ஹஸ்கி டான்ஸ் தெரியும்... Balto மற்றும் Togo ஹஸ்கி dogs பற்றி தெரியுமா?

Balto and togo husky dogs
Balto and togo husky dogs
Published on

இன்றைக்கு இன்ஸ்டாகிராமை திறந்தாலே ஹஸ்கி டான்ஸ் தான் பிரபலமாக டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஆனால், பால்டோ மற்றும் டோகோ என்னும் இரண்டு ஹஸ்கி டாக்ஸ் (husky dogs) நூறு வருடத்திற்கு முன்பு செய்த செயல் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1925 ஆம் ஆண்டு அலாஸ்காவில் ஒரு சிறிய டவுனில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்தார்கள். Diphtheria என்ற பேக்டீரியல் இன்பெக்ஷன் அந்த டவுனில் உள்ள மக்களிடையே மிகவும் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை பார்த்த மருத்துவர் Anti toxin serum ஐ இவர்களுக்குள் செலுத்தவில்லை என்றால் அனைவரும் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்.

ஆனால் இதில் பெரிய பிரச்னை என்னவென்றால், அன்றைக்கு அந்த Anti toxin serum, Nenana என்னும் இடத்தில் இருந்து nome என்னும் இடத்திற்கு கொண்டு வரவேண்டியிருந்தது. இந்த இடத்திற்கு செல்வதற்கு 675 மைல் -50 டிகிரி குளிரில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எந்த விமானமும் அங்கு செல்ல முடியாது. சொல்லப்போனால் அது ஒரு Impossible mission.

அரசாங்கமே இதை செய்ய முடியாது என்று கைவிரிக்க, அந்த கிராமத்தில் இருந்து 20 மக்கள் முன்வருகிறார்கள். எங்களிடம் இருக்கும் 120 ஹஸ்கி டாக்ஸை வைத்து பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் மருந்தை எடுத்துக்கொண்டு சேர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில், ஹஸ்கி டாக்ஸால் மட்டும் தான் -50 டிகிரி குளிரை தாங்க முடியும். அரசாங்கமும் அவர்களை நம்பி மருந்தை ஒப்படைக்கிறது. இந்த மிஷனுக்கு இவர்கள் வைத்த பெயர் தான் The great race of mercy.

Anti toxin serum ஐ எடுத்துக் கொண்டு இரவும் பகலுமாக உறைய வைக்கும் பனி பாறைகளில் 150 ஹஸ்கி டாக்ஸூம் பயணம் செய்தன. Balto and Togo என்னும் இரண்டு ஹஸ்கி டாக்ஸ் தான் அந்த 150 ஹஸ்கி டாக்ஸை வழிநடத்தியது. கடைசியாக ஐந்தரை நாட்கள் கழித்து அந்த சீரமை பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்துக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
விதைக்கும் விவேகம்: முயற்சி என்னும் விதையே வெற்றியைத் தரும்!
Balto and togo husky dogs

அதன் பிறகு அந்த சீரம் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியது. Balto மற்றும் Togo வை மக்கள் கடவுளாக பார்த்தார்கள். இந்த நிகழ்வை தழுவி Togo மற்றும் The great Alaskan Race என்ற படங்கள் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com