
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் குழந்தைகளை குளிக்க வைத்து, புது ஆடைகள் ஆடைகள் அணிவித்து அன்னம் அளித்து 'கன்யா பூஜை’ செய்வார்கள்.
அடுத்து சுவாசினி பூஜை
சுமங்கலிகளை வணங்கி பூஜை செய்வதுதான் சுகாசினி பூஜை. சுமங்கலிகளை துர்கா தேவியின் வடிவங்களாக நினைத்து, இந்த பூஜையை செய்கிறோம். இந்த பூஜை முடிந்த பிறகு தலை வாழை இலை போட்டு அதிரசம், எள்ளுருண்டை, உளுந்து வடை போன்றவற்றை இரண்டிரண்டாக பரிமாறவேண்டும். பாயசம், அன்னம், தயிர் சாதம் இவற்றை சாப்பிடுபவரிடம் கேட்டுக்கேட்டுப் பரிமாறவேண்டும். நன்கு சாப்பிட்டு கை அலம்பிய பிறகு அவர்களை உட்கார்த்தி மஞ்சள், குங்குமம், சந்தனம், சீப்பு, கண்ணாடி, வெற்றிலை, பாக்கு ரவிக்கைத்துணி, அளித்து, பானகம், நீர்மோர் கொடுத்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெறவேண்டும். சுகாசினி பூஜையை முறையாக செய்தால் ' அஸ்வமேத யாகம் ' செய்த பலன் கிடைக்கும். சுகாசினி பூஜை செய்யும்போது அவர்களுடன் அம்பிகையும் உணவு அருந்துவதாக ஐதீகம்.
கொலு வைப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டியவை ...
கொலுவுக்கு வரும் குழந்தைகளை ஸ்லோகம் அல்லது பாட்டு பாடச் சொல்லி, பரிசாக ஒரு கொலு பொம்மை கொடுக்கலாம். பாட்டு பாட வராதவர்களுக்குத் தெரிந்த ரைம்ஸ், கதைகளை சொல்ல வைத்து உற்சாகப்படுத்தலாம்.
குட்டீசுக்கு வளையல், பொட்டு, மாலை என்று வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, சின்ன சைஸ் சரஸ்வதி, லட்சுமி படங்களோடு, நித்திய ஸ்லோக புத்தகங்களைக் கொடுக்கலாம்.
நவராத்திரி கொலு பார்க்க வரும் பெண்களுக்கு லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, போன்ற ஸ்லோக புத்தகங்களைக் கொடுங்கள்.
வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால், குழந்தைகளை உட்கார வைத்து, கொலுவில் உள்ள ஸ்வாமிகளை சுட்டிக்காட்டி, புராண கதைகள் சொல்ல வைக்கலாம்.
உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் செய்யும் கிராஃட் பொருட்களை அலங்கரித்து கொலுவில் வையுங்கள். பிறர் பாராட்டும்போது குழந்தைகள் உற்சாகப்படுவதுடன், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க, இந்த பாராட்டுகள் உந்துதலாக இருக்கும். ரங்கோலி கோலங்களையும் போட குழந்தைகளை ஊக்குவியுங்கள்.