உலகம் அழிந்தாலும், இந்த பெட்டி மட்டும் அழியாது!

History of apocalypse Box
History of apocalypse Box
Published on

இந்த பூமி அதன் தொடக்கத்தில் இருந்தே பல அழிவுகளைச் சந்தித்துள்ளது. இந்த அழிவு என்பது இயற்கை சீற்றங்கள், நோய்கள், போர்கள் அல்லது நம்மால் கற்பனை செய்ய முடியாத வேறு ஏதோ ஒன்றால் ஏற்படலாம். இந்த அழிவின் பயம், மனித சமூகத்தை பல வழிகளில் பாதித்துள்ளது. அதில் மிகவும் பிரபலமான கருத்துக்களில் ஒன்றுதான் ‘அழிவின் பெட்டி (Apocalypse Box)’ என்பது.‌ அதாவது இந்த உலகம் எப்போதெல்லாம் பேரழிவை சந்தித்ததோ, அப்போதெல்லாம் அந்த இடத்தில் ஒரு பெட்டி இருந்தது என சொல்லப்படுகிறது. இது பேரழிவைக் குறிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 

பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய பழங்கால நம்பிக்கைகளுடன் இந்தப் பெட்டி தொடர்புடையதாக இருக்கலாம். பல பழங்குடி சமூகங்கள், பிரபஞ்சம் ஒரு பெரிய சுழற்சியில் இருப்பதாக நம்பினர். இந்த சுழற்சியில் உலகம் பலமுறை உருவாகி அழிக்கப்படும். இந்த அழிவு பெரும்பாலும் கடவுளின் கோபம் அல்லது இயற்கையின் சமநிலையின்மை காரணமாக ஏற்படுவதாகக் கருதப்பட்டது. 

பழங்கால நாகரிகங்களில்: பண்டைய எகிப்து, சுமேரியா, மாயன் நாகரிகங்கள் போன்ற பழங்கால நாகரிகங்களில், அழிவு மற்றும் புத்துயிர்ப்பு பற்றிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக இருந்தன. இந்த நாகரிகங்கள் பெரும் வெள்ளம் தீ, இருள், போன்ற பல்வேறு வடிவங்களில் உலகின் அழிவு பற்றிய கதைகளைப் பதிவு செய்துள்ளன. இந்த கதைகளில் சில நேரங்களில் ஒரு சில, அல்லது ஒரு குறிப்பிட்ட பொருள் மட்டும் அழிவிலிருந்து தப்பித்து புதிய உலகத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது. அதுதான் இந்த அழிவின் பெட்டி. 

மதங்களில்: பல்வேறு மதங்களில் உலகின் அழிவு மற்றும் புதிய உலகின் பிறப்பு பற்றிய கருத்துக்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் யூத மதம் போன்ற மதங்களில், உலகின் இறுதி நாள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மதங்களில் இறுதி நாளில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும், கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது. 

தத்துவத்தில்: தத்துவவாதிகள் உலகின் தன்மை, மனித குலத்தின் இலக்கு பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். சில தத்துவவாதிகள் உலகம் ஒரு சுழற்சியில் இருப்பதாகவும், மனிதகுலம் பலமுறை உருவாக்கி அழிக்கப்படுவதாகவும் நம்பினர். மற்றவர்கள் உலகம் ஒரு முறை மட்டுமே உருவாகி, ஒரு முறை முற்றிலுமாக அளிக்கப்படும் என நம்புகின்றனர். 

கலையில்: கலைஞர்கள், அழிவு என்ற கருத்தை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். ஓவியம், சிற்பம், இலக்கியம் மற்றும் திரைப்படம் போன்ற கலை வடிவங்களில் அழிவின் பயம், துக்கம் மற்றும் நம்பிக்கை போன்ற உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

இதையும் படியுங்கள்:
உலகின் வயதான முதலை… 10 ஆயிரம் குழந்தைகளுக்கு அப்பா… ஒருகாலத்தில் லியோ… இன்று பார்த்திபன்!
History of apocalypse Box

அறிவியலில்: அறிவியாளர்கள் உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு காரணிகளை ஆராய்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றம், அணு ஆயுதங்கள், விண்கற்கள் போன்ற காரணிகள் உலகின் அழிவுக்கு வழிவகுக்கும் என அறிவியல் ரீதியாகக் கருதப்படுகிறது. 

இன்றைய உலகில் அழிவின் பெட்டி என்ற கருத்து பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. காலநிலை மாற்றம், அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள் போன்ற காரணிகள், எதிர்கால மனித குலத்திற்கு பேரழிவுகளை ஏற்படுத்தும் அச்சம் அதிகரித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இன்றைய உலகிற்கு பொருந்தும் படியாகவே உள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com