

ஒரிசாவின் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து சில கி. மீ. தள்ளி பிப்லி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அனைத்து மக்களும் பிப்லி கை வேலையை செய்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் கைவண்ணத்தில் சுவர்களில் அலங்காரமாகவும் மற்றும் வீடு முழுவதும் அழகான தொங்க விடக்கூடிய பிப்லி கலை வண்ணம் வெளிப்படுகிறது. இந்த பிப்லி கலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமானதாக தெரிகிறது. இந்த கிராமமும், கலையும் ஒரே பெயரான பிப்லி என்றே அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் இந்த பிப்லி கைவேலை ஜெகன்னாதர் கேஸில் தேவைகளுக்காகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்குள் தேவையானவைகளை பிப்லி கலை வேலைப்பாடு மூலம் தயாரிக்கப்பட்டது. மஞ்சள், சிவப்பு பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் தயாரிக்கப்படும் யானