3000 வருடம் கழித்து விழித்த மம்மி! இதைத் தொட்டவர்கள் யாரும் உயிரோடு இல்லை!

Tutankhamun tomb and Howard carter
Tutankhamun tomb Mummy curse
Published on

1999ல் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய படம் தான் தி மம்மி. இந்த படம் வெளியான பிறகு தான் மம்மி என்ற விஷயத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் வர ஆரம்பித்தது. அந்த படத்தின் நடுவிலே குறிப்பிட ஒரு காட்சி வரும். அதாவது இந்த மம்மியை திறக்காதீர்கள் என்று பலகையில் போட்டிருக்கும். இருப்பினும் அதை படித்து பார்த்த பிறகும் ஒரு 5 பேர் தைரியமாக அந்த மம்மி இருக்கும் பெட்டியை திறப்பார்கள்.

கடைசியில் பிரமிட்டுக்குள் அந்த 5 பேரை தான் மம்மி துரத்தும். படத்தில் வந்த இந்த காட்சி மட்டும் ஒரு உண்மை சம்பவம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆமாம். எகிப்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தான் படத்திலும் காட்டியிருக்கிறார்கள். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

அது சரியாக 1922 ஆம் ஆண்டு எகிப்தில் ஏதாவது தங்கப்புதையல் கிடைக்குமா என்று ஒரு கூட்டமும், ஏதாவது மம்மி உடல் கிடைக்குமா? என்று இன்னொரு கூட்டமும் தேடி அலைந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த உள்ளூர்வாசி ஒருவர் Valley of king என்று ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. அங்கு சென்று தேடி பாருங்கள். கண்டிப்பாக நிறைய கிடைக்கும் என்று சொல்கிறார்.

எகிப்தில் பழங்காலத்தில் நிறைய பேர் இறந்து போயிருக்கிறார்கள். அதில் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களை மட்டும் ஒரு தனி பள்ளத்தாக்கில் அடக்கம் செய்துள்ளனர். அந்த இடத்திற்கான பெயர் தான் The valley of king. அங்கே தேடியும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

அப்போது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்த சின்ன பையன் அங்கிருந்த கல்லில் தடுக்கி கீழே விழுந்து விடுகிறான். அவன் எதிலே தடுக்கி விழுந்தான் என்று பார்த்தால், அங்கே ஒரு மிக பெரிய பாராங்கல் சம்மந்தமேயில்லாமல் பூமியில் புதைந்துக் கிடக்கிறது. சந்தேகப்பட்ட ஆராய்ச்சியாளார்கள் அந்த கல்லை நகர்த்திப் பார்த்தால் உள்ளே ஒரு சுரங்கம் போகிறது. எல்லோரும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே தங்கத்தால் ஆன கதவு ஒன்று இருக்கிறது. 

அதை படித்து பார்க்கும் போது தான் தெரிகிறது. கடைசியாக 3000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கதவு மூடப்பட்டிருக்கிறது. அந்த கதவில், "உள்ளே யாரும் போகாதீர்கள். மிகவும் ஆபத்தானது!" என்று எழுதியிருக்கிறது. ஆனால், அதை யாரும் கண்டுக்கொள்ளாமல் தைரியமாக கதவை திறந்துக் கொண்டு போகிறார்கள். அங்கே தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், மரகதம் என்று கொட்டிக் கிடக்கிறது. அதை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைத்ததை அள்ள ஆரம்பிக்கிறார்கள். அதிலிருந்த Howard carter என்ற ஆராய்ச்சியாளர் மட்டும் அந்த அறைக்கு நடுவிலே உள்ள மம்மி பெட்டியை பார்க்கிறார். அதை திறந்து பார்த்தால் 3000 வருடம் பழமையான மம்மி அதிலிருக்கிறது.

Howard அந்த பெட்டியை லண்டனுக்கு எடுத்து செல்கிறார். அங்கு பலநாட்கள் வைத்து ஆராய்ச்சி செய்து தகவல்களை சேகரிக்கிறார். சரியாக கி.மு 1323 ல் எகிப்தின் அரசராக இருந்தவர் தான் Tutankhamun வெறும் 18 வயதான அரசர். அந்த காலத்தில் சொந்தத்துக்குள் திருமணம் செய்துக் கொண்டதனால் ஒருவித நோய் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அதே நோய் தான் அரசன் Tutankhamun க்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறந்து போகிறார்.

