2000 வருடங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் மண்டை ஓடு சமீபத்தில் கிடைத்தது. இந்த மண்டை ஓட்டில் மெட்டல் ப்ளேட் இருந்தது, அனைவருக்கும் அன்றைய காலத்து மருத்துவத்துறைப் பற்றிய தெளிவை வழங்கியுள்ளது.
தொழில்நுட்பங்கள் தற்போது மிகப்பெரிய அளவு வளர்ந்துவிட்டது என்றும், இதன்மூலம் உலகை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே கைக்குள் கொண்டுவரலாம் என்று நாம் பெருமிதம் கொள்கிறோம். மேலும் இதுதான் அந்தக் காலத்துக்கும், இந்தக் காலத்துக்கும் உள்ள வித்தியாசம் என்றும், காலங்கள் செல்ல செல்ல நாம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறோம் என்றும் நாமே கூறிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? அன்றைய தொழில்நுட்பமும் இன்றைய தொழில்நுட்பமும் மாறுப்பட்டிருக்கிறது (அன்றைய காலத்திலும் அனைத்து துறைகளும் பல மடங்கு வளர்ச்சியடைந்துதான் இருந்திருக்கிறது).
அதாவது முறை மாறியிருக்கிறது. ஆனால், இலக்கு ஒன்றேதான். இந்தப் பதிவை முழுவதும் படித்தீர்கள் என்றால், இதன் அர்த்தம் புரியும்.
2000 வருடங்களுக்கு முன்னர், பெரு நாட்டு வீரர் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் இறப்பதற்கு சில காலத்திற்கு முன்னர், ஒரு போரில் காயமடைந்த அவரின் மண்டை ஓட்டில் துளை ஏற்பட்டிருக்கிறது. அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். பின்னர் அவருக்கு மண்டை ஓட்டில் துளை ஏற்பட்ட பகுதியில் மெட்டல் ப்ளேட் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது இதுபோன்ற சிகிச்சைக்கு தங்கம் மற்றும் வெள்ளியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதாவது இப்போதைய எந்த தொழில்நுட்பக் கருவிகளும் இல்லாமல், அந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சிகிச்சையை பெருவில் வாழ்ந்த மக்கள் எப்படி செய்திருப்பார்கள் என்று சில ஆராய்ச்சிகளின்மூலம் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அதாவது முதலில் மரப் பொருள் ஒன்றைப் பயன்படுத்தி தலையை சுற்றி வைத்து, பிறகு துணியால் இறுக்கிக் கட்டிவுள்ளனர். இதனால், மண்டை ஓட்டுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனை முதலில் செய்தப்பின்னரே அவர்களின் முறையில் சிகிச்சை அளித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். இதுப்பற்றிய முழு முறையையும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்த சிகிச்சையை தற்போது நாம் Trepanation என்று அழைக்கிறோம். அப்போது இதற்கு வேறு பெயர் இருந்திருக்கலாம். சிகிச்சை முறை மாறுப்பட்டிருந்தாலும், அவர் உயிர் பிழைத்திருக்கிறார் அல்லவா?
மருத்துவத்துறையில் சிகிச்சை முறைகள் ஏராளமாக இருந்தாலும், உயிரைக் காப்பாற்றுவது ஒன்றே இலக்காகும். அந்த இலக்கிற்கு தற்போதைய தொழில்நுட்பம் மட்டும்தான் ஒரே முறையா என்ன? அன்றைய முறை நமக்குத் தெரியவில்லை அவ்வளவுதான்…
இப்போது புரிகிறதா? முறை மாறுப்பட்டிருக்கும். ஆனால், இலக்கு ஒன்றே என்றே வார்த்தைகளுக்கான அர்த்தம்.