Safety glass discovery
Safety glass discovery

இன்று பல விபத்துகளை தவிர்க்கும் கண்டுப்பிடிப்பு அன்று தற்செயலாக நடந்த விபத்து!

Published on

முன்பெல்லாம் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமில்லாமல் கண்ணாடிகள் உடைந்து சிதறுவதால், இன்னும் அதிகமாக காயம் ஏற்படும். இது ஒரு பெரிய பிரச்னையாகவே இருந்தது. இதை தடுக்க கண்டுப்பிடிக்கப்பட்டது தான் Safety Glass. இதை கண்டுப்பிடித்தது முற்றிலும் ஒரு விபத்தாக நடந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

Edouard Benedictus பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு கெமிஸ்ட். 1903ல் ஒருநாள் இவருடைய லேப்பில் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்த போது, ஒரு கிளாஸ் கைத்தவறி கீழே விழுந்துவிட்டது. அதை பார்த்துக் கொண்டிருந்தார் Edouard. சாதாரணமாக கண்ணாடி பொருட்கள் கீழே விழுந்தால், துண்டுகளாக உடைந்துப் போய்விடும். ஆனால், அந்த கிளாஸ் உடைந்தும் சிதறாமல் அப்படியே இருந்திருக்கிறது.

இதைப்பார்த்த Edouardக்கு மிகவும் ஆச்சர்யம். வழக்கமாக கிளாஸ் கீழே விழுந்தால் உடைந்து சிதறிவிடும். ஆனால், இந்த கிளாஸ் மட்டும் உடைந்தாலும் ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? என்று யோசிக்கிறார். அந்த கண்ணாடிக்குள் Cellulose nitrate இருந்திருக்கிறது.

Cellulose nitrate என்பது Sticky ஆன பிளாஸ்டிக் போல இருக்கக்கூடிய ஒரு வித கெமிக்கல் ஆகும். பல வாரங்களுக்கு முன்பு வேறு ஒரு ஆராய்ச்சிக்காக அந்த கெமிக்கலை கிளாஸில் ஊற்றி வைத்துவிட்டு அதை மறந்து விடுகிறார் Edouard. இதைப்பற்றியே இரவும் பகலுமாக யோசிக்கிறார்.

அடுத்தநாள் காலையில் செய்திதாளில் ஒரு செய்தியை படிக்கிறார். கார் கண்ணாடி உடைந்து சிதறியதில் அதன் உள்ளே இருந்த நபர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது தான் அந்த செய்தி. இதை படித்ததும் Edouardக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. Safety glass ஐ உருவாக்குகிறார். இதற்கு ஒரு Sandwich ஐ முதலில் உருவாக்குகிறார். கீழே ஒரு கிளாஸ், மேலே ஒரு கிளாஸ் அதற்கு நடுவிலே பிளேஸ்டிக்கை வைக்கிறார்.

இப்போது இந்த பிளேஸ்டிக் இந்த இரண்டு பக்க கிளாஸையும் பிடித்து வைத்துக்கொள்ளும். இப்போது விபத்து ஏற்பட்டு கண்ணாடி உடைந்தாலும், அது துண்டுகளாக சிதறாது. அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

இதையும் படியுங்கள்:
Positivity: தண்ணீர் பாட்டில்கள் கற்றுத் தந்த பாடம்!
Safety glass discovery

இந்த கண்ணாடிகள் கார்களில், இராணுவத்தில் பயன்படுத்தப்படும் Gogglesல் உபயோகப்படுத்துகிறார்கள். Construction, temper glass, windshield என்று இந்த Safety glass ஐ இன்று பயன்படுத்தாத துறையேயில்லை என்று சொல்லலாம். இதனால் பல பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் அன்று ஆராய்ச்சி செய்யும் போது தெரியாமல் நடந்த ஒரு சிறு விபத்து தான் என்பது ஆச்சர்யத்தை தருகிறதல்லவா?

logo
Kalki Online
kalkionline.com