இறந்த அரசரின் உடலை பதப்படுத்தி ராஜாக்கள் மட்டுமே புதைக்கக்கூடிய சுரங்கப்பாதைக்கு எடுத்து சென்று அங்கே புதைக்கிறார்கள். அந்தக் காலத்தில் எகிப்தில் எந்த மன்னரை புதைக்கும் போதும் அவருடைய உடலுடன் தங்க ஆபரணங்களையும் சேர்த்து வைத்து தான் புதைப்பார்கள். எதிர்காலத்தல் யாரும் அந்த அறையை திறந்துவிடக்கூடாது என்று எகிப்தில் உள்ள அனைத்து சூனியக்காரர்களையும் கூப்பிட்டு பல வேலைகள் பார்த்து அந்த அறையை இறுக்கமாக மூடுகிறார்கள். வெளியிலே எச்சரிக்கை பலகையும் வைத்து பெரிய பாறைக் கொண்டு மூடி வைத்திருக்கிறார்கள். இதுதான் வரலாற்றில் Tutankhamun பற்றி சொல்லப்பட்டிருக்கும் விஷயம்.

இந்த மம்மியை வெளியிலே எடுத்துவிட்டீர்களே? உங்களுக்கு பயமாக இல்லையா? என்று ஒரு இன்டர்வியூவில் howard இடம் கேட்க, 'கட்டுக்கதைகளை நான் நம்புவதில்லை' என்று கூறியிருக்கிறார். சரியாக இரண்டு வருடம் கழித்து இந்த ஆராய்ச்சிக்கு ஸ்பான்ஸர் செய்தவர் மர்மமான முறையில் வீட்டிலேயே இறந்துக் கிடக்கிறார். ஆனால் மக்கள் யாரும் இதை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்த மம்மியை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்கேன் எடுத்தவரும் இறந்துப் போகிறார். அந்த பிராஜக்ட்டிற்கு அரசாங்கத்தில் இருந்து உதவி புரிந்தவரும் இறந்துப் போகிறார். அடுத்து அந்த அறையில் இருந்து தங்கம் எடுத்தவர்கள், ஆராய்ச்சி செய்தவர்கள் என்று ஒவ்வொருவராக இறந்துப் போகிறார்கள். இப்போது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது. இது ஒரு போலீஸ் கேஸாகவும் மாறுகிறது.

இது முழுக்க கட்டுக்கதை தான் எந்த சாபமும்(Mummy curse) கிடையாது என்று உறுதியாக நம்பிக்கொண்டிருந்த Howard க்கு இப்போது பயம் வரத்தொடங்குகிறது. காரணம் முதல் முதலில் அந்த கல்லறைக்கு போகும் போது உள்ளே கதவருகில் இருந்த எச்சரிக்கை பலகையில், "இந்த கல்லறையை தொந்தரவு செய்தால், அது எந்த காலமாக இருந்தாலும், எத்தனை நபராக இருந்தாலும் கொடிய நோயாலும், எதிர்ப்பாராத விபத்தாலும் இறந்துப் போவீர்கள்!" என்று எழுதியிருந்தது. இருந்தாலும் Howard இது பொய்யாக இருக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டார். சிறிது காலம் கழித்து அந்த ஆராய்ச்சியில் வேலை பார்த்த அனைவருமே இறந்துப் போனார்கள். 

இதையும் படியுங்கள்:
கர்நாடக இசை உருவான கதை - சிலிர்க்க வைக்கும் வரலாறு!
Tutankhamun tomb and Howard carter

இந்த நேரத்தில் Howard க்கு இரத்த புற்றுநோய் வந்தது. இதனால் Howard தற்கொலை செய்துக் கொள்கிறார். Tutankhamun பெட்டி திறக்கப்பட்டு 16 வருடத்திற்குள் அந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இறந்துப் போனார்கள். Howard தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு, "நான் Tutankhamun பெட்டியை திறந்து மிகபெரிய தவறை செய்துவிட்டேன்!" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com