ஒடிசாவின் பாரம்பரிய ஓவியமான Pattachitra வின் சுவாரசிய தகவல்கள்!

Pattachitra Painting
Pattachitra Painting

இந்தியாவின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரிய ஓவியங்களில் முதன்மையானது, Pattachitra ஓவியம். ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தோன்றிய இந்த Pattachitra ஓவியத்தின் சில சுவாரசிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

Pattachitra என்ற பெயர், சமஸ்கிருதம் மொழியிலிருந்துத் தோன்றியதாகும். இதன் பொருள், துணியில் வரையப்படும் ஓவியம் ஆகும். ஆம்! இந்த ஓவியங்கள் துணியில் மட்டுமே வரையப்படும் என்பதால்தான், இதற்கு Pattachitra என்று பெயர் வந்தது. மேலும், இந்த ஓவியத்தின் தனித்துவமே, அதன் மிக நுனுக்கமான வடிவங்களும், வண்ணங்களுமே ஆகும். மிக மிக நுனுக்கமாக வரையப்படும் இந்த ஓவியத்தை முடிக்க குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு மாதங்களாகும்.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த Pattachitra ஓவியம், ஹிந்து மத நம்பிக்கையின் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்த ஓவியங்கள் கோவில்களிலும், மத விழாக்களிலுமே முதலில் பயன்படுத்தப்பட்டன. பாரம்பரிய இசை கருவிகளின் துணிகளுக்கு பயன்படுத்திய இந்த ஓவியங்களை, பின்னர் நாட்டுப்புற கதைகளின் நாடகங்கள், அன்றாட வாழ்க்கையின் அழகுப்பொருட்கள் என அனைத்திலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இந்த ஓவியத்தின் நுனுக்கத்தால், இதனை மிக திறமை வாய்ந்த ஓவியர்களும், பொருமை உள்ளவர்களும் மட்டுமே வரைய முடியும் என்பது கலைஞர்களின் நம்பிக்கை. கி.பி.5ம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ஓவியத்தின் முதல் வேலை, அதற்கானத் துணியை செய்வதுதான். பருத்தி, பட்டை, சுண்ணாம்பு, பசை போன்றவற்றை பயன்படுத்தி அந்தத் துணிகளை செய்வார்கள். இறுதியாக அந்தத் துணிக்கு மேல் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தி காய வைத்துவிடுவார்கள்.

துணி தயாரானதும், விளக்கு சூட்டினால் ஒரு கருமை நிறத்தை தயாரித்து அவுட்லைன் போட்டு வரைய ஆரம்பிப்பார்கள். காய்கரிகள், கற்கள் போன்ற குறிப்பிட்ட இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வண்ணங்களைத் தயாரித்து வைத்துக்கொள்வார்கள். அதேபோல், மிக நுனுக்கமான வடிவங்களுக்கு, அணில் முடியிலிருந்துத் தயாரித்த பிரஷை பயன்படுத்தி வரைவார்கள். மீண்டும் இறுதியாக கருப்பு நிறத்தினால், அவுட்லைன் போட்டு ஓவியத்தை முழுமையாக்குவார்கள்.

இதையும் படியுங்கள்:
The Bajau: பல நூற்றாண்டுகளாக கடலில் வாழும் விசித்திர மக்கள்!
Pattachitra Painting

இந்த ஓவியத்திற்கென்று சில தனிப்பட்ட நிறங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, சக்தி மற்றும் ஆர்வத்தை குறிக்கும் சிவப்பு, தூய்மை மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும் மஞ்சள், தெய்வீகத்தை குறிக்கும் நீலம், செழிப்பை குறிக்கும் பச்சை ஆகியவை Pattachitra ஓவியத்தின் முக்கியமான நிறங்களாகும். மேலும், ராமாயாணம், மகாபாரதம் போன்ற புராணங்களின் கதைகளை Pattachitra ஓவியங்களில் தீட்டுவார்கள். குறிப்பாக ஒடிசாவின் கடவுளான ஜகன்னாதரின் வாழ்க்கைக் காட்சிகளை வரையும் Pattachitra ஓவியம் மிகவும் புகழ்பெற்றது. அதேபோல் ஆன்மீக சின்னங்கள், செய்திகள் போன்றவையும் Pattachitra ஓவியத்தில் வரையப்படும்.

இந்த Pattachitra ஓவியத்தின் முக்கியத்துவம் மற்றும் அழகினை கருத்தில்கொண்டு, இந்தக் கலையை காலத்தால் அழியாமல் பாதுகாக்க, பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com