
கஜல் கவிதை 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியாவில் தோன்றியது. பின்னர் இது உருது மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்று, கஜல் கவிதை (Ghazal poetry) எனப் பிரபலமடைந்தது. இந்த கவிதை வடிவம் அரபு இலக்கியத்தில் உருவானது. சுருக்கமாக, கஜல் என்பது காதல் மற்றும் இழப்பு போன்ற உணர்ச்சிகளை அழகாக, தாளத்தோடு வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு கவிதை வடிவமாகும். உருது மொழியில் உருவாக்கப்படுவதால் கஜல் பாடல்கள் இன்று வரை புகழ் பெற்று வருகிறது.
காதலை சொல்லிடும் வழி கஜல். இது முதல் முறையாக கிபி 10ம் நூற்றாண்டில் பார்சிய நாட்டில் உருவாக்கப்பட்டது. ஈரான் நாடுதான் கஜல் இசை மற்றும் பாடல்களின் பூர்வீகம். அரேபிய நாட்டில் மன்னர்களையும், புகழ்பெற்ற பெரிய மனிதர்களையும் புகழ்மிக்க சிறுசிறு பாடல்களாக பாடப்பட்ட பாடல்கள் தான் கஜல் பாடல்கள். பின்னர் இது ஈரான் நாட்டினுள் நுழைந்தது.
கஜல் பாடல்கள் இரண்டு வரிகளில் ஆரம்பித்து 12 வரிகளுக்கு மேல் போகாது. 7 வரிகளுக்குள் முடிந்து விடும். ஈரான் நாட்டில் "கேசிடி"எனும் பாடல்கள் பிரபலமாக இருந்தது. அது 100 வரிகளை கொண்டது. அந்த வேளையில் தான் நான்கைந்து வரிகளில் கருத்து செறிந்த பாடல்களாக கஜல் பாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மொகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது ஈரான் நாட்டில் உள்ள பாடல்கள், இலக்கியங்கள் மற்றும் உணவுகளை கொண்டு வந்து விட்டார்கள். பார்சிய மக்கள் உருது மொழியில் கவிதைகளையும், பாடல்களையும் பாடிக் கொண்டிருந்த போது அவற்றுடன் கஜல் பாடல்களும் புகழ்பெற்றன. இந்தியாவை கிபி 1253 - 1395 வரை ஆண்ட அமீர் கஸ்ரூரோ எனும் முகலாய மன்னர் காலத்தில் தான் கஜல் பாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்தன.
கஜல் என்பது அரேபியச் சொல். இதற்கு "பெண்களுடன் பேசுதல்" என்று பொருளாம். அதனால் தான் காதல் மொழியாக கஜல் புகழ்பெற்றது. ஆண்களும் பெண்களும் சகஜமாக பேச முடியாத காலகட்டத்தில், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து முகத்தை மூடிக் கொண்டு வாழ்ந்த காலத்தில், தங்களிடையே காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது தான் கஜல் பாடல்கள்.
இரு கைகளும் இணைந்தால் தான் கைத்தட்டல் நிகழ்வது போல் கஜல்கும் இரண்டு பேர் வேண்டும். ஒருவர் பாடல் எழுத, மற்றொருவர் இசையுடன் இனிமையாக பாட! மொகலாயச் சக்கரவர்த்திகளில் கடைசி மொகலாயர் என்றழைக்கப்படும் பகதூர் ஷா ஜப்பார் கஜல் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். அரசியல் சிக்கல்கள் காரணமாக இவர் தலைமறைவாக வாழ்ந்த போதிலும் இவர் கஜல் எழுதுவதை மறக்காதவர் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
கஜல் பாடல்கள் உலகில் மிகவும் புகழ் பெற்றவர் 'மிர்ஷா குலாபி ' இவர் அந்நாளில் 235 கஜல் பாடல்களை உருது மொழியில் எழுதியுள்ளார். இவர் தொடாத சப்ஜெக்ட்களே கிடையாதாம். 235 கஜல் பாடல்களில் 1818 செய்யுள்கள் உள்ளன.
மிர்தாசிமிக், சர் முகம்மது இக்பால், பிராக்கோரக்பூரி, நியாஸ் அகமது, மோமின் மற்றம் அகமது பியாஸ் போன்றவர்கள் கஜல் பாடல்கள் புனைவில் வல்லவர்கள். தமிழ்நாட்டில் கவிஞர் அப்துல் ரகுமான் போன்றவர்கள் இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புகழ்பெற்ற கஜல் பாடகர்களில் ஜக்ஜித் சிங், பங்கஜ் உதாஸ், மெஹ்தி ஹசன், குலாம் அலி, ஃபரிதா கான் மற்றும் இக்பால் பானோ ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் கஜல் இசைக்கு தங்கள் தனித்துவமான குரல் மற்றும் ஆழமான பாடல்கள் மூலம் பெரும் பங்களிப்பை செய்துள்ளனர். இதில் பங்கஜ் உதாஸ் இந்திய அரசின் பத்மஶ்ரீ பட்டம் பெற்றவர். இந்தி பாடகி ஆஷா போஸ்லே, தமிழ் பாடகர் ஹரிஹரன் போன்றோர் கஜல் பாடல்கள் பாடி புகழ்பெற்றவர்கள்.
கஜல் இசையின் தாக்கத்தைக் கொண்ட பாடல்கள் தமிழில் உள்ளன; ஆனால் இவை பெரும்பாலும் கஜல் வடிவத்தைப் பயன்படுத்தினாலும், அதற்கு தமிழ் மற்றும் தென்னிந்திய இசையின் கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கும். இளையராஜா இசையமைத்த "பொன்மாலைப் பொழுது", "பூங்கதவே தாழ்திறவாய்" போன்ற பாடல்களில் கஜல் இசையின் சில கூறுகள் இருக்கும்.