

உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்று திரும்பவும் தாய் நாடான இந்தியாவிற்கு வரும் இந்தியர்கள் 'மண்ணின் மைந்தர்கள்' என பெருமைப்படுவதாக கூறிக் கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவில் பிறந்த குழந்தை அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிடுகிறது. இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு அது மறுக்கப்படுகிறது.
உலகளவில் அமெரிக்காவும் இந்தியாவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக இருக்கின்றன. ஆனால் இரண்டு நாடுகளும் குடியுரிமைச் சட்டங்களில் மாறுபட்ட கொள்கையை கொண்டுள்ளன. 'மண்ணின் உரிமைக்கு' அமெரிக்கா முன்னுரிமை கொடுக்கிறது இந்தியாவோ' ரத்த உறவுக்கும் சட்டபூர்வ பின்னணிக்கும்' முன்னுரிமை கொடுத்து குடியுரிமை வழங்குகிறது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்திய குடியுரிமை கொள்கை வேறுபாடுகள்;
அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தால் அந்நாட்டின் அரசியலமைப்பின் 14 வது திருத்தம் மற்றும் இமிக்கிரேஷன் சட்டத்தின்படி முறையாக அந்நாட்டின் குடிமகனாக மாறிவிடுகிறது. இதனை 'மண்ணின் உரிமை ' என்றும் சட்ட மொழியில் "ஜஸ் சோலி" ( Jus Soli) என்றும் அழைக்கிறார்கள்.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் அல்லாமல் தற்காலிக விசாக்களில் தங்கி இருப்பவர்களுக்கும், சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் தானியங்கி குடியுரிமையை ரத்து செய்ய ஒரு நிர்வாக உத்தரவு மூலம் முயற்சி செய்தார்.
ஆனால் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்க அதிபரின் இந்த முயற்சியை நிராகரித்தது. மேலும் ஜூன் 30 ,2026 அன்று அமெரிக்க மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அதாவது பெற்றோரின் சட்டபூர்வ நிலை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை தொடரும் என்ற சிறப்பான தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா ரத்த உறவு சார்ந்த விதிகளின் கீழ் செயல்படுவதால் அமெரிக்க குடியுரிமை சட்டத்திற்கு மாறாக செயல்படுகிறது. அமெரிக்காவைப்போல இந்தியாவிலும் 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூன் 30 வரை இந்தியாவில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற்று வந்தது.
அதன் பிறகு எல்லை பாதுகாப்பு, சட்டவிரோத ஊடுருவல் போன்ற அச்சுறுத்தல்கள் அண்டை நாடுகளில் இருந்து இந்தியா எதிர்கொள்ள நேரிட்டதால், இந்திய குடியுரிமை சட்டம் 1955( பிரிவு 3)பலமுறை திருத்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தை இந்திய குடியுரிமை பெற வேண்டும் எனில் முதலில் குழந்தையின் பெற்றோர் இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் என 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான சட்ட திருத்தத்திற்கு (CAA 2003) பின் அமுலுக்கு வந்தது.
பெற்றோர்களின் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது என விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா குடியேற்றங்களை ஊக்குவித்து தாராளமயமாக்கலை பேணவும், பிறப்புரிமை குடியுரிமையை வழங்குகிறது. ஆனால் நம் இந்திய நாடோ நாட்டின் பாதுகாப்பையும், மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் முதன்மையாக கருத்தில் கொண்டு சட்டவிரோத ஊடுருவல் தடுப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து சட்டங்களை மாற்றி அமைத்து இந்தியர்களை கண்ணும் கருத்துமாக பேணி பாதுகாக்கிறது.
இந்திய குடியுரிமைச் சட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் அது உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றிய தெளிவான, துல்லியமான சட்டப் புரிதலை நீங்கள் அடைவீர்கள். வதந்திகளைத் தவிர்த்து, நாட்டின் பாதுகாப்பு சார்ந்த சட்ட மாற்றங்களை முழுமையாக அறிந்துகொள்ள இது உதவும்.