
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான விமானம் தாங்கிக் கப்பல் என்ற பெருமையை ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) பெருகிறது. முழுக்க முழுக்க கொச்சி கடற்படை தளத்தில் இந்த விமானம் தாங்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 1999இல் பணி துவங்கப்பட்டது. 2009இல் அடிப்பாகம் அமைக்கப்பட்டது. 2013இல் வெள்ளோட்டம் விடப்பட்டது. சுமார் 20,000 கோடி செலவில் இருந்த விமானம் தாங்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கொச்சி கடற்படை தளத்திற்கு இந்த கப்பல் அர்ப்பணிக்கப்பட்டது. 860 அடி நீளம், 200 அடி அகலம், 84 அடி ஆழம் கொண்டது. 52 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதன் மொத்த பரப்பளவு இரண்டரை ஏக்கர்.
1400 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 12 மிக்யான், எட்டு தேஜஸ் விமானங்கள், 30 வெஸ்ட் லேண்ட் சி விமானங்கள் இதில் உள்ளன.
75வது சுதந்திர தினத்தின் போது இந்த விமானம் தாங்கி கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
'விக்ராந்த்'ல் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு மூன்று ஈபில் டவர் அமைக்கலாம். ஒரே நேரத்தில் 700 பேர் பணியாற்றலாம்.
உலகில் அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கி கப்பல், சீனாவிடம் மூன்று, இங்கிலாந்திடம் இரண்டு, ரஷ்யா பிரான்ஸ் தலா ஒன்று என விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. 7500 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள இந்திய பெருங்கடலை இந்த விமானம் தாங்கிக் கப்பல் பாதுகாக்கும். ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) செல்லும் போது ஒரு நகரமே நகர்ந்து செல்வது போன்று இருக்கும்.
இதன் மூலம் ஏற்படும் மின்சாரம் மூலம் 5,000 வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்க முடியும். இதில் உள்ள மின் ஒயர்கள் கொச்சி முதல் காசி வரை நீளம் இருக்கும்.
பெண் வீரர்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு அறுவை சிகிச்சை அறைகளுடன் கூடிய ஆஸ்பத்திரி, ஒரே நேரத்தில் 2000 பேர் சாப்பிடக்கூடிய சமையல் அரங்கம் உள்ளன.
இதிலிருந்து 30 விமானங்கள், 29 மிக் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் செல்ல முடியும். கப்பலுக்கு தேவையான 88 மெகா வாட்டர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்த விமானம் தாங்கிக் கப்பல் இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஆகும். உலகமே இந்த செயலை கண்டு வியந்து போய் உள்ளது. இந்தியாவும் வல்லரசு என்பதை நிரூபித்துள்ளது.