நம்பவே முடியாத இந்தியத் திருமண முறைகள்: ஆச்சரியப்படுத்தும் சடங்குகள்!

Indian wedding customs
Indian wedding customs
Published on

மணிப்பூர்

இங்கு நடைபெறும் திருமணங்களில் மிகவும் விசித்திரரமான கடைசி சடங்கு மணமகள் மற்றும் மணமகள் ஆகிய இரு தரப்பிலும் உள்ள பெண்கள் மணமகனையும்,மணமகளையும் குறிக்கும் ஒரு ஜோடி டாக்கி மீன்களை தண்ணீரில் விடுவார்கள். இந்த மீன்கள் ஒன்றாக நீந்தினால் புதுமணத்தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது.

பெங்காலி

இங்கு திருமண மரபுகளின்படி மணமகன் மற்றும் மணமகளின் அம்மாக்கள் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. இதற்கு காரணம் அவர்களது அதிகப்படியான பாசத்தால் இது அசுபமானதாக கருதப்படுகிறது. அம்மா அவர்களின் கண்ணீர் தங்கள் குழந்தையின் திருமணம் வாழ்க்கையில் ஏதேனும் தீய விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்களின் அம்மா இல்லாமல் திருமணம் நடத்தப்படுகிறது.

பீஹார்

இங்கு நடக்கும் திருமணம் சடங்குகளில் ஒன்று மண்பானையை பேலன்ஸ் செய்வதாகும். அதேசமயம் இது மிகவும் அசாதாரணமானதாக கருதப்படுகிறது. இதில் மாமியார் மணப் பெண்ணை சில மண் குடங்களுடன் வரவேற்பார். அவற்றை மணப்பெண் தன் தலையில் பேலன்ஸ் செய்யவேண்டும் அந்த குடங்களை பேலன்ஸ் செய்துகொண்டே பெரியவர்களின் கால்களை தொடவேண்டும். சமநிலைப்படுத்தும் குடங்களின் எண்ணிக்கையே குடும்பத்தின் எதிர்காலத்தை பராமரிப்பதற்கு அவருக்கு இருக்கும் திறமையின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

சிந்தி

சிந்தி திருமணத்தில் சாந்த் என்று அழைக்கப்படும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதில் மாப்பிள்ளையின் வலது காலில் ஒரு காலணி அணிவித்து தலையில் எண்ணெய் தடவி, பின் தனது வலது காலால் மண்பானையை உடைக்கச் செய்து. மாப்பிள்ளையின் உடைகளை கிழிப்பார்கள் இது மாப்பிள்ளைக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தர்பா: சுரைக்காயில் பிறக்கும் பழங்குடியினரின் பாரம்பரிய இசை!
Indian wedding customs

குஜராத்தி

குஜராத்தி மரபுகளில் நடக்கும் திருமணச் சடங்குகளில் | 'மதுபர்கா ' என்று அழைக்கப்படும் சடங்காகும். இதில் மணமகனின் பாதங்களை மணப்பெண்ணின் பெற்றோர் பால் மற்றும் தேன் கலந்து கலந்து எடுத்து மணமகனின் பாதத்தை கழுவி வரவேற்பர். பின் அந்தக் கலவையை மணமகன் குடிக்கவேண்டும். இது அவர்களின் பழமையான பாரம்பரியமாகும்.

உத்தர பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிறிய ஊரில் மாப்பிள்ளை வீட்டாரை ரோஜா இதழ்களால் வரவேற்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் மீது தக்காளிகள் வீசப்படுகின்றன. குழப்பத்துடன் தொடங்கும் திருமணம் ஒரு உறவு காதலில் முடியும் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

கோவா

வட கோவாவில் உள்ள கோவன் மக்களால் விசித்திரமான திருமணச் சடங்கு பின்பற்றப்படுகிறது. இதில் புதிதாக திருமணம் ஆன மாப்பிள்ளையை ஒரு கிணற்றுக்கோ அல்லது ஏரிக்கோ அழைத்துச் சென்று அதில் அவரை தூக்கி எறிகிறார்கள். இந்த விழாவுக்கு 'சாவோ ஜோவா ' என்றுபெயர். இது மாப்பிள்ளைக்கு வாழ்வில் நல்ல எதிர்காலம் நல்ல வாய்ப்பை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாம்

அஸ்ஸாமின் பழங்குடியினப் பகுதிகளில் மணமகனும், மணமகளும் மாலைகளை மாற்றினாலே போதும் அதுவே அவர்கள் திருமணம் ஆனவர்களாகக் கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com