ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும் போது கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
பொதுவாக பனி காலத்திலிருந்து வெயில் காலம் மாறுவதை வசந்த காலம் என்பர். இந்த வசந்த காலத்தில் நச்சுயிரி சார்ந்த காய்ச்சல் சளியும் ஏற்படும். இதனை எதிர்கொள்ளும் விதமாக, ஹோலி பண்டிகை அன்று இயற்கையான வண்ணம் நிறைந்த தூள்களை தூவி விளையாடப்படுகின்றது.
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையண்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஹோலி பண்டிகையின்போது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.
இந்து மாதமான பால்குனி மாத்தில் பௌர்ணமி நாளில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலி உருவான கதை:
பண்டைய இந்து புராணத்தின் படி, ஹிரண்யகசிபு என்கிற அரக்க மன்னன் இருந்தான். ஹிரண்யகசிபு நாட்டில் உள்ள எல்லோரையும் 'நான் தான் கடவுள், என்னைத் தான் வணங்க வேண்டும்' என்று வற்புறுத்தினான். மேலும் அவன் ஒரு தீவிர சிவபக்தன். ஒரு முறை கடுமையான தவம் செய்து சிவனிடம் தன்னை மனிதனப்பிறவியாலும் விலங்கினாலும் அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்டான். சிவபெருமானும் அவனுக்கு அந்த வரத்தைத் தந்து விட்டார்.
அவனுக்கு பிரஹலாதன் என்ற ஒரு மகன் இருந்தான். பிரஹலாதனோ ஒரு விஷ்ணு பக்தன். எப்போதும் அவரையே வணங்குவான். மன்னன் எத்தனை முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஆகவே ஹிரண்யகசிபு தனது மகன் பிரஹ்லாதனைக் கொல்ல தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினார். நெருப்புக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஹோலிகா, பிரஹ்லாதனை ஒரு சிதையில் எரிக்க முயன்றார். மன்னன் ஹோலிகாவை உட்கார வைத்து அவள் மடியில் பரஹ்லாதனை அமர்த்தினார். பிறகு நெருப்பை மூட்டினார். நெருப்பில் இருப்பினும், விஷ்ணுவின் மீதான பக்தி காரணமாக ஹோலிகாவின் எதிர்ப்பு சக்தி பிரஹ்லாதனுக்கு மாற்றப்பட்டது, ஹோலிகா எரிக்கப்பட்டாள். பல இடங்களில், ஹோலிக்கு முந்தைய இரவில், விஷ்ணுவின் பாதுகாப்பு சக்தியைக் கொண்டாட, ஹோலிகா தகனம் அல்லது choti ஹோலி என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நெருப்பு மூட்டப்படுவதற்கான காரணம் இது தான்.
பிறகு மனித-சிங்க நரசிம்ம அவதாரத்தில் விஷ்ணு பகவான் ஹிரண்யகசிபுவைக் கொன்றார். இது தீமையை நன்மை வென்றதாக உறுதிப்படுத்துகிறது.
பல இடங்களில், ஹோலிக்கு முந்தைய இரவில், விஷ்ணுவின் பாதுகாப்பு சக்தியைக் கொண்டாட, ஹோலிகா தகனம் அல்லது choti ஹோலி என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நெருப்பு மூட்டப்படுவதற்கான காரணம் இது தான்.
ஹோலிக்கு முதல் நாள் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.
ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்பி தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
ஹோலிக்கு இன்னொரு கதையும் இருக்கிறது.
புராணத்தின் படி, கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது ஒரு அரக்கனின் விஷப் பாலை குடித்ததால், அவர் நீல நிற சருமம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் ராதாவை காதலித்தார், ஆனால் அவரது நீல நிற சருமத்தைக் கண்டு அவள் தன்னை காதலிக்க மாட்டாளோ என்று அவர் பயந்தார் - ஆனால் ராதாவோ கிருஷ்ணரை தனது சருமத்துக்கு நீல வண்ணம் பூச அனுமதித்தார். இதனால் அவர்கள் உண்மையான ஜோடியாக மாறினர். ஹோலி பண்டிகையின் போது, கிருஷ்ணர் மற்றும் ராதாவின் நினைவாக ஒருவருக்கொருவர் வண்ணம் பூசுகிறார்கள்.
இந்த வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாகப் விற்று வருகின்றனர்.
இதனால் சுற்றுசுழல், உடல்நலத்திற்கு கேடு ஏற்படுகிறது. அதனால் மக்கள் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாடுங்கள்.
இனிப்புகள் மற்றும் சிறப்பு உணவுகள்:
ஹோலி பண்டிகை அன்று குஜியா, மால்புவா மற்றும் தண்டாய் (ஒரு மசாலா பால் பானம்) போன்ற பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.