

இந்திய ரூபாய் நோட்டுகள் (Indian Rupee Notes) இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்படும் சட்டப்பூர்வ நாணயமாகும். ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய மதிப்பிலான மகாத்மா காந்தி (புதிய) வரிசை நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அதில் 1 ரூபாய் நோட்டை மட்டும் இந்திய அரசு வெளியிடுகிறது மற்றும் அதில் நிதிச் செயலாளர் கையெழுத்திடுவார்.
ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அச்சு மற்றும் நாணயத் தயாரிப்பு நிறுவனம் (SPMCIL) மூலம் நாசிக் மற்றும் தேவாஸில் அச்சிடப்படுகிறது.
நமது தேவைக்காக ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தும் போது அதன் பின்னால் இருக்கும் படத்தை என்றாவது பார்த்துள்ளீர்களா? அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் இந்திய பாரம்பரிய சின்னங்களை குறிக்கின்றன. அவற்றை இத்தொகுப்பில் அறிந்து கொள்ளலாம் வாங்க.
10 ரூபாய் :
10 ரூபாய் நோட்டில் உள்ள நினைவுச் சின்னம், ஓடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோனார்க் சூரியக் கோவிலின் ‘தேர் சக்கரம்’ ஆகும். இந்த நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி படம் மற்றும் அசோக சின்னமும் பின்புறம் பழுப்பு நிறத்தில் இந்தக் கோவில் அச்சிடப்பட்டுள்ளது. இக்கோவிலை பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் கட்டினார். 10 ரூபாய் நாணயங்களில், 14 க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் புழக்கத்தில் உள்ளன.
20 ரூபாய் :
புதிய மகாத்மா காந்தி (புதிய) வரிசை 20 ரூபாய் நோட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான ‘எல்லோரா குகைகள்’ (Ellora Caves)நினைவுச் சின்னமாக இடம் பெற்றுள்ளன. இந்த பச்சை-மஞ்சள் நிற நோட்டின் பின்புறம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், எலோரா குகைகளின் கைலாசநாதர் கோவில் (குகை 16) சிற்பம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குகையை ராஷ்டிர கூட அரசர் உருவாக்கினார். 2019-2020 முதல் புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நாணயத்திலும், நோட்டிலும் இந்த குகைகளின் சின்னம் இடம் பெற்றுள்ளது.
50 ரூபாய் :
புதிய 50 ரூபாய் நோட்டில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான ‘ஹம்பி’ யில் உள்ள கல் தேர் (Stone Chariot) சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர், விஜயநகரப் பேரரசின் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு அடையாளமாக விளங்குகிறது. இது யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமான விட்டலா கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நினைவுச்சின்னமாகும். இந்ததேரை விஜயநகரப் பேரரசர் கிருஷ்யதேவராயர் கட்டினார்.
100 ரூபாய் :
100 ரூபாய் நோட்டில் குஜராத் மாநிலம் பாட்டனில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான ‘ராணி கி வாவ் படிக்கிணறு’ (Rani Ki Vav) இடம் பெற்றுள்ளது. இந்த படிக்கிணறு 11-ம் நூற்றாண்டில் சோலாங்கி வம்ச மன்னர் முதலாம் பீம்தேவரின் மனைவி ராணி உதயமதியால் கட்டப்பட்டது. மேலும், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயமும் (2024-ல்), ஆர்எஸ்எஸ் (RSS) 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயமும் (2025-ல்) வெளியிடப்பட்டுள்ளன.
200 ரூபாய் :
இந்தியாவின் புதிய 200 ரூபாய் நோட்டின் பின்புறத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமான பவுத்த நினைவுச்சின்னமான ‘சாஞ்சி ஸ்தூபி’ (Sanchi Stupa) இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பண்டைய கட்டிடக்கலை மற்றும் பௌத்த கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நோட்டில் இடம்பெற்றுள்ளது. இது கி.மு.3-ம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது.
500 ரூபாய் :
புதிய மகாத்மா காந்தி வரிசை ரூ.500 ரூபாய் நோட்டின் பின்புறத்தில், இதில் இந்தியாவில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமான ‘டெல்லி செங்கோட்டை’ (Red Fort)இடம் பெற்றுள்ளது. இந்த செங்கோட்டையை முகலாயப் பேரரசர் ஷாஜகான் கட்டினார். இது இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஸ்டோன் கிரே (Stone Grey) நிற நோட்டாகும்.