Lucy Fossil: மனிதத் தோற்றத்தின் கதையை மாற்றியமைத்த எலும்புக்கூடு! 

Lucy Fossil
Lucy Fossil
Published on

மனித இனத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வு பல காலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் "லூசி" ஃபாசில். 1974-ம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமினின் (Hominin) எலும்புக்கூடு, 3.2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.

யார் இந்த லூசி?

"லூசி" என்று பெயரிடப்பட்ட இந்த ஓமினின் பெண் எலும்புக்கூடு, அஸ்ட்ராலோபித்தெகஸ் அபரென்சிஸ் (Australopithecus Afarensis) என்ற இனத்தைச் சேர்ந்தது. லூசியின் எலும்புக்கூடு, அவள் இரண்டு கால்களில் நடக்கக் கூடியவள் என்பதை தெளிவாகக் காட்டியது. இது, மனிதர்கள் நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளிலிருந்து எவ்வாறு பரிணமித்தோம் என்பதைப் பற்றிய புதிய பார்வையை வழங்கியது.

லூசியின் முக்கியத்துவம்:

  • இரண்டு காலில் நடப்பது: லூசியின் எலும்புக்கூடு, இரண்டு காலில் நடப்பது மனித பரிணாம வளர்ச்சியில் மிகவும் முக்கியமான ஒரு படி என்பதை உறுதிப்படுத்தியது.

  • மூளை வளர்ச்சி: லூசியின் மூளை, நவீன மனிதர்களை விட சிறியதாக இருந்தாலும், அவள் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நுண்ணறிவு கொண்டிருந்தாள் என்பதைக் காட்டியது.

  • கருவி பயன்பாடு: லூசி வாழ்ந்த காலத்தில், கருவிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது, மனிதர்கள் கருவிகளை உருவாக்கி பயன்படுத்தும் திறன், மனித பரிணாம வளர்ச்சியில் மிகவும் முக்கியமான ஒரு காரணி என்பதை நிரூபித்தது.

லூசியின் கண்டுபிடிப்புக்கு முன்னும், பின்னும்: 

லூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய புரிதல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் பெரிய மூளையுடன் கூடிய நேரடி வம்சாவளியை கொண்டிருப்பதாக நம்பினர். ஆனால், லூசி கண்டுபிடிப்பு, மனித பரிணாம வளர்ச்சி ஒரு நேர்கோட்டு பாதையில் நடக்கவில்லை, மாறாக, இது ஒரு சிக்கலான கிளை மரம் போன்றது.

இதையும் படியுங்கள்:
மனித குலத்தின் மாபெரும் துன்ப நிலை எது? இந்த குட்டிக் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
Lucy Fossil

லூசியின் கண்டுபிடிப்புக்கு பின், மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வு மிகவும் தீவிரமாக நடைபெற்றது. ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பல புதிய ஓமினிட் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்ச்சியான ஆராய்ச்சி: லூசியின் கண்டுபிடிப்பு, மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தாலும், இன்னும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. லூசியின் வாழ்க்கை முறை, அவள் எவ்வாறு இறந்தாள், அவளின் இனம் எவ்வாறு அழிந்தது போன்ற கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com