

தாய்லாந்து நாடுதான் இப்படி குறிப்பிடப்படுகிறது. வெள்ளை யானை என்பது செல்வச்செழிப்பு, அதிகாரம் மற்றும் தெய்வீக ஆசீர்வாதமாக தாய்லாந்து பண்பாட்டில் கருதப்படுகிறது. மேலும் அரச பரம்பரையே அவைகளை வைத்திருப்பதால் அரச பரம்பரையினர் பெருமையை பறைசாற்றும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஜப்பான் சூரியன் உதிக்கும் இடம் என்றும் ஐஸ்லாந்து பனிக்கட்டிகளின் நாடு என்றும் அறியப்படுகின்றன. இவை அதன் நாட்டின் வளம் சுற்றுச்சூழல் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. வெள்ளை யானைகளின் நாடான தாய்லாந்தில் அதிக அளவு புத்தர் கோவில்கள் உள்ளன. மேலும் இதன் தனிச்சிறப்பு ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்படாத நாடாக இருப்பதுதான். இது ஒரு தனித்தன்மையான விஷயம். இந்த தாய்லாந்து வெள்ளை யானை நாடாக குறிப்பிடுவதற்கு (Thailand interesting facts) பல காரணங்கள் உண்டு. அதைப்பற்றி இப்பதிவில் காண்போம்.
தாய்லாந்தில் வெள்ளை யானை என்பது புனிதமானதாகவும், நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. ஒரு அரசன் அதிக அளவு வெள்ளை யானைகள் வைத்திருப்பது அவருக்குப் பெருமையை தரக்கூடிய விஷயமாக உள்ளது.
தாய்லாந்தில் வெள்ளையானையைக் கண்டால் அது தாய்லாந்து மன்னனுக்கு பரிசாக அளிக்கப்படும். அதனாலேயே வெள்ளை யானை நாடு என்ற பெயர் வந்தது. வெள்ளை யானை தாய்லாந்தின் தேசிய சின்னமாகும். சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
தாய்லாந்து பற்றிய விஷயங்கள்:
கிழக்கு ஆசிய நாடுகளில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு உட்படாத நாடு.1939 வரை இது சயாம் என்றே அழைக்கப்பட்டது. இங்கிருக்கும் மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளதால் புன்னகையின் நாடு என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு ஒருவரின் தலையைத் தொடுவது, அது குழந்தையாக இருந்தாலும் சரி, மரியாதைக்குறைவான விஷயமாகக் கருதப்படுகிறது. தலைப்பகுதி மிக புனிதமாக கருதப்படுகிறது.
உலகில் இருக்கும் விலங்கினங்களின் மூன்றில் ஒரு பங்கு தாய்லாந்தில் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய 5.5 டன் எடையுள்ள புத்தர் பொன் சிலை இங்கு உள்ளது.
உள்ளங்கைகளை சேர்த்து சிறிது குனிந்து வணங்கி வரவேற்பது இங்கு பாரம்பரியமாக உள்ளது.
சயாமீஸ் இரட்டையர்கள் பிறந்த இடமாகும். இந்த நாட்டு மன்னன் புமிபோல் அதுல்யா தேஜ் சுமார் 70 ஆண்டுகள் தாய்லாந்தை ஆண்டான். தாய்லாந்தில் கிரிகேரியன் காலண்டரை விட 543வருடங்கள் முந்தையதான காலண்டரே பழக்கத்தில் உள்ளது.
இங்கு கால்வாய்கள் அதிகம் உள்ளதால் கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படுகிறது.
டூரியான் பழம் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பழமாகும்.
உலகிலேயே மிக சிறிய விலங்கின மான bumblebee bat இங்குதான் காணப்படுகிறது.
வெள்ளை யானை என்பது தேசிய சின்னம் மட்டுல்ல இது அரசு தொடர்பான ப்ராஜெக்ட்களையும் குறிப்பிடப்படுகிறது. எந்த பெரிய ப்ராஜெக்ட்டையும் வெள்ளையானை என்று குறிப்பிடுகிறார்கள்.
தாய்லாந்தின் தேசியகீதம் ரயில் நிலையங்களில் தினமும் காலை எட்டு மணிக்கும், மாலை 6மணிக்கும் இசைக்கப்படுகிறது. எந்த வேலையில் இருந்தாலும் மக்கள் எழுந்து நின்று அது முடியும் வரை நிற்பார்கள்.