இந்தியாவின் கருப்பு தினம் - பிப்ரவரி 14, 2019 அன்று நடந்தது என்ன‌?

India's Black Day
India's Black Day
Published on

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என்று பரவலாக அறியப்பட்டாலும், 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு பயங்கர துயரமான புல்வாமா தாக்குதலின் காரணமாக இது கருப்பு நாளாகவும் நினைவுக்கூறப்படுகிறது. இந்த நாளில், ஜம்மு காஷ்மீரில் ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்து 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தேசத்திற்கு ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான எதிர்வினைகளுக்கும் வழிவகுத்தது. ஒவ்வொரு ஆண்டும், உயிர் இழந்த துணிச்சலான வீரர்களை கௌரவிக்க இந்தியர்கள் இந்த நாளை நினைவுகூர்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு புல்வானா தாக்குதலின் காரணமாக பிப்ரவரி 14 இந்தியாவில் கருப்பு தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், ஜம்மு-காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை CRPF வாகனத் தொடரணி மீது மோதி 40 வீரர்களைக் கொன்றான். இது தேசிய அளவில் துக்கத்தை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 14, 2019 அன்று என்ன‌ நடந்தது?

பிப்ரவரி 14, 2019 அன்று, 2,500க்கும் மேற்பட்ட CRPF வீரர்களுடன் 78 வாகனங்கள் கொண்ட ஒரு அணிவகுப்பு அதிகாலை சுமார் 3:30 மணியளவில் ஜம்முவிலிருந்து புறப்பட்டது. அந்த அணிவகுப்பு, CRPF வீரர்களை ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு NH 44 வழியாக ஏற்றிச் சென்றது, சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு அங்கு சென்றடைய வேண்டியிருந்தது.

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் காதல் கடிதம் எழுதியது யார் தெரியுமா?
India's Black Day

லெத்போராவில் பிற்பகல் 3:15 மணியளவில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் பேருந்து மீது மோதியதில், 76வது பட்டாலியனைச் சேர்ந்த சுமார் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றவர்கள் காயமடைந்தனர்.

தியாகிகளை கௌரவித்தல்:

உயிர் இழந்த 40 சி.பி.ஆர்.எஃப் வீரர்களுக்கு இந்தியா அஞ்சலி செலுத்தியது. இந்திய அரசாங்கமும் மக்களும் தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் பிற சலுகைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளித்தனர். சில சாலைகள் மற்றும் கட்டிடங்களுக்கு வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. துணிச்சலுக்காக வீர் சக்ரா பெற்ற விங் கமாண்டர் அபிநந்தன் உட்பட, தேசத்திற்காகப் போராடிய துணிச்சலான அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அன்று முதல் இந்த நாள் 'இந்தியாவின் கருப்பு தினமாக' வருடந்தோறும் அனுசரிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com