உலகின் முதல் காதல் கடிதம் எழுதியது யார் தெரியுமா?

First love letter
First love letter
Published on

இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், உலகின் முதல் காதல் கடிதம் எழுதியது யார் தெரியுமா?

காதலை வெளிப்படுத்த, காதலர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, மிகவும் முக்கியமான கருவியாக, கடிதங்கள் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே கடிதங்கள் மூலம் காதலை வளர்த்தது.

உலகின், இந்தப் பிரபஞ்சத்தின் முதல் காதல் கடிதம் எழுதியது யார் தெரியுமா?

கடிதங்கள் வழியாகக் காதல் வளர்த்த தலைமுறை உள்ளது. காதல் மட்டுமல்ல, கடிதம் எழுதுவதே அலாதியான அனுபவமாகும். அழகிய நினைவுகளைப் பொக்கிஷமாக வைத்திருக்கக் கடிதங்கள் உதவும். அன்பை வெளிப்படுத்துவதற்கான இனிமையான வழி கடிதம் எழுதுவது. ஆனால் நவீன உலகில், இன்றைய தலைமுறையினருக்கு எழுதுவது என்பதே அரிதாக மாறிவிட்டது.

முதல் காதல்

உலகின், இந்தப் பிரபஞ்சத்தின் முதல் காதல் என்பது சிவன் மற்றும் பார்வதி தேவியின் காதலே!

அதே போல, பிரபஞ்சத்தின் முதல் காதல் கடிதம் யாரால் யாருக்கு எழுதப்பட்டது தெரியுமா?

இதையும் படியுங்கள்:
காதலுக்கு காரணமாகும் ஹார்மோன்களின் கூட்டுச்சதி!
First love letter

புராணங்களில் முதல் காதல் கடிதம் - பக்தியும் அன்பும்:

கண்டதும் காதல் போல, காணாமலே காதல் கொண்ட ஒரு பெண் தான், உலகின் முதல் காதல் கடிதத்தை எழுதினர். புராணங்களில், ஆன்மீகத்தில், காதலும் பக்தியும் இணைந்தே இருக்கும்! அது ருக்மணி கண்ணனுக்கு எழுதிய கடிதம்.

விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி, கிருஷ்ணருக்கு எழுதியது தான் பிரபஞ்சத்தின் முதல் காதல் கடிதம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீமத் பகவத் கீதையின் 10வது அத்தியாயத்தில், இதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ருக்மணி தனது தோழி சுனந்தா மூலம் கிருஷ்ணருக்கு இந்தக் காதல் கடிதத்தை அனுப்பினார். கிருஷ்ணரின் குணங்களையும், துணிச்சலையும் பற்றி அறிந்த பிறகு, ருக்மிணி, கிருஷ்னரை பார்க்காமலேயே நேசிக்கத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
குக்கர் வைப்பது புது அனுபவமா? குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? இத செக் பண்ணுங்க போதும்!
First love letter

(ஒருவேளை இதைப் படித்து தான் அகத்தியன் காதல் கோட்டை படத்துக்கு கரு கொண்டாரோ?)

வரலாற்றில் முதல் காதல் கடிதம்:

முதல் காதல் கடிதம், பண்டைய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்திய ராணி, அன்கேசெனாமுன், ஹிஜித் மன்னருக்கு எழுதிய கடிதமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com