

நாம் நம் நாட்டில் இருக்கும் கோட்டைகள் பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், நம் முன்னோர்கள் எப்படி கலை ரசனையோடு ஒவ்வொரு விஷயத்திலும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் அறிய வேண்டும். அது நமது கடமையும் ஆகும். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா கோட்டையை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மனோரா என்ற நினைவுச்சின்னம் தஞ்சை மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியால் எழுப்பிக்கப்பட்டதாகும். ஆங்கிலேயருக்கும், நெப்போலியனுக்கும் இடையே பிரான்சு நாட்டின் வடக்கிலுள்ள, ‘வாட்டர்லூ’ என்ற இடத்தில் கி.பி. 1814ல் பெரும் போர் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டனர்.

வரலாற்றையே மாற்றியமைத்த இந்த வெற்றியை ஆங்கிலேயர் மட்டுமின்றி, அவர்களுடன் நட்பு கொண்ட அனைத்து நாடுகளும் கொண்டாடின. தமிழ்நாட்டில் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியும் இதைக்கேட்டு மகிழ்ச்சியடையது, அதன் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை எடுப்பித்தார். அந்த நினைவு சின்னம்தான் ‘மனோரா.’ இது கி.பி. 1814ல் கட்டப்பட்டது.

மனோரா என்பது, ‘மினார்’ என்ற சொல்லிலிருந்து வந்தது. ‘மின்னார்’ என்பது ரோம் நாட்டிலுள்ள டிராசனை போன்றது என்று கட்டக்கலை வல்லுநர் பெர்கூசன் கூறுகின்றார். தூணைப் போன்ற உயரமான கட்டட அமைப்பைக் கொண்ட இத்தகைய சின்னம் மினார் அரச மரபைச் சார்ந்த கும்பா என்று மன்னனால் இரண்டு மினார்கள் (கி.பி.1425 - 64) தன்னுடைய வெற்றியின் நினைவாகக் கட்டினார்.

Manora Fort
Manora Fort

இது ஜெயஸ்தம்பம் (வெற்றித்தூண்) என்று அழைக்கப்படுகின்றது. இதைப் போன்றுதான் மனோராவும். 75 அடி (22.30 மீட்டர்) உயரமுடைய இக்கட்டடம் எட்டு அடுக்குகளைக் கொண்டதாகும். அறுகோண அமைப்பிலும் கட்டப்பட்டுள்ளது. இதைச் சுற்றி பெரிய அகழி ஒன்றும், அதையடுத்து மதில் சுவரும் காணப்படுகின்றது. ஒரு கோட்டையின் அமைப்பில் காணப்படும் மனோரா, கலங்கரை விளக்கமாகவும் இருந்துள்ளது.

இரண்டாம் சரபோஜி, தனது குடும்பத்துடன் இங்கு வந்த தங்கியும் சென்றுள்ளார் என்பதை குறிப்புகள் கூறுகின்றன. இந்த நினைவுச்சின்னம் எதற்காக எடுக்கப்பட்டது என்பதைக் கூறும் கல்வெட்டு தமிழ், தெலுக்கு, மராட்டி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெட்டப்பட்டு அங்கு இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தையின் IQ லெவலை உயர்த்தும் 5 வழிகள் இதோ!
Manora Fort

சரபோஜி பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் நான்கு மொழிகளில் இக்கல்வெட்டை வெட்டி வைத்துள்ளார். கல்வெட்டின் தமிழ் வாசகம் வருமாறு: ‘இங்கிலீஷ் சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த ஜெய சந்தோஷங்களையும் போனபாற்தெயின் தாழ்த்தப்படுதலையும் நினைவுட கூறத்தக்கதாக இங்கிலீஷ் துரைத்தனத்தின் சினேகிதரும் படைத்துணைவருமாகிய தஞ்சாகீர் சீர்மை சத்திரபதி சர்போஜி மகாராசா அவர்கள் இந்த உப்பரிகைகயைக் கட்டி வைத்தார். ஆண்டு 1736. இதுவே இக்கோட்டையில் மிகப்பெரிய சிறப்பு.

சமயம் வாய்க்கும்பொழுது தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை சென்றால் மனோரா கோட்டையை அதன் அழகையும் ரசித்து வாருங்கள். இக்கோட்டை தஞ்சையிலிந்து 60  கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com