அமெரிக்கா மக்களின் பாரம்பரிய பொம்மைளான 'ஹோப்பி கச்சினா' பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Hopi kachina dolls
Hopi kachina dollsImge credit: LiveAuctioneers

'ஹோப்பி கச்சினா' எனப்படும் பொம்மைகள், அமெரிக்காவின் வடகிழக்கு அரிசோனாவில் பூர்வீகமாக வசிக்கும்  அமெரிக்க 'ஹோப்பி' இன மக்கள் உருவாக்கிய பாரம்பரிய பொம்மைகள் ஆகும். இந்த பாரம்பரிய கைவினை பொம்மைகள் ஹோப்பி இன மக்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த பொம்மைகள் உருவாக்கப்பட்டன.

அந்தவகையில் 1500ம் ஆண்டுகளின்போது புதுப்பிக்கப்பட்ட பொம்மைகளின் வடிவங்களையே இன்று வரை அந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த பதிவில் அமெரிக்க ஹோப்பி இன மக்கள் தயாரித்த இந்த ஹோப்பி பொம்மைகளின் சுவாரசியமான சில குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

கச்சினாக்கள் என்பவர்கள் ஆன்மீக மனிதர்கள் அல்லது மத நம்பிக்கைக் கொண்டவர்கள் ஆவார்கள். இந்த கச்சினாக்கள், ஹோப்பி மக்களுக்கும் ஆன்மீகத்திற்கு இடையில் ஒரு பாலமாக விளங்குபவர்கள் என்பது ஹோப்பி மக்களின் நம்பிக்கை. இந்த பொம்மைகளின் உருவம் ஆன்மீகவாதிகளின் உருவம் போலத்தான் செய்யப்படும்.

ஒவ்வொரு கச்சினா பொம்மைகளும் ஒரு குறிப்பிட்ட கச்சினாவின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது. அதன்படி பல வகையான கச்சினாக்கள் உள்ளன. ஒவ்வொரு கச்சினாவிற்கும் ஒவ்வொரு கதைகள், குணாதிசயங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளன. மேலும் இந்த பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுப்பதால் அவர்கள் சிறு வயதிலேயே ஹோப்பி மதம் மற்றும் கலாச்சரத்தைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார்கள்.

கச்சினா விழாக்கள் உட்பட பல்வேறு ஹோப்பி விழாக்கள் ஆண்டுதோறும் இங்கு நடைபெற்று வருகின்றது. அந்த விழாக்களில் ஆண்கள் கச்சினா பொம்மைகளை முகமூடி போல் அணிந்துக்கொண்டு அந்த கச்சினா ஆன்மாவாகவே மாறி, அவர்களுடைய அனுபவங்கள், மதம் மற்றும் கலாச்சாரத்தை எப்படி காப்பாற்றினார்கள்? கடவுளை எப்படி வழிப்பட்டார்கள்? போன்றவற்றை உரக்க கத்தி கூறுவார்களாம்.

இந்த கச்சினா பொம்மைகள், திறமையான கச்சினா கைவினைக்கலைஞர்களால் நுட்பமாக செதுக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்படுகின்றது. இந்த பொம்மைகளை பொதுவாக பருத்தி மர வேர்கள் பயன்படுத்தியே செய்கின்றனர். ஒவ்வொரு கலைஞர்களும் தங்கள் திறமைகளின் அடிப்படையில் வேறுப்படுத்தி செய்தாலும், கதைகள் மட்டும் மாறுவதே கிடையாது.

இதையும் படியுங்கள்:
மரப்பாச்சி பொம்மைகளின் மகத்துவம் என்ன?
Hopi kachina dolls

ஹோப்பி கச்சினா பொம்மைகள் ஹோப்பி மக்களைத் தாண்டி வெளி உலகிலும் பிரபலமாகி வருகின்றது. கலை மற்றும் வரலாற்றுப் பிரியர்கள் அதனை வாங்கி வீட்டு அலங்காரத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை அலங்காரத்திற்கு மட்டும் வாங்கி வைப்பதோடு, கச்சினாவின் கதைகளை அறிந்து, கலாச்சார சூழலின் மரியாதை மற்றும் புரிதலுடன் சேகரிப்பது நல்லது. ஏனெனில் சில பொம்மைகள் விற்பனைக்காக செய்யப்பட்டாலும் சில பொம்மைகள் புனிதத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com