வேலுநாச்சியார் வாழ்ந்த கௌரி விலாசம் அரண்மனை!

Gowri Vilasam Palace
Gowri Vilasam Palace
Published on

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மன்னர்கள் ஆட்சிக் காலத்து அரண்மனைகள் இன்னமும் அவர்களின் வரலாற்றை நினைவூட்டும்விதமாக உள்ளன. அந்த வகையில் மதுரையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேலுநாச்சியார் வாழ்ந்த கௌரி விலாசம் அரண்மனை. இது மிகவும் பழைமையான, உயர்ந்த, மதிப்புமிக்க பல வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். இந்த அரண்மனை அரசிகள் வேலுநாச்சியார் (1780 - 90), வெள்ளச்சிநாச்சியார் (1790 - 93) மற்றும் ராணி காத்தம்ம நாச்சியார் (1864 - 77) ஆகியோரின் வசிப்பிடமாக இருந்துள்ளது.

சிவகங்கை அரண்மனையின் மிச்சங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், ‘கௌரி விலாசம்‘ என்று அழைக்கப்படுகின்ற படமாத்தூர் கௌரி வல்லப தேவரால் (1801 - 1829) 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புதிய அரண்மனை தற்போதும் உள்ளது. செட்டிநாட்டின் பாரம்பரிய தலமாக விளங்கும் இந்த அரண்மனை ராணி வேலுநாச்சியாரின் சொத்தாக உள்ளது.

1730ம் ஆண்டில் கட்டப்பட்ட உண்மையான அரண்மனையானது வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிட்டானிய அரசை எதிர்ப்பது தொடர்பான ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற இடமாக இருந்துள்ளது. 1762 மற்றும் 1789ம் ஆண்டுகளுக்கிடையே பலமுறை தாக்குதலுக்கு ஆளான இடமாகவும் இது இருந்துள்ளது. உண்மையான அரண்மனையின் எஞ்சியிருந்த ஒரே பகுதியான உயர்ந்த சுவர் மட்டுமே அழிக்கப்பட்ட நாளிலிருந்து மிஞ்சி இருக்கிறது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படமாத்தூர் கௌரி வல்லப தேவர் (1801 – 1829) என்பவரால் ஒரு புதிய அரண்மனை வரலாற்றுச் சின்னமாகக் கட்டப்பட்டு கௌரி விலாசம் என்று பெயரிடப்பட்டது. வல்லப தேவரின் இறப்புக்குப் பிறகு அவரது சகோதரர் ஒய்யா தனது மகன்களுடன் அரண்மனையை ஆக்கிரமித்துக்கொண்டார். அரசர் உயில் எழுதாமல் இறந்துவிட்ட காரணத்தால் பிரிட்டானிய அரசு ஆட்சியைக் கைப்பற்றிவிடக்கூடும் என்ற தந்திரத்தால் அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அரசைக் கைப்பற்றுவதற்காக போலியான ஆவணங்களை உருவாக்கி இறந்த அரசரின் கையொப்பத்தை மோசடியாக இட்டு தாங்களாகவே அரண்மனையின் கறுப்புச் சலவைக்கல்லில் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
நடைப்பயணம் தெரியும்; குடைப் பயணம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Gowri Vilasam Palace

இப்போது பாழடைந்த நிலையில் காணப்படும் கௌரி விலாசம், திருமலை நாயக்கர் கால கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையின் சில அம்சங்களை ராஜபுதன கட்டடக்கலையின் பாணியையும் காண முடிகிறது. இந்த அரண்மனையின் தென்புற முகப்பில் நுழைவு வாயிலில் ஒரு கடிகாரம் இருந்துள்ளது. அரண்மனைக்குள்ளேயே ராஜராஜேசுவரி அம்மன் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது. புகழ் பெற்ற கவிஞரான பாபநாசம் சிவன் ராஜராஜேசுவரி அம்மனைப் புகழ்ந்து வணங்குகின்ற பல பிரபலமான பாடல்களை இசையமைத்ததாகக் கூறப்படுகிறது. அரசர் காண்டுமேக்கி உடைய தேவர் சிலையும் ஆலயத்தில் உள்ளது.

அரண்மனைத் திடலில் புலவர்களை கௌரவித்த அரச சபையைக் கொண்டுள்ளது. அரண்மனைக்குள்ளே கறுப்புச் சலவைக்கல்லால் ஆன சதுக்கம் உள்ளது. இதுவே சலவைக்கல் இருக்கையாக நீதி வழங்கவும் புதிய அரசர்களுக்கு முடிசூட்டு விழா நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மற்றுமொரு முக்கியமான சிறப்பம்சமாகக் கல் கட்டுமானத்தைக் கொண்ட தெப்பக்குளம் அமைந்துள்ளது. இது அரண்மனையின் முன்னால் அமைந்த நீர்த்தேக்கமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com