தன் தாயின் முகத்தைக்கூட பார்த்ததில்லை! வரலாற்றில் இப்படியும் ஒரு விசித்திர மனிதரா?

கிரீஸின் ஏதோஸ் மலையில் வாழ்ந்த மிகைலோ டோலோடோஸ், 82 ஆண்டுகள் ஒரு பெண்ணைக் கூட பார்க்காமல் வாழ்ந்ததாக கூறப்படும் வியப்பூட்டும் உண்மை கதை.
Mihailo Tolotos
Mihailo TolotosImage credit: AI Image
Updated on

லகில் எத்தனையோ விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தன் வாழ்நாளில் ஒரு பெண்ணைக்கூட பார்க்காமல், 82 ஆண்டுகள் முழுமையாக தனிமையில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதரின் கதை, கேட்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அவர்தான் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 'மிகைலோ டோலோடோஸ்' (Mihailo Tolotos) என்ற துறவி.

மிகைலோ டோலோடோஸ் 1856 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஹல்கிடிகி என்ற பகுதியில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் பிறந்த சில மணி நேரங்களிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். அவருக்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லாததால், அனாதையாக நின்ற அந்த அவரை, அங்கிருந்தவர்கள் கிரீஸில் உள்ள ஏதோஸ் மலை என்ற புனித பகுதியில் இருந்த ஒரு கிறிஸ்துவ மடாலயத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்த ஆர்த்தடாக்ஸ் துறவிகள் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினர். அவருக்கு 'மிகைலோ டோலோடோஸ்' என்றும் பெயரிட்டனர்.

டோலோடோஸ் வளர்ந்த ஏதோஸ் மலை சாதாரணமான இடமல்ல. அது 10 ஆம் நூற்றாண்டிலிருந்து கடுமையான சட்டங்களைப் பின்பற்றி வரும் ஒரு ஆன்மீகத் தன்னாட்சிப் பகுதி ஆகும். அங்கு 'அவாட்டன்' என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த சட்டத்தின்படி, மடாலயத்தில் இருக்கும் துறவிகள் தங்களின் பிரம்மச்சரியத்தையும், ஆன்மீக ஒருமுகப்பாட்டையும் காப்பதற்காக பெண்கள் யாரும் அந்த எல்லைக்குள் நுழையக்கூடாது.

ஆச்சரியப்படும் விதமாக, பசு, ஆடு போன்ற பெண் விலங்குகளோ அல்லது பறவைகளோ கூட அங்கு வளர்க்கப்படக் கூடாது. பூனைகளுக்கு மட்டுமே எலிகளைப் பிடிப்பதற்காக விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே தினமும் மாலையில் நடக்கும் 'அந்த' அதிசயம்: பின்னணி என்ன?
Mihailo Tolotos

பால், முட்டை, சீஸ் போன்ற பொருட்கள் அனைத்தும் வெளி உலகிலிருந்து தான் அங்கு கொண்டு வரப்பட்டன.

டோலோடோஸ் அந்த மடாலயத்தின் சுவர்களுக்குள்ளேயே வளர்ந்தார். அவர் அங்கிருந்து ஒருமுறை கூட வெளி உலகிற்கு வரவில்லை; அண்டை நகரங்களுக்குக் கூட சென்றதில்லை. இதனால், அவர் பெண்களுக்குரிய குணங்களையோ, தோற்றத்தையோ புத்தகங்கள் வழியாகவும், சக துறவிகள் கூறிய கதைகள் வழியாகவும் மட்டுமே அறிந்துகொண்டார்.

அவருடைய தனிமை என்பது பெண்கள் இல்லாதது மட்டுமல்ல, நவீன உலகமே இல்லாத ஒன்றாக இருந்தது. 1938 ஆம் ஆண்டு எடின்பர்க் டெய்லி கூரியர் என்ற பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, அவர் தன் வாழ்க்கையில் மோட்டார் வாகனங்கள், விமானங்கள், திரைப்படங்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றையெல்லாம் பார்த்ததே இல்லையாம்.

உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தபோது, டோலோடோஸ் எந்தவித சலனமும் இன்றி அமைதியான பிரார்த்தனையிலும், ஆன்மீகப் பணியிலும் தன் நாட்களைக் கழித்தார்.

1938 ஆம் ஆண்டு, தனது 82 வது வயதில் மிகைலோ டோலோடோஸ் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு, ஏதோஸ் மலையில் இருந்த துறவிகள் அவருக்கு ஒரு சிறப்பு இறுதிச் சடங்கை நடத்தினர். உலக வரலாற்றிலேயே ஒரு பெண்ணின் முகத்தைக் கூட பார்க்காமல், அவளது நிழல் கூட தன் மீது படாமல் வாழ்ந்து மறைந்த ஒரே மனிதர் இவராகத்தான் இருக்க முடியும் என்று அவர்கள் நம்பினர்.

மிகைலோ டோலோடோஸ் தன் வாழ்நாளில் பார்த்த ஒரே பெண் வடிவம், மடாலயத்தில் இருந்த இயேசுவின் தாயான கன்னி மேரியின் ஓவியம் மற்றும் சிலைகள் மட்டுமே.

இன்றைய நவீன காலகட்டத்தில், பாலின சமத்துவத்திற்கு எதிராக இந்த சட்டம் இருப்பதாகப் பல விவாதங்கள் எழுந்தாலும், ஏதோஸ் மலை இன்றும் பெண்களுக்கான தடையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com