Raja Parba: ஒடிசாவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழாவின் சுவாரசிய பின்னணி!

Rajaparba
Rajaparba
Published on

ஒடிசாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே இந்த Raja Parba திருவிழாதான் மிகவும் புகழ்பெற்றதாகும். அந்தவகையில் இந்த திருவிழா ஏன் கொண்டாடுகிறார்கள்? எப்படி கொண்டாடுகிறார்கள்? போன்றவற்றைப் பார்ப்போம்.

உலகில் பல மதங்கள் உள்ளன, ஒரு மதத்திலேயே ஏராளமான கடவுள்களும் உள்ளன. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான கடவுள்களை வழிப்பட்டு, அவர்களின் வழியைப் பின்பற்றுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஒவ்வொரு கிராமத்திற்கும் எல்லை சாமி, காவல் சாமி என கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். ஆகையால், அவர்களைக் கொண்டாடும் திருவிழாக்களும் அதிகமோ அதிகம்தான். அந்தவகையில் ஒடிசாவில் கோலாகலமாக கொண்டாடப்படும், Raja Parba திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.

பெண்மையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாதான் Raja Parba. ஆம்! மாதத்தில் மூன்று நாட்களான மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தொடவே கூடாது என்று வீட்டின் ஓரத்திலோ திண்ணையிலோ உட்காரவைத்த காலத்திலிருந்து, மாதவிடாய் நேரத்தில்கூட கம்பீரமாக ஆஃபிஸ் செல்லும் இந்தக்காலத்து வரை கொண்டாடப்படும் இந்த திருவிழாவை எதிர்நோக்கிதான் ஒடிசா பெண்கள் எப்போதும் காத்துக்கொண்டிருப்பார்கள்.

விஷ்ணுவான ஜகந்நாதருக்கு இரண்டு மனைவிகள் உள்ளன என்று அந்த மாநிலத்து மக்கள் நம்புகிறார்கள். அந்த மூன்று கடவுள்களையுமே வழிப்பட்டும் வருகிறார்கள். ஒருவர் ஸ்ரீ தேவி அதாவது லக்ஷ்மி மற்றும் மற்றொவர் பூமா தேவி. பூமா தேவியின் மாதவிடாய் காலம் வருடத்திற்கு ஒருமுறை என்றும், அதாவது மூன்று நாட்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதுவும் பருவக்காலம் தொடங்குவதற்கு முன்னர், ஜூன் மாதம் பூமாதேவியின் மாதவிடாய் நாட்கள் வருகிறது. அந்த மூன்று நாட்களை ஒடிசா மக்கள் அனைவரும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். அந்த திருவிழாவே Raja Parba என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர் Rajaswala என்ற வார்த்தையிலிருந்து வந்த சொல். அதாவது மாதவிடாய் பெண் என்று பொருள்.

இந்த மூன்று நாட்கள் ஒடிசா மக்கள் எந்த ஒரு வேலையும் செய்யமாட்டார்கள். அதாவது விவசாயம், பிற தொழில்கள் என எதுவுமே செய்யமாட்டார்கள். ஏனெனில், அப்படி செய்தால், பூமா தேவிக்கு வலிக்கும் என்பது அவர்களின் எண்ணம். அதேபோல் காலணி கூட அணிய மாட்டார்கள்.

அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் பெண்கள், குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், எந்த ஒரு வீட்டு வேலையும் செய்ய மாட்டார்கள். முழுக்க முழுக்க புதுப்புது ஆடைகளை அணிந்துக்கொண்டு பல்லாங்குழி, தாயம், ஊஞ்சல் ஆடுவது போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். அதேபோல் ஆண்கள் கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

பண்டிகை தினம் என்றால், பலகாரம் இல்லாமலா? ஒடிசாவின் புகழ்பெற்ற மற்றும் சுவைமிகுந்த Podapithaவையே மக்கள் செய்து தேவிக்கு படைத்துவிட்டு பின் அவர்கள் சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
கலைக்கூடமாகத் திகழும் நெல்லையப்பர் திருத்தேரோட்டம்!
Rajaparba

இந்த மூன்று நாட்கள் முடிந்தவுடன், நான்காவது நாள், Vasumathi Snana என்றப் பெயரில் ஒரு நிகழ்ச்சி நடைபெறும். அதாவது மாதவிடாய் காலம் முடிந்தவுடன் இறுதியாக தலைக்குக் குளிப்பது போல், அந்த நாளில் பூமியை நீரினால், சுத்தம் செய்வார்கள். இது, பூமித் தாய் குளிப்பதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.

இந்த திருவிழா மூலம், பூமா தேவியை மகிழ்விப்பதோடு, வரும் காலங்களில் சிறப்பான அறுவடை நிகழும் என்பது ஒடிசா மக்களின் பூரண நம்பிக்கையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com