உக்ரைன் ராணுவத்தில் குவியும் இளைஞர்கள்… வருடம் ரூ21 லட்சம் சம்பளம்!

ukraine
ukraine
Published on

உக்ரைன் ராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் சேர்ந்து வருகின்றனர் என்றும், அவர்களின் வருட சம்பளம் 21 லட்சம் என்றும் தற்போதைய செய்திகள் கூறுகின்றன.

ரஷ்யா உக்ரைன் போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது போர் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலைமை வரும். அந்தவகையில் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது.

மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியதை தொடர்ந்து பின் நேரடியாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் போர் நிறுத்த முயற்சிகளை எடுக்க ரஷ்யா மற்றும் அமேரிக்கா இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேசினர். அப்போது இரு நாட்டு அதிபருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் எந்த வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

இதன்பின்னர் அமெரிக்கா ஆயுத உதவியை உக்ரைனுக்கு நிறுத்தியது.

இதனால், உக்ரைனை அமெரிக்கா கைவிட்டுவிட நினைக்கிறது என்று சொன்னால்கூட சரிதான்.

உக்ரைன் தற்போது தன்னை தானே தற்காத்துக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கும் உடன்பட வேண்டும்.

ஆனால், உக்ரைன் தொடர்ந்து தன்னுடைய ராணுவத்தை வலிமைமிக்கத்தாக ஆக்க முயற்சித்து வருகிறது. சுமார் 18 முதல் 24 வயதுடைய ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

மேலும், வயது வரம்பை 27லிருந்து 25ஆக குறைத்தது. ஒருவேளை யாரும் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்தால், அவர்களுக்கு அந்த அரசு அபராதமும் விதித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஏன் செவ்வாய் கிரகத்தை நோக்கி உலகின் கவனம் திரும்பி உள்ளது? இதில் நமக்கென்ன பயன்?
ukraine

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com