ஒரு மொழி எப்படி அழிகிறது?

language
Language
Published on

மொழி அழிதலும் ஒரு வகையான வன்முறை தான். ஒருவரின் மொழியை அழிக்கும் போது அடுத்ததாக அவனது அடையாளமும் அழிகிறது. பிறகு ஒற்றுமையின்றி அந்த சமூகமும் அழிகிறது. ஆப்பிரிக்கர்கள் தங்கள் மொழியை மறந்ததால் சுயத்தையும் ஒற்றுமையும் இழந்து எளிதில் அடிமைகளாயினர்.

யூதர்கள் தங்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க முனைந்த போது, 2000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன தங்கள் ஹீப்ரு மொழியை மீட்டு அனைவரும் கற்றுக் கொண்டனர். மொழி தான் அவர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீனர்களின் பூர்வமொழி கிரேக்கம் அதை மறந்து அரேபிய மொழியை ஏற்றதால் அவர்கள் அரேபியர்கள் அடையாளத்துக்குள் சென்று விட்டனர். அவர்கள் ஐரோப்பிய அடையாளத்தோடு இருந்திருந்தால் இஸ்ரேல் நாடு மீண்டும் உருவாகி இருக்க முடியாது.

1961 இல் பப்புவா நியூகினியாவில் உலகில் அதிகமாக 1100 மொழிகள் பேசப்பட்டது. இன்று அதில் பாதிக்கு மேல் அழிந்து விட்டன. மலாய் மொழி பரவல் இந்தோனேசியாவில் நிறைய மொழிகளை அழித்து விட்டது. ஆப்பிரிக்க கண்டங்களில் இங்கிலீஷ் பல்வேறு மொழிகளை அழித்தது. அந்தமான் தீவுகளின் போவா மொழியின் கடைசிப் பேச்சாளரான போவா மூத்த பெண்மணி இறந்தபோது, ​​அந்த மொழியும் அழிந்தது. இதேபோல், சிக்கிமில் கடைசியாக மாஜி பேசுபவர் இறந்தபோது, ​​அந்த மொழியும் இல்லாமல் போனது.

ஒரு மொழியை பேசுபவர்கள் அனைவரும் அந்த மொழியை கைவிடும் போது அது அழிகிறது. பண்டைய இந்தியாவில் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகள் இருந்தது. புதிய மொழிகள் உருவாகி பாலி, பிராகிருதம் முற்றிலும் அழிந்து போனது, சமஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக சுருங்கியது. தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து மலையாள மொழி தோன்றியது. இதன் பின்னர் அந்த பகுதியில் தமிழும் சமஸ்கிருதமும் பேச்சு வழக்கில் மறந்து போனது. ஒரு பகுதியில் இருமொழிகள் ஒரே நேரத்தில் பேசப்பட்டால் அது புதிய மொழியை உருவாக்கி பழைய மொழிகளை அழிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?
language

பாரதத்தில் சுல்தான்களின் ஆட்சியில் அதிகாரிகள் பாரசீக மொழியை பேசினார்கள். அவர்களின் சிப்பாய்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் உள்ளூர் மக்களின் மொழியான கரிபோலி, சமஸ்கிருதம், பாரசீகமொழியையும் சேர்த்து பேசி புதிய ஹிந்துஸ்தானி மொழியை உருவாக்கினர். அதன் பின்னர் பாரசீக மொழியையும் கரிபோலியையும் மறந்தனர். விடுதலை காலம் வரை ஹிந்துஸ்தானி மொழி டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மட்டுமே பேசப்பட்டது. ஹிந்துஸ்தானியில் சமஸ்கிருத ஆதிக்கம் கொண்டது ஹிந்தியாகவும் அரேபிய ஆதிக்கம் கொண்டது உருது மொழியாகவும் பிரிந்தது.

நேதாஜியின் சுதந்திர ஹிந்த் அரசில் ஹிந்துஸ்தானி மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைக்குப் பின் பாகிஸ்தான் உருதுவை தேசிய மொழியாக்கியதால் 60% மக்கள் பேசும் பஞ்சாபி, சிந்தி மொழி அழிந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் ஹிந்தி மறைமுகமாக தேசிய மயமாக்கப்பட்டதால் பஞ்சாபி, மைதிலி, மராட்டி, காஷ்மீரி, போஜ்புரி, பீகாரி, ஒடியா, குஜராத்தி மொழிகளில் இலக்கியங்கள் நின்று போனது, எழுத்து வழக்கும் அரிதாகிக் கொண்டு வருகிறது, பேச்சு வழக்கில் மட்டுமே இன்றும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?
language

இன்று ஹிந்தி விஸ்வரூபம் எடுத்து உலகில் அதிக மக்கள் பேசும் மொழியாக உள்ளது. இறுதியாக தென்னிந்திய மொழிகள் தங்கள் சுயத்தில் சிறிதேனும் நிற்கிறது. தமிழ் மொழி மட்டும் தன் இலக்கிய வளத்தில் குறைவில்லாத வளர்ந்து கொண்டு வரும் இந்தியாவின் ஒரே மொழியாக உள்ளது. அதே வேளையில் தமிழ் மொழியை அழிக்க சில கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் முனைப்பில் உள்ளனர். ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக பீற்றும் பழக்கங்கள் அதிகரித்துள்ளது.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இங்கிலீஷ் தவிர வேறு மொழிகள் சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளிகளிலும் கூட பேச்சு மொழியாக இங்கிலிஷை வளர்க்கின்றனர். தமிழில் ஒரு வார்த்தை பேசினாலும் தண்டனை கொடுப்பதை கட்டாயமாக பின்பற்றி வருகின்றனர். இப்படி ஒரு காலனித்துவ அடிமைத்தனம் தற்போது பரவி வருகிறது. இது தொடர்வது தமிழுக்கு ஆபத்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com