விமான ஓட்டிகளாக மிளிரும் இந்தியத் தாரகைகள்!

பெண் விமானி ஜெயஸ்ரீ
Female pilot Jayashree

ற்போது பெண்கள் பல துறைகளிலும் பணிபுரிகிறார்கள். சாலையில் ஆட்டோ, பேருந்து, லாரி என ஓட்டும் பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், விண்ணில் பறக்கும் விமானத்தில் விமான ஓட்டிகளாக உலகிலேயே முதல் இடத்தில் இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.

உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்களாவர். இரண்டாவது இடத்தில் அயர்லாந்து 9.9 சதவிகிதப் பெண் விமான ஓட்டிகளைக் கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் தெற்கு ஆப்பிரிக்கா 9.8 சதவிகித பெண் விமான ஓட்டிகளைக் கொண்டுள்ளது. அமெரிக்கா ஏழாவது இடத்தில் இருக்கிறது. அங்கு பெண் விமான ஓட்டிகள் 4.7 சதவிகிதம் என்ற சதவிகிதத்தில்தான் உள்ளனர்.

இந்தியாவின் விமான ஓட்டிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டு தெரிவித்திருக்கிறார். போர் விமானிகளாக இருந்தாலும் சரி, சிவில் விமானப் பயணமாக இருந்தாலும் சரி, உலக அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று மோடி கூறி இருக்கிறார்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் புதிய விமானிகளை, குறிப்பாக பெண் விமானிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சொர்க்கப் பதவி பெற்றுத் தரும் விடங்கலிங்க தரிசனம்!
பெண் விமானி ஜெயஸ்ரீ

இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்லா துக்ரால், விமானப் போக்குவரத்து, தொழில்முனைவு மற்றும் கலைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக அறியப்பட்ட ஒரு முன்னணி நபராக இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார். கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

பொதுப்பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்கள். அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் தம் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல், ஆசிரியர் பயிற்சி கல்லூரி என வழக்கமான கோர்ஸ்களில் சேர்ப்பதை விட, விமான ஓட்டிகளாக்கி அழகு பார்க்க வேண்டும். இன்னும் அதிக அளவில் விமான ஓட்டிகளாக இந்தியத் தாரகைகள் மிளிர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com