

கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு 1893 - 1974) கோயம்புத்தூரை சேர்ந்த, சுயமாக கற்றுக்கொண்ட இந்திய கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் தொழிலதிபராவார். இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் (1937) மற்றும் மின்சார ரேசர் உள்ளிட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக "இந்தியாவின் எடிசன்" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை:
கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள கலங்கலில் (Kalangal village), தெலுங்கு பேசும் குடும்பத்தில் மார்ச் 23, 1893ல் பிறந்தார். தொடக்கப்பள்ளி கல்வி மட்டுமே பயின்றவர். பாரம்பரிய கல்வியில் ஆர்வம் இல்லாததால் பள்ளியை சீக்கிரமாகவே விட்டுவிட்டார். தினமும் காலையில் தந்தையுடன் வயலில் வேலை செய்தவர், இரவில் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார். பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாதவராக இருந்தாலும் சுயமாக கற்றுக்கொண்டு, இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டார். குறைந்த அளவிலான முறையான கல்வி இருந்தபோதிலும், அவரது கண்டுபிடிப்புகள் ஆட்டோ மொபைல்கள், விவசாயம் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றில் பரவியது.
இவருடைய 16வது வயதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஜி.டி. நாயுடுவின் கிராமத்திற்கு பிரிட்டிஷ் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் ராஜ்ட் மோட்டார் சைக்கிளில் வந்திருக்கிறார். அவருக்கு அந்த மோட்டார் தொழில்நுட்பம் மீது ஆர்வம் பிறந்திருக்கிறது. அதனால் அந்த அதிகாரியுடன் நட்பை வளர்த்துக்கொண்டு அதன் இயக்கம் பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டார்.
ஒரு ரட்ஜ் (Rudge) மோட்டார் சைக்கிள் அவரது இயந்திர ஆர்வத்தைத் தூண்டியது. அவர் கோயம்புத்தூருக்குச் சென்று ஒரு பணியாளராக வேலை பார்த்துக்கொண்டே மெக்கானிக் வேலையையும் கற்றுக் கொண்டார். பணம் சேர்த்து மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி அதன் இயக்கவியலை புரிந்து கொள்வதற்காக அதைப் பிரித்து மாட்டி கற்றுக்கொண்டார். அதன் பலனாக 1920களில் இந்தியாவின் முதல் உள்நாட்டு காரை ஜி.டி. நாயுடு அவர்கள் தயாரித்தார்.
முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்:
மின் விசிறியின் வடிவமைப்பை மேம்படுத்தி, அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தினார். பவர்-டிரைவ் லூம் (Power-driven Loom) மற்றும் உள் எரி பொறி (Internal Combustion Engine) ஆகியவற்றில் மேம்பாடுகளைச் செய்தார்.
விவசாயம் மற்றும் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர். விவசாய கருவிகள் மற்றும் இயந்திரங்களை மேம்படுத்துவதில் பணியாற்றினார்.
மிக மெல்லிய ரேடியோ, கேமராவுக்கான தூர சரிசெய்யும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி (Fruit juice extractor) போன்ற பல பயனுள்ள பொருட்களைக் கண்டுபிடித்தார்.
திருப்பூரில் பருத்தி ஆலைகளை நிறுவி, தொழில் முனைவில் சிறந்து விளங்கினார்.
ஒரு பக்கம் கார் தயாரிப்பு என்றால் மற்றொரு பக்கம் இன்று உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியவரும் இவர்தான்.
உருளைக்கிழங்கு தோல் எடுக்கும் கருவி, நிலக்கடலை உடைக்கும் இயந்திரம், எளிதாக கையாளக் கூடிய கரும்பு அரைக்கும் இயந்திரம், ஷேவிங் ரேசர், பிளேடு, சுவர் கடிகாரம், ரேடியோகிராம், தமிழ் டயல் ரேடியோ, எலக்ட்ரிக் மோட்டார், ஆட்டோமேட்டிக் டிக்கெட் மிஷின் எனப் பல துறைகளைச் சேர்ந்த பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.
சர் ஆர்தர் ஹோப் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் நிறுவினார். இது பின்னர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியாக மாறியது. தொழிலாளர் நலன் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தொழிலாளர் நல சங்கம் தொடங்கி, அதுவே இன்று ஜி.டி.நாயுடு அறக்கட்டளையாக இயங்குகிறது. இப்படி கல்விப் பணியிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
இப்படி தொடர்ந்து நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு இந்தியாவின் எடிசன் என புகழ்பெற்ற ஜி.டி. நாயுடு 1974 ஆம் ஆண்டு மறைந்தார். ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் கோவையின் ஜி. டி. அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. ஜி. டி.நாயுடு கார் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் பல்வேறு மோட்டார்களில் இயங்கும் கார்களை வைத்திருந்தார். அவற்றை வைத்து ஜிடி நாயுடுவின் மகன் கோபால் நாயுடு GEEDEE கார் அருங்காட்சியகத்தை நிறுவியிருக்கிறார்.