
இந்தியாவில் சில அரசர்களைப் பற்றிய செய்திகள் விசித்திரமாக இருக்கும். அப்படி ஒருவர்தான் அதிசய பூபேந்தர் சிங் ராஜா. பாட்டியாலா நெக்லஸ் என்று அழைக்கப்படும் நெக்லசை பூபேந்தர் சிங் வைத்திருந்தார் என்ற செய்தி பல வரலாற்றுப் புத்தகங்களில் இருக்கும்.
இது குறித்து ஒரு கதை உள்ளது. இந்த பெரிய நெக்லஸ் 30 மில்லியன் டாலர் மதிப்பு பெற்றது. இந்திய மதிப்பு 252 கோடியாகும். இந்த நெக்லசின் வைரங்கள் 1888ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு மகாராஜாவால் வாங்கப்பட்டது. பின்னர் ராஜா வைர நெக்லஸ் உருவாக்கினார். அரசு கருவூலத்தில் துரதிஷ்டவசமாக காணாமல் போனது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு அது ஏலத்தின் போது வெளிவந்தது. அப்போது அதில் ஒரு வைரத்தைத் தவிர மற்ற அனைத்து வைரங்களும் பறிக்கப்பட்டிருந்தன. லண்டனில் உள்ள கார்டியர் ஜுவெல்லர்ஸ் அந்த ஏலத்தில் எஞ்சியிருந்த ஒரு வைரத்தை வாங்கியது. அது இன்றும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
1925 ம் ஆண்டு பாட்டியாலா மன்னர் பூபேந்தர் சிங்கால் வாங்கப்பட்ட இது, அந்த காலக்கட்டத்தில் மிக விலையுயர்ந்ததாகும். இதில் 2930 வைரங்கள் உள்ளன. 23465 கார்ட் மஞ்சள் வைரம் அதன் மையப் பொருளாக இருந்தது. பிளாட்டினத்தால் செய்யப்பட்ட 5 அடுக்கு சங்கிலிகள், 18 முதல் 73 கார்ட் மதிப்புள்ள 7 வைரங்கள் மற்றும் பர்மிய மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு, இதன் மொத்த எடை 1000 காரட்டைத் தாண்டியது. இதுவரை வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நகையாகும்.
பூபேந்தர் சிங் தனது மனைவிக்கு பரிசாக தர நினைத்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் மகன் யாதவிந்திர சிங் அணிந்திருந்தார். 1948 வரை அரசு கருவூலத்தில் இருந்து காணாமல் போய் முப்பது வருடங்களுக்குப் பிறகு ஏலத்தில் வெளிவந்தாலும், இது எப்படி காணாமல் போனது என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
பின்னர் 1998ம் ஆண்டு லண்டனில் உள்ள ஒரு பழங்காலக் கடையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் கற்கள் அகற்றப்பட்டு இருந்தன. கார்டியர் லண்டன் இதை வாங்கி செயற்கை வைரங்களை மாற்றாக மீட்டமைத்தது. மீட்டெடுக்கப்பட்டு பண்பட்ட நெக்லஸாக பாட்டியாலா காப்பகத்தில் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த நெக்லஸ் அதன் அழகியல் பாரம்பரியத்தை வெளியிடுகிறது.