
மத்திய இந்திய காகத்திய மன்னர்களின் தலைநகரமாக இருந்த இந்த கோட்டையானது, ஆரம்ப காலத்தில் மண் சுவர்களால் கட்டப்பட்டது. ஹைதராபாத் தெற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலகில் முதன் முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியாகும். இங்கு தான் புகழ்பெற்ற 'கோஹினூர் வைரம்' கண்டெடுக்கப்பட்டது.
ருத்ரமாதேவி ஆட்சிக்காலத்தில் இந்த கோட்டை புனரமைக்கப்பட்டது. கோட்டையின் உயரம் 300 அடி. கோட்டை வாசலில் நின்று கைதட்டினால் 300 அடி உயரத்தில் உள்ள கட்டடத்தில் அதன் ஒலி கேட்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாரசீக இஸ்லாமியர்கள் 1518 முதல் 1686 முடிய ஆண்டு வந்தனர். அதன் பின்னர் முகமது ஷா இந்தக் கோட்டையை கைப்பற்றினார். அதன் பின்னர் 1687-ல் ஔரங்கசீப் இந்தக் கோட்டையை கைப்பற்றினார். சுல்தான்கள் சுமார் 171 ஆண்டுகள் இந்தப் பகுதியை ஆண்டு வந்தனர்.
கிரானைட் மலையில் 120 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் உயரமான இடம் 'பாலா கிஷார்' என அழைக்கப்படுகிறது. கட்டடக்கலைக்கு பேர் போனது. நாட்டின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
கோட்டையில் உள்ளே கல்லறைகள், ஆலம் மசூதி, பாஷா மஹால் போன்ற வரலாற்று சின்னங்கள் பழமை மாறாமல் உள்ளன. பலமுறை புதுப்பிக்கப்பட்டும் அதன் தொன்மை மாறாமல் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
1931 முதல் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ராஜபுத்திரர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோட்டைக்கு உள்ளே மகாகாளி கோவில் உள்ளது. நுழைவாயில் மட்டும் 13 மீட்டர் உயரம் உள்ளது. நுழைவாயில் 'பதே தர்வாசா' என அழைக்கப்படுகிறது. 10 கிலோமீட்டர் நீளமுள்ள வெளி சுவர்கள் பிரம்மாண்டமாக உள்ளன.
நான்கு தனித்தனி கோட்டைகள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் இன்றும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எட்டு நுழைவாயில்கள் உள்ளன. கோட்டை உள்ளே அரண்மனை குடியிருப்பு பகுதி, அரங்குகள், கோவில்கள், மசூதிகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் இரும்பு கதவுகள் பதிக்கப்பட்டுள்ள யானைகள் மோதாமல் இருக்க பெரிய நிலைக் கதவுகள் உள்ளன.11 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த இடத்தை சுற்றிப் பார்க்க நீண்ட நேரம் ஆகும். 400 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பழமை மாறாமல் உள்ளது. இங்கிருந்து சார்மினார் செல்ல சுரங்கப்பாதை உள்ளது.
கோட்டையின் உள்ளே குளிர்ந்த காற்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையை முதலில் கட்டியவர்கள் காகத்திய மன்னர்கள் அதன் பின்னர் பலரது கைக்கு மாறி இருந்தாலும், ஒவ்வொருவர் ஆட்சியிலும் இது தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.
இந்த கோட்டையை கட்டி புணரமத்தவர்களில் ராஜா கிருஷ்ணதேவ், சுல்தான் முகமது, கவான் பாமன் ஷா ஆகியோர் முக்கியமானவர்கள். தற்போது இந்த கோட்டை சேதமடைந்து காணப்பட்டாலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்க அனுமதி உண்டு.