
பிப்ரவரியில் சாதாரண வருடங்களில் 28 நாட்களும், லீப் வருடங்களில் 29 நாட்களும் இருக்கும். 2025 லீப் ஆண்டு இல்லை என்பதால் இந்த வருடம் பிப்ரவரியில் 28 நாட்களை மட்டுமே கொண்டது. பிப்ரவரி மாதம் பல்வேறு சாதனைகளைக் கொண்டாடும் குறிப்பிடத்தக்க தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளால் நிரம்பியுள்ளது. இந்த மாதத்தில் வரும் முக்கியமான தினங்களையும், இந்த தினங்களில் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
* இந்திய கடலோர காவல்படை தின கொண்டாட்டங்களுடன் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம்தேதி தாக்கல் செய்யப்படும். NCC கடற்படைப் பிரிவு கேடட்கள் 1977-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி இந்திய கடலோர காவல்படை தினத்தை கொண்டாடுகின்றனர்.
* சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுப்பு நிலங்கள் தினம் மற்றும் RA விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. புனிதமான இந்து பண்டிகையான வசந்த பஞ்சமி 2-ம்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
* சர்வதேச வளர்ச்சி வாரம் பிப்ரவரி 2 முதல் 8ம்தேதி வரை நடைபெறுகிறது, இது உலகளாவிய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை எடுத்துக்காட்டுகிறது.
* பிப்ரவரி 4-ம்தேதி உலக புற்றுநோய் தினம், புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு எதிரான உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
* பிப்ரவரி 7 முதல் 23-ம்தேதி வரை சூரஜ்குண்ட் கைவினைக் கண்காட்சியானது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களை ஒன்றிணைத்து பாரம்பரிய கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. மேலும் இன்றைய தினம் ரோஸ் டே காதலர் வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பிப்ரவரி 7 முதல் 14-ம்தேதி வரையிலான காதலர் வாரம், காதல், பாசம் மற்றும் பிணைப்புகளைக் கொண்டாடுகிறது.
* தேசிய குடற்புழு நீக்க நாள் மற்றும் உலக பருப்பு நாள் பிப்ரவரி 10-ம்தேதி அனுசரிக்கப்படுகிறது, இது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.
* சர்வதேச கால்-கை வலிப்பு தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இரண்டாவது திங்கட்கிழமை (பிப்ரவரி 10-ம்தேதி ) கொண்டாடப்படுகிறது. கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
* குரு ரவிதாஸ் ஜெயந்தி என்பது ரவிதாஸின் பிறந்த நாளாகும். குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 12-ம்தேதி மாக் மாதப் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.
* உலக வானொலி தினம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) சர்வதேச தினமாக இதை அறிவித்துள்ளது.
* தேசிய பானம் ஒயின் தினம், ஆண்டுதோறும் பிப்ரவரி 18-ம்தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. மதுவின் நன்மைகளைப் பரப்புவதே இந்த தினத்தின் நோக்கம்.
* பிப்ரவரி 17 முதல் 27-ம்தேதி வரை தாஜ் மஹோத்சவ் ஆக்ராவில் உள்ள ஷில்ப் கிராமத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடைபெறும். இந்த விழா, இந்தியாவின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், நடனம், இசை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
* துருவ கரடிகளின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27-ம் தேதி சர்வதேச துருவ கரடி தினம் கொண்டாடப்படுகிறது.
* இந்தாண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26-ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி சிவ பக்தர்களால் கொண்டாடப்படும் ஆன்மிக விழாவாகும்.
* ரம்ஜான் நோன்பு பிப்ரவரி 28-ம்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* பிப்ரவரி 28-ம்தேதி தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.