Mummy: கையை முகத்துடன் இணைத்து கட்டியப்படி கண்டுபிடிக்கப்பட்ட மம்மி!

Archaelogical Survey
Archaelogical Survey

கடந்த 2021ம் ஆண்டு பூமிக்கடியில் இருந்த கல்லறை ஒன்றில் கைகளால் முகத்துடன் இணைத்து கட்டியப்படி ஒரு மம்மியை கண்டுபிடித்தார்கள். ஆகையால், அது அப்போதைய மத அடையாளமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்படுகிறது.

ஏறத்தாழ 35 வயதுடைய ஒரு ஆணை சராசரியாக 800 முதல் 1200 வருடங்களுக்கு முன்னர் புதைத்துள்ளனர். அதாவது மேற்கத்தியர்கள் பெருவிற்கு வருவதற்கு முன்னர் Inca நாகரீக காலத்தில்.  Inca நாகரீகம் என்பது பெருவின் பண்டைய நாகரீகமாகும். அப்போது அமெரிக்க இந்தியர்கள் சிலர் அங்கு ஆட்சிப் புரிந்தார்கள் என்று கூறப்படுகிறது. பெருவின் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சி தளம் தான் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த உடல் மிகவும் பாதுகாப்பாகவும், பாதுகாப்பான கல்லறையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான், இவ்வளவுகாலம் வரை சிதையாமல் அப்படியே உள்ளது என்று பெருவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Mummy
Mummy

இந்த மம்மி Cajamarquilla என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது பெருவின் தலைநகரமான Lima விலிருந்து சுமார் 15.5 மைல் தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதிகள் அப்போது ஒரு புனிதத்தளமாக இருந்து வந்ததாகவும், ஆகையால் அவர்களுக்கென சில தனிப்பட்ட கலாச்சாரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த உடல் இருக்கும் கல்லறையும், அவர் அடக்கம் செய்யப்பட்ட முறையும், முழுக்க முழுக்க ஒரு இறை பக்தி அடிப்படையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மம்மி இருந்த பிரமிடின் அடிதளத்தில் 10 அடி நீளத்திற்கு அறைகள் இருந்திருக்கின்றன. இந்த மனிதனை எப்படி ஒரு குழந்தை வயிற்றில் இருக்குமோ, அதேபோல்தான் அடக்கம் செய்திருக்கிறார்கள். இது அன்றைய காலத்தின் அவர்களின் இறை நம்பிக்கை சம்பதப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதாவது கருவில் இருந்தப்படியே கருவறையில் வைத்தால், அவர்களுக்கு அடுத்த ஜென்மம் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கையாகும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். இந்த நம்பிக்கை தென்பெருவின் வழக்கம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதையும் படியுங்கள்:
பலரும் விரும்பி சாப்பிடும் குல்ஃபியின் வரலாறு என்ன தெரியுமா?
Archaelogical Survey

இந்த மம்மியுடன் பீங்கான், காய்கறி பழங்கள் மற்றும் சில கல் கருவிகள் இருந்தன. மேலும் அந்த கல்லறைக்கு வெளிப்பகுதியில் கடல் நத்தைகளும் விடப்பட்டிருக்கின்றன. கடல் நத்தைகளை விடப்பட்டதன் காரணமும் அவர்களின் கலாச்சாரம்தான். அதன்பின்னர் பல ஆண்டுகாலமாக அந்த கல்லறையிலும், நத்தைக்கும் நீர் மற்றும் உணவு வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com