பாலே முதல் பெல்லி டான்ஸ் வரை: மேற்கத்திய நடனக் கலைகளின் வர்ணஜாலம்!

Dance art
Dance art
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மேற்கத்திய நடனம் (Western Dance) என்பது பல்வேறு கலாச்சார மற்றும் நவீன பாணிகளின் தொகுப்பாகும். பாலே, ஹிப்-ஹாப், சல்சா, ஜாஸ் மற்றும் பிரேக் டான்ஸ் ஆகியவை மிகவும் பிரபலமான மேற்கத்திய நடன வகைகளாகும். இவை முறையே நுணுக்கமான அசைவுகள், தெரு நடனம், லத்தீன்-அமெரிக்க இசை, உடலின் நெகிழ்வுத் தன்மை மற்றும் உடற்பயிற்சி சார்ந்த அசைவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

முக்கிய மேற்கத்திய நடன வகைகள்:

பாலே(Ballet):

15 ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றிய இந்த நடனம், மென்மையான இசைக்கு கால் விரல் நுனியில்(Pointe work) ஆடும் மிகவும் நுணுக்கமான மரபு நடனமாகும். மேற்கத்திய கலாச்சாரத்தின் முக்கிய கலை வடிவமாகக் கருதப்படும் இது வெறும் நடனம் மட்டுமல்ல, ஒரு ஆடல் நாடகமாக(dance drama) கதை, இசை மற்றும் காட்சிகளுடன் நிகழ்த்தப்படுகிறது. பாலே நடனக் கலைஞர்களுக்கு பல வருட கடுமையான முறையான பயிற்சி தேவைப்படுகிறது. கிளாசிக்கல் பாலே மற்றும் நவீன பாலை என இதில் இரு முக்கிய வகைகள் உள்ளன.

ஹிப்-ஹாப் (Hip-Hop):

அமெரிக்காவின் தெருக்களில் உருவான இந்த நடனம், ஹிப்-ஹாப் இசைக்கு உடலை வளைத்து, துள்ளலாக ஆடப்படும். சுறுசுறுப்பான மற்றும் தனித்துவமான அசைவுகளைக் கொண்ட இந்த பிரபலமான மேற்கத்திய நடனம் பிரேக்கிங் (breaking), லாக்கிங் (locking), பாப்பிங் (popping) போன்ற பல்வேறு பாணிகளை உள்ளடக்கியது. ஹிப்-ஹாப் இசைக்கு நடனமாடப்படும் இந்த வகை, 80களில் பரவலாகி, தற்பொழுது உலகெங்கிலும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடனக்கலையாக உள்ளது.

சல்சா (Salsa):

கியூபா மற்றும் போர்ட்டோ ரிக்கோவில் தோன்றிய லத்தின் நடனம் இது. இடுப்பு மற்றும் பாதங்களின் அசைவுகளுக்கு முக்கியத்துவம் தந்து, ஜோடியாக ஆடப்படும் நடனம். 1960-70களில் நியூயார்க்கில் மாம்போ, ரும்பா மற்றும் ஜாஸ் இசையின் கலவையால் உருவானது. உலகளவில் பிரபலமான சல்சா இசை வேகமான தாளம் (tempo) கொண்டது. சல்சா நடனம் உடல் உறுதிக்கு மட்டுமல்ல, மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் ஒரு அற்புதமான கலை வடிவமாகும்.

இதையும் படியுங்கள்:
நிஜ யானையா? இயந்திரமா? கேரளக் கோவில்களில் வலம் வரும் 'ரோபோ' யானை!
Dance art

பிரேக் டான்ஸ் (Break Dancing):

மைக்கேல் ஜாக்சனால் பிரபலமடைந்த நடனம் இது. ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் அக்ரோபாட்டிக் அசைவுகள் நிறைந்த அதிரடி நடனம் இது. 1970களின் முற்பகுதியில் நியூயார்க் நகரத்தின் பிராங்க்ஸ் பரோவில் உருவானது. இது முக்கியமாக 3 வகை அசைவுகளைக் கொண்டது. டாப் ராக் (நின்று ஆடுவது), டவுன் ராக்(தரையில் ஆடுவது) மற்றும் பவர் மூவ்ஸ் (சுழற்சி அசைவுகள்). ஹிப்-ஹாப், ஃபங்க் மற்றும் பிரேக் பீட் இசையுடன் இந்த நடனம் ஆடப்படுகிறது.

