டைட்டானிக் ஷாக்கிங் உண்மை… 1500 பேர் மூழ்கிய இடத்தில் வெறும் ஷூக்கள் மட்டும்தான் இருக்கிறது!

no skeletons on the Titanic wreck
no skeletons on the Titanic wreck
Published on

உலக வரலாற்றில் மிக மோசமான கடல் விபத்து என்றால் அது டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம்தான். 1912-ஆம் ஆண்டு நடந்த இந்த கோர விபத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது உயிரை இழந்தார்கள். பல வருட போராட்டத்திற்கு பிறகு 1985 ஆம் ஆண்டு இந்த கப்பலின் இடிபாடுகளை கடலுக்கு அடியில் கண்டுபிடித்தார்கள். உடைந்த கப்பல் பாகங்கள், பீங்கான் தட்டுகள் மற்றும் பயணிகளின் துணிகள் என பல பொருட்கள் அங்கே கிடைத்தன. 

ஆனால் அத்தனை பேர் இறந்த அந்த இடத்தில் ஒரு மனித எலும்புக்கூடு கூட இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கடல்வாழ் உயிரினங்களின் பசி!

விபத்து நடந்தவுடன் பலரின் உடல்கள் சுமார் நாலாயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள அட்லாண்டிக் கடலின் இருண்ட தரைப்பகுதிக்கு சென்று அடைந்தன. அந்த அதீத ஆழத்தில் வாழும் உயிரினங்களுக்கு சாப்பாடு கிடைப்பது மிக மிக கஷ்டம். அதனால் அங்கு வந்த மனித உடல்களை ஆழ்கடல் மீன்களும் பலவிதமான பாக்டீரியாக்களும் உடனே சாப்பிட ஆரம்பித்துவிட்டன. சில மாதங்களிலேயே மனித உடலின் சதைகள் மற்றும் தோல்கள் முழுவதுமாக அந்த கடல்வாழ் உயிரினங்களால் வேட்டையாடப்பட்டுவிட்டன.

எலும்புகளைக் கரைத்த ரசாயனம்!

சதைகள் அழிந்தாலும் எலும்புகள் அப்படியே தானே இருக்கவேண்டும் என நீங்கள் யோசிக்கலாம். அங்கே தான் கடலின் ஒரு பிரம்மாண்டமான வேதியியல் வேலை செய்தது. கடலின் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழே கால்சியம் கார்பனேட் காம்பன்சேஷன் டெப்த் (Calcium Carbonate Compensation Depth) எனப்படும் ஒரு நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெற்றித் தூண்கள்: எதிரி நாடுகளை வீழ்த்திய பிறகு அரசர்கள் செய்த அந்த ஒரு காரியம்!
no skeletons on the Titanic wreck

அந்த ஆழத்தில் இருக்கும் அதீத அழுத்தம் மற்றும் கடலின் ரசாயன கலவை காரணமாக, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் தானாகவே தண்ணீரில் கரையத் தொடங்கிவிடும். டைட்டானிக் கப்பல் அந்த குறிப்பிட்ட எல்லைக்கும் பல ஆயிரம் அடி கீழே கிடப்பதால், மனிதர்களின் எலும்புகள் மிக மெதுவாக அந்த கடல் நீரிலேயே முழுவதுமாக கரைந்துவிட்டன.

சாட்சியாக நிற்கும் காலணிகள்!

அங்கு மனித உடல்கள் இல்லை என்றாலும், ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்த இன்னொரு விஷயம் அங்கே இருந்தது. கடலின் அடிமட்டத்தில் அடுத்தடுத்து ஜோடியாக பல ஷூக்கள் மட்டும் அப்படியே கிடந்தன. அந்த காலத்தில் ஷூக்களை தயாரிக்க பயன் படுத்தப்பட்ட தோலில் டானின் எனப்படும் ஒரு ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும். ஆழ்கடல் உயிரினங்களுக்கு இந்த கெமிக்கல் வாடை சுத்தமாகப் பிடிக்காது, மேலும் அது சீக்கிரத்தில் தண்ணீரிலும் கரையாது. அதனால்தான் உடல்கள் அழிந்தாலும் அவர்கள் அணிந்திருந்த காலணிகள் மட்டும் ஒரு மௌன சாட்சியாக இன்றும் அங்கே அப்படியே இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் கண்ணாமூச்சி ஆட்டத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
no skeletons on the Titanic wreck

இயற்கையின் சுழற்சியில் எந்த ஒரு பொருளும் வீணாவதில்லை என்பதற்கு இந்த டைட்டானிக் சம்பவம் ஒரு மிகப்பெரிய உதாரணம். அந்த இருண்ட கடலின் ஆழத்தில் எந்த ஒரு தடயமும் இல்லாமல், இறந்தவர்களின் உடல்கள் ஒட்டுமொத்தமாக அந்த பிரம்மாண்டமான கடலோடு கடலாகவே கலந்துவிட்டன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com