ஏன் இரயில் கழிப்பறைகளில் குவளைகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளன தெரியுமா?

indian-railways
indian-railways
Updated on

ந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் துவக்கப்பட்ட துறைகளில் இரயில்வேவும் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த இரயில்வே துறையானது, நாட்டின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பையே மாற்றி அமைத்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் குறிப்பாக தொடர் வண்டிகளின் அறிமுகத்தால் விமானங்களின் சேவை வருவதற்கு முன்பாக நீண்ட தூரங்களைக் கடக்க மக்களுக்கு மலிவான போக்குவரத்து முறையை வழங்கியது. இந்தத் தொடர்வண்டி இணைப்பு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதலை அளித்தது. இன்று, இது இந்தியாவின் மிகவும் பிரபலமான பொதுப் போக்குவரத்து என்று உறுதியாகவே சொல்லலாம்.

தற்போது இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட அனைத்து இரயில்களும் பயணிகளுக்காக முழுமையான நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இரயில் பயணத்தின் போது மக்களுக்கு அனைத்து நவீன வசதிகளையும் இந்த துறைகள் வழங்குகின்றன. குறிப்பாக, இந்திய ரயில்வே ரயில்களில் உள்ள கழிப்பறைகள் பல ஆண்டுகளாகப் பெருமளவில் மேம்படுத்த பட்டுள்ளன. மேலும், இரயில்களின் கழிவறைகளுக்குள் சங்கிலியால் கட்டப்பட்ட குவளையின் தோற்றம் மிகவும் பிரபலமாகவே உள்ளது. அதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. அதைப் பற்றி இப் பதிவில் பாரக்கலாமா?

இந்தியாவின் முதல் பயணிகள் இரயில் சேவை 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி அன்று தொடங்கியது. அது மும்பையிலிருந்து தானே வரை இயக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் கழிப்பறைகளே இல்லாத ஒரு இரயில் பயணத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத காரியமாக இருந்தாலும், இந்திய ரயில்வேயின் ஆரம்ப காலத்தில் நிலைமை அப்படித்தான் இருந்தது. 1853 முதல் 1909 வரை, இந்தியாவில் இரயில்களில் கழிப்பறைகளே கிடையாது.

அந்த சமயத்தில், இரயில்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால், இரயில் நிற்கும்போது பயணிகள் தண்டவாளத்தின் ஓரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. இதனால் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது; பலர் சிறுநீர் கழிக்க இறங்கும்போது தங்கள் ரயில்களைத் தவறவிட நேர்ந்தது. இந்த சிரமத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பயணி இரயில்வே அதிகாரிக்கு எழுதிய கடிதம் தான் இந்த நிலையை மாற்றியது.

1909 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஓகில் சந்திர சென் என்கிற பயணிக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது வயிற்றுக் கோளாறு காரணமாக, மேற்கு வங்காளத்தில் உள்ள அகமத்பூர் இரயில் நிலையத்தில் சென் இரயிலிலிருந்து இறங்கி, இயற்கை உபாதைக்காக தண்டவாளத்திற்குச் சென்றார். ஆனால், அதற்குள் இரயில் காவலர் விசில் ஊதி, இரயில் புறப்படுவதற்கான சமிக்ஞையை காண்பித்தார். பதற்றமடைந்த சென், தனது வேட்டியையும், குவளையையும் கையில் ஏந்தியபடி, இரயிலை மீண்டும் பிடிப்பதற்காக அதன் பின்னால் ஓடத்தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, இரயிலைத் தவறவிட்டார்.

இதையும் படியுங்கள்:
மங்களப் பொருளா? வரலாற்றுச் சின்னமா? - தேங்காயின் இரு பரிமாணங்கள்!
indian-railways

பிறகு, மிகுந்த விரக்தியடைந்த ஓகில் சந்திர சென், இரயில்களில் கழிப்பறைகள் இல்லாதது குறித்துப் புகார் கூறி, கோட்ட இரயில்வே அலுவலகத்திற்கு ஒரு கடுமையான கடிதத்தை எழுதினார். அந்தப் புகழ்பெற்ற கடிதம் இன்றும் டெல்லி இரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம்தான், இரயில்வே அதிகாரிகளை இந்த கழிப்பறைகள் அமைக்கும் விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தூண்டியது.

அதன் விளைவாக, 50 மைல்களுக்கு மேல் பயணிக்கும் இரயில்களில் அவர்கள் கழிப்பறைகளை நிறுவத் தொடங்கினார்கள். இருப்பினும், என்ஜின்களில் கழிப்பறை வசதியைப் பெறுவதற்கு என்ஜின் ஓட்டுநர்கள் 2016 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அன்று பாதிக்கப்பட்ட அந்த ஒரு பயணியின் கடிதமானது, இன்று பலதரப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மாற்றி அமைத்திருக்கிறது என்றால் மிகவும் பாராட்டப்பட மற்றும் அந்த பயணியை போற்றப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான விஷயமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com