ஜாஸ் (Jazz Dance):

உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தனித்துவமான உடல் அசைவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆற்றல்மிக்க நடனம். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆப்பிரிக்க-அமெரிக்க சமூகத்தினரால் உருவாக்கப்பட்ட ஒரு துடிப்பான மேற்கத்திய நடன பாணியாகும். உடலின் மற்ற பகுதிகளை அசைக்காமல் தலை, தோள்கள் அல்லது இடுப்பு போன்ற ஒரு பகுதியை மட்டும் தனியாக அசைக்கும் நுட்பம் மிகுந்தது. இது கலைஞர்கள் தங்களின் சொந்த பாணியையும் ஆளுமையையும் நடனத்தில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

பால்ரூம் நடனம் (Ballroom Dance):

பால்ரூம் நடனம் என்பது ஜோடியாக ஆடப்படும் ஒரு நேர்த்தியான மேற்கத்திய சமூக நடனமாகும். இது சர்வதேச மற்றும் அமெரிக்க பாணிகளில், வால்ட்ஸ்(Waltz), டாங்கோ(Tango), சாம்பா, ஜைவ் போன்ற பல்வேறு நடன வகைகளை உள்ளடக்கியது. இது பொதுவாக திருமணங்கள், போட்டிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் ஆடப்படுகிறது.

பெல்லி டான்ஸ் (Belly Dance):

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் தோன்றிய பழமையான, இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளை மையமாகக் கொண்ட ஒரு கலைநயம் மிக்க நடனமாகும். தொடக்கத்தில் இது கருவுறுதல் சடங்குகள், சமூக கொண்டாட்டங்கள் மற்றும் பிறப்புகளின் போது பெண்களால் ஆடப்பட்ட நாட்டுப்புற நடனமாக இருந்தது. 19-20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலக கண்காட்சிகள் மூலம் மேற்கத்திய உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது. வயிற்றுப் பகுதி அசைவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நடன வகை. நடனக் கலைஞர்கள் தங்கள் அசைவுகளை வலியுறுத்த 'பெட்லா' எனப்படும் சிறப்பான உடைகளை அணிகின்றனர்.

டிஸ்கோ (Disco):

70களில் பிரபலமான, வேகமான இசைக்கு ஆடப்படும் நடனம். பன்கு(Funk), பாப் (Pop) மற்றும் ராக் (Rock) இசையின் கலவையால் உருவானது. துள்ளலான, ஃப்ரீஸ்டைல் நடனமான இது டிஸ்கோ மியூசிக், ஸ்ட்ரோப் விளக்குகள் மற்றும் நடன கிளப்புகளில் ஆடப்படும். இது உடலை ஆரோக்கியமாக்கும் சிறந்த இதய பயிற்சி. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தசைகளை வலுப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கக் கடிய நடனமிது.

Dance
Dance art

டாப் டான்ஸ் (Tap Dance):

டாப் டான்ஸ் என்பது பாதணிகளின் குதிகால் மற்றும் விரல் பகுதிகளில் உலோகத் தகடுகளைப் பொருத்தி, தாள லயத்துடன் தரையில் தட்டி ஒலியெழுப்பி ஆடும் ஒரு தனித்துவமான அமெரிக்க மேற்கத்திய நடனமாகும். இசையைவிட பாதங்களின் ஒலியில் அதிக கவனம் செலுத்தும் நடன பாணி இது.

இவை தவிர போல்கா (Polka), லம்பாடா (Lambada), லிம்போ(Limbo) போன்ற பல்வேறு வகைகளும் மேற்கத்திய நடன பாணிகளில் அடங்கும்.

logo
Kalki Online
kalkionline.com