

இந்தியா மொழி வழி மாநிலமாக பிரிந்து இருந்தாலும் ஒரே பண்பாடு அல்லது கலாச்சாரம் நம்மை ஒற்றுமைப் படுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இதுதான்.
பிரிட்டிஷ் நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்திய மக்கள் இடையே மோதலை உருவாக்கியது. ‘டிவைட் & ரூல்’தான் அதன் இலக்கு, நோக்கம் எல்லாம். பிரிட்டிஷ் இந்தியாவை சுரண்டியது மட்டும் அல்ல... தனது மதம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பரப்புவதுதான் அதன் சுயநலம்.
ரயில் விட்டார்கள். தபால் தந்தித் துறை ஆரம்பித்தார்கள். ரோடு போட்டார்கள். இது எல்லாம் இந்தியர்களுக்காக இல்லை. 100% சுயநலம்.
கல்வி அறிமுகம்கூட அவர்களுக்குச் சேவை செய்யும் வர்க்கத்தை உருவாக்கத்தான். இதை மேக்காலே (Macaulay) ஒப்புகொள்கிறார்.
இந்தியாவில் இந்து - முஸ்லிம் இடையே தீராத பகையை ஏற்படுத்தினார்கள். இதன் உச்சிதான் 1905ல் வங்காளப் பிரிவினை. இந்து - முஸ்லிம் மோதல் நாடு முழுவதும் பரப்பி நாட்டைத் துண்டிக்க எல்லா முயற்சிகளும் செய்தனர்.
அவர்கள் நம் மயில் தங்க சிம்மாசனம் மற்றும் கோஹினூர் வைரத்தை கடத்திச் சென்றார்கள்.
இதற்கு முன் சில நூற்றாண்டில் மொகலாயர் ஆட்சி. அவர்களும் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். சில மொகலாயர் இந்து கோயில்களை அடித்து நொறுக்கினர். அடித்தட்டு மக்களிடம் வரி வசூல் செய்து சுரண்டினார்கள். போர் என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்.
பிரிட்டிஷ் செய்த இந்து - முஸ்லிம் பிரிவினை, கலவரங்களை உருவாக வைத்தது. சுதந்திரம் கிடைத்தபோது பாகிஸ்தான் தனி நாடாக மாறியது. இந்து - முஸ்லிம் கலவரம் வெடித்தது. உயிர்கள் பல போனது. இந்திய சுதந்திரப் போராட்டம் நடத்தி சுதந்திரம் கிடைத்தும் அதை காந்தி விரும்பவில்லை. நவகாளியில் கலவரம் பயங்கரமாக இருந்தது. காந்தி சுதந்திர தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து நவகாளியில் அமைதி ஏற்பட நடந்தே போனார்.
பிரிட்டிஷ் - ஜின்னா கூட்டு இந்தியாவை துண்டாக்கியது. இது காந்திக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
பாகிஸ்தான் போர் தொடுத்தது. காஷ்மீரில் ஒரு பகுதியை படை வைத்து பிடித்து அதை ‘ஆசாத் காஷ்மீர்...’ அதாவது விடுதலை செய்யப்பட்ட பிரதேசம் என்றது.
வல்லபாய் பட்டேல் இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றார். நேருவுக்கு இதில் விருப்பம் இல்லை. எனவே அவர்கள் காந்தியை கேட்டார்கள். அதற்கு காந்தி “இதை முன்பே செய்து இருக்க வேண்டும்..!” என்றார்.
அமைதி, நேசம், அன்பு, சேவை, தானம், தியானம், தியாகம், அகிம்சை, பொறுமை, கடவுள் பக்தி என தங்களுக்காக ஒரு தனி கலாச்சாரத்தை கடைப்பிடித்தார்கள். அவர்களது கலாச்சாரம் யார் அழிக்க முயன்றாலும் முடியாமலே போனது. இந்தியர்கள் ரத்தத்தில் தேசப்பற்று ஒடியது.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை என்பது இந்தியாவின் கலாச்சாரம். இந்தியாவின் கலாச்சாரம் கிட்டத்தட்ட தனித்துவம் ஆனது.
எந்தக் கொம்பன் வந்தாலும் இந்தியக் கலாச்சாரத்தில் கை வைக்கமுடியாது.
வேற்றுமையில் ஒற்றுமை… !
இதை யாரும் மாற்றமுடியாது.
இந்தியா இந்தியாதான்..!