சமோசா முதல் ஜிலேபி வரை… இந்திய உணவுகளுக்கு பின்னால் இருக்கும் ஈரானிய வரலாறு!

historical-and-cultural-ties
historical-and-cultural-ties
Published on

ண்டைய இந்தியாவிற்கு வெகுதொலைவில் இருந்த கிரீஸ், இத்தாலி, எகிப்து நாட்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்தபோது, அப்போதைய அண்டை நாடான ஈரானுடன் எவ்வாறு தொடர்பு இல்லாமல் இருக்கும்? பண்டைய பாரதம் என்பது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியது என்பதால், அப்போதைய கிழக்குப் பகுதி அண்டை நாடாக பெர்சியா (ஈரான்) இருந்தது. பெர்சியா மிகவும் வளமான கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பெயர் பெற்றது. 

மதரீதியான தாக்கம்: 

அண்டை நாடாக இருந்தாலும் பெர்சியாவின் கண் எப்போதும் மற்ற அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீதே இருந்துள்ளது. அருகில் இருந்தாலும் பாரதத்தின் மீது பெர்சியா முகலாயர்கள் ஆட்சி காலம் வரை படையெடுத்ததில்லை. ஆயினும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக இந்தியாவுடன் மிகவும் ஆழமான பிணைப்புகளை பெர்சியா கொண்டிருந்தது. பாரதத்தின் வேதகால கடவுளான அக்னி தேவனையே பெர்சியர்கள் முதன்மையான கடவுளாக கொண்டிருந்தனர். இந்து மதத்தின் அடியை ஒற்றியே பார்சிக்களின் ஜெராஸ்டிரிய மதம் இருந்தது.

உணவில் பெர்சியர்கள் பங்கு:

கலாச்சார ரீதியில் ஈரான்– இந்தியா மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. பல வட இந்திய உணவு வகைகள் ஈரானின் தாக்கத்திலிருந்து உருவானவை. முகலாயர் காலத்தில் பாரசீக சமையல் கலைஞர்கள் உணவு தயாரிப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்த காலகட்டத்தில் இந்தியாவில் உணவு முறைகளில் பல இடங்களில் பாரசீக தாக்கம் புகுந்தது. 

 அரிசி உணவில் மசாலா பொருட்களையும் இறைச்சி யையும் சேர்த்து சமைப்பது, பாரசீக சமையல் கலையில் முக்கியமான ஒன்றாக இருந்தது. புலாவ் மற்றும் பிரியாணி ஆகியவற்றை இவர்களே முகலாய அரசவைக்கு கொண்டு வந்தனர். இந்த பிரியாணியில் இந்தியர்கள் தங்களது மசாலா பொருட்கள் மற்றும் காரத்தினை சேர்த்து இந்தியர்களுக்கு பிடித்தமான வடிவத்திற்கு கொண்டு வந்தனர். ஹைதராபாத் நிஜாம் சமையல் கூடத்தில் இருந்து பிரியாணி உலக அளவில் பிரபலமாக தொடங்கியது.

இதையும் படியுங்கள்:
'வேட்பாளர்' என ஏன் அழைக்கிறோம்? உங்களுக்குத் தெரியுமா?
historical-and-cultural-ties

இந்தியாவின் சர்வதேச அடையாளமாக இருக்கும் சமோசா கூட ஈரானிய அடிப்படையில் உருவானதுதான். 14 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர் சமையல் கூடத்தில் இறைச்சிகளை உள்ளே திணித்து சம்புசா என்ற ஈரானிய உணவு தயாரிக்கப்பட்டது. பின்னர் அது ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளுக்கு பரவும்போது இறைச்சிக்கு பதில் உருளைக் கிழங்கு, வெங்காயம், சில மசாலாக்கள் சேர்க்கப்பட்டு சுவை மிகுந்ததாக மாற்றப்பட்டதல் சர்வதேச புகழ் பெற்றுள்ளது. ஜிலேபி உள்ளிட்ட சில இனிப்புகள் கூட அவர்களே இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்.

தந்தூரி ரொட்டி சுடும் நுட்பமும் ஈரானிலிருந்து இந்தியாவிற்குள் புகுந்துள்ளது. நான், கமிரி ரொட்டி, ஷீர்மாள் மற்றும் பக்கர்கானி ரொட்டிகள் அனைத்தும் ஈரான் தாக்கம்தான். பாதம் பால், ரோஸ் மில்க், சர்பத் ஆகிய பானங்கள் மற்றும் குங்குமப் பூ கலந்து சமைக்கும் உணவு முறைகள் போன்றவையும் இந்திய உணவுகளில் கலந்துவிட்டன.

கட்டிடக் கலையில் பாரசீக தாக்கம்:

முகலாயர் காலத்தில் பாரசீக கட்டிடக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலும் , ஹுமாயூன் கல்லறையும் பாரசீக கட்டிடக் கலைஞர்களால் கட்டப்பட்டவை. குவிமாடம் போன்ற தோற்றமும்  சலவை கற்களில் மலர்கள் , செடிகள் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளும் பாரசீகக் கலையின் உச்சத்தை இந்தியாவில் பிரதிபலிக்கிறது. இதன் தாக்கத்தை டெல்லி, ஆக்ரா, லக்னோ போன்ற நகரங்களில் உள்ள பழமையான கட்டிடங்களில் காணலாம்.

உடைகளில் பாரசீக தாக்கம்: 

காஷ்மீரிகள் முகலாயர்களின் ஆட்சி காலத்தில் , ஈரான் வேலைப்பாடுகளை முன்மாதிரியாக கொண்ட கம்பளங்கள், தரைவிரிப்புகள், சால்வைகள், குர்தா, பைஜாமா போன்ற உடைகளை தயாரிக்கக் கற்றுக் கொண்டனர். இன்றும் கூட ஈரான் இது போன்ற வேலைப்பாடுகள் மிகுந்த ஆடைகளுக்கு பேர் போனதாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்த இறைமை: உகாண்டாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்!
historical-and-cultural-ties

மொழிகளில் தாக்கம்: 

காஷ்மீரி, உருது, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பெர்சிய மொழியின் வார்த்தைகள் பல கலந்துள்ளன. முகலாயர்கள் பெரும்பாலும் பாரசீக மொழியை பேசினர், தங்களது இலக்கியங்கள், கவிதைகளை பாரசீக மொழியில் எழுதினர். அதேநேரம் பாரசீக மொழியில் இந்திய மொழியான சமஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com