சிமெண்ட் இல்லாத காலத்திலேயே நிலநடுக்கத்தை தாங்கி நிற்கும் சீனப் பெருஞ்சுவரின் ரகசியம்!

great-wall-of-china
great-wall-of-china
Updated on

சீனப் பெருஞ்சுவர் வடக்கில் இருந்து வந்த மங்கோலியர்கள் படையெடுப்பின் காரணமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக கிமு ஏழாம் நூற்றாண்டில் முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அரச வம்சத்தினரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை ஆகும்.

கி மு ஏழாம் நூற்றாண்டு முதல் சீன அரசர் சின்சி காலத்தில் தொடங்கியது ஆரம்பகாலத்தில் மண் மற்றும் மரப்பலகைகள் பயன்படுத்தப்பட்டது. 14 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் செங்கல் கற்களை கொண்டு பயன்படுத்தப்பட்டது. உலகின் மிக நீண்ட கல்லறை என அழைக்கப்படுகிறது. இந்த சுவரை கட்டும் பணியில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

1987ல் யுனோஸ்கோ உலகம் பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது. நிலவிலிருந்து பார்த்தால் மண்ணில் தெரியும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரே விஷயம் இந்த சீனப் பெருஞ்சுவர் தான் மிகவும் பழமையானது. இயேசு பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. 2500ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் படையெடுப்பில் இருந்து தங்களை காப்பாற்ற இந்த கோட்டை கட்டப்பட்டது.

அன்றைய சீனா இன்றுபோல பரந்து விரிந்து காணப்படவில்லை. ஏராளமான குட்டி மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். மங்கோலியர்களிடமிருந்து காப்பதற்காக ஒவ்வொரு மன்னர்களும் தங்கள் பகுதியில் சுவர்களை எழுப்பத்தொடங்கினார்கள்.

இவை துண்டு துண்டாக இருந்தது. ஆரம்பத்தில் வலிமை இல்லாமல்தான் இருந்தது. கிமு 221 இல் சீனாவில் இருந்த ஜெங் என்ற மன்னன் சிறிய நாடுகளை ஒன்றிணைத்தான் அதற்கு சின் என எனபெயரை சூட்டினான். இதுவே நாளடைவில் சீனா என அழைக்கப்பட்டது. ஜெங் என்ற மன்னன் அதிகாரத்தில் இருந்ததால் முதல் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டவன்.  இவரது ஆட்சிக் காலத்தில்தான் மங்கோலியர்கள் படையெடுத்து வந்தனர் 

இவர்தான் சீனாவின் வடக்கு பகுதியில் மிகப்பெரிய சுவரை எழுப்பினார். இன்றைய சீனப் பெருஞ்சுவர் இப்படித்தான் எழுப்பப்பட்டது. கிபி 221 இல் 5000 மைல் தூரம் வரை சுவரை கட்டினான். கிபி 1368 முதல் 1644 வரை ஆட்சி செய்த மிங் அரசர் காலத்தில் 6400 கிலோமீட்டர் வரை சுவர் நீண்டது. 

பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்பதே இதன் வலிமைக்கு சான்று. 

இது கொரிய எல்லையில் இருந்து கோபி பாலைவனம் வரை 6400 கிலோமீட்டர் நீண்டு செல்கிறது. இந்தக் கட்டட பணியின்போது சுமார் 30 லட்சம் பணியாளர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் இறந்தவர்களை தரைத்தளத்திலும் சுவர்களிலும் புதைத்து மீண்டும் கட்டினார்கள். எனவே இது உலகின் மிக நீண்ட கல்லறை என கூறலாம். 

இதையும் படியுங்கள்:
பாலே முதல் பெல்லி டான்ஸ் வரை: மேற்கத்திய நடனக் கலைகளின் வர்ணஜாலம்!
great-wall-of-china

சுவர்களிடையே காவல் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதைக்காண சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த சுவர்கள் மலைகள் பாலைவனங்கள் பீடபூமிகள் புல்வெளிகள் என பல பகுதிகளை கடந்து செல்கிறது. 

அந்த காலத்தில் அரிசி கஞ்சி உடன் எலுமிச்சை கலவை சுண்ணாம்பு கலவை இவற்றை கொண்டு கற்களை இணைத்தார்கள். இது பலமாக ஒட்டிக் கொள்ளுமாம். இருபதாம் நூற்றாண்டில்தான் மிகவும் பிரபலம் அடைய தொடங்கியது சுவரின் மிக உயரமான பகுதி பெய்ஜிங்கில் உள்ளது. இதன் உயரம் 5333 அடி. பல தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். 

இந்தக் கட்டிட வேலைகளின்போது இறந்தவர்களை சுவர்களிலும் தரைத்தளங்களிலும் புதைத்துவிட்டார்கள். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஜிம் சாங் பகுதிதான் 2500 மெயில் நீளம் கொண்ட பகுதியாகும். இங்குள்ள சுவரின் உயரம் 25 அடி பாதையின் அகலம் 20 அடி 2000 ஆண்டுகள் பழமையானது.  இதன் மூலம் முக்கிய பகுதிகள் வடக்கு கடவை மேற்கு கடவை ஷான்ஹான் கடவை ஆகும். 

ஜிங் சான் பகுதியில் 67 காவல் கோபுரங்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் 980 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது சுமார் 3615 அடி தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் சிறுவர்கள் விளையாடும் இடங்களாகவும் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. சில பகுதிகளில் இடிக்கப்பட்டுள்ளது.

2003 வரை சீன அரசாங்கம் இதை பராமரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1500 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொன்மை மாறாமல் உள்ளது. அரிசி கஞ்சி எலுமிச்சை சாறு சுண்ணாம்பு கலந்து கட்டியதால் இன்றும் உறுதியுடன் காணப்படுகிறது. அதனால்தான் இந்த சுவர்களில் இன்றும் காளான் பூஞ்சை எதுவும் ஏற்படுவதில்லை. இதன் உறுதித்தன்மை நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
மேட்ரியோஷ்கா பொம்மைகள், ரஷ்ய பாலே, வெங்காயக் கோபுரங்கள்: ரஷ்யாவின் காலத்தால் அழியாத கலை மரபு!
great-wall-of-china

வீட்டுக்கு ஒருவர் இந்த பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்.  அதாவது மக்கள் தொகையில் சுமார் 70% பேர் இந்த பணியில் ஈடுபட்டனர். சுவரின் இடைவெளிகளில் வீரர்கள் தங்குவதற்கும் ஆயுதம் வைப்பதற்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் புகை போட்டு மற்ற வீரர்களை அவ்வப்போது எச்சரிக்கை செய்வார்கள். தற்போது பெய்ஜிங்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைம தாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடைசியில் உலக அதிசயமான இந்த இடத்தை உலகின் மிகப்பெரிய கல்லறையாக மாற்றிய பெருமை சீனாவிற்கு சேரும்.

logo
Kalki Online
kalkionline.com