அமானுஷ்ய சத்தங்களால் அதிரும் கிராமம்: திகில் பின்னணி என்ன?

மயாங் கிராமம் குறித்த கதைகள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
black magic village
black magic village
Published on

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள Mayong கிராமம் தனது மர்மமான கதைகள் மற்றும் மந்திர தந்திரங்களுடனான தொடர்பு காரணமாக, இந்தியாவின் கருப்பு மந்திரா தலைநகரம் (Blackmagic Capital of India) என அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் மிக நீண்ட வரலாறு, பன்முகக் கலாச்சாரம், புராணங்கள், நம்பிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மயாங்க் கிராமம் பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் தங்கள் பாரம்பரிய கலைகள், பண்பாடுகள், நம்பிக்கைகளைப் பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். இந்த கிராமத்தில் மந்திர தந்திரங்கள், யோகா மற்றும் ஆயுர்வேதம் போன்ற பண்டைய இந்திய கலைகள் இன்று பின்பற்றப்படுகின்றன.‌

இந்த கிராமம் பிளாக் மேஜிக் உடன் தொடர்புடைய பல கதைகள் சொல்லப்படுகிறது.

கருப்பு மந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும், பல மர்மமான நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்த கிராமத்தில் வசிக்கும் சிலர் கருப்பு மந்திரத்தை ஒரு கலையாக கருதி அதை இன்றும் பயிற்சி செய்து வருவது தான் என நம்பப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
மர்மமாக மறைந்த 2930 வைரங்கள் கொண்ட நகை! மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கதை!
black magic village

பிளாக் மேஜிக் என்பது மனிதர்களையும், பொருட்களையும் கட்டுப்படுத்துவதற்கும், தீங்கு விளைவிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு மாயாஜால முறை. இது மந்திரங்கள் தந்திரங்கள் மற்றும் பலி கொடுப்பது போன்ற பல்வேறு வழிகளில் செய்யப்படுகிறது. கருப்பு மந்திரம் பல நகரங்களில் பரவலாக நடைமுறையில் இருந்தாலும், இது பெரும்பாலும் தீய சக்திகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 

மயாங் கிராமத்தில் பல மர்மமான நிகழ்வுகள் இதுவரை நடந்துள்ளன. மக்கள் காணாமல் போதல், விலங்குகள் திடீரென இறந்து போதல், வீடுகளில் அமானுஷ்ய சத்தங்கள் கேட்பது போன்றவை இதில் அடங்கும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கருப்பு மந்திரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் கருப்பு மந்திர தலைநகரம் என்ற பெயரை பெற்றுள்ளது இந்த கிராமம். 

இதையும் படியுங்கள்:
தோட்டத்தை கலைக்கூடமாக மாற்றும் 'ட்ரெண்டிங் டெக்னிக்'!
black magic village

இந்த கிராமத்தில் மீன்கள் மனிதர்களாக மாறுவதாக கூறப்படும் கதைகள் மிகவும் பிரபலமானவை. இந்தக் கதைகளின் படி, கிராமத்தின் அருகில் உள்ள நீர் நிலைகளில் வாழும் மீன்கள் இரவில் மனிதர்களாக மாறி கிராமத்துக்கு வந்து பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இது மிகவும் விசித்திரமாக இருந்தாலும் இதற்கு எவ்விதமான அறிவியல் பூர்வமான விளக்கமும் கிடைக்கவில்லை. 

மயாங் கிராமம் பற்றிய அமானுஷ்ய கதைகள் பரவலாக அறியப்பட்டாலும், இந்த கதைகளுக்கு எவ்விதமான உறுதியான ஆதாரமும் இல்லை. பலர் இந்த கதைகள் வெறும் கற்பனை என்று கூறுகின்றனர். மயாங் கிராமம் குறித்த கதைகள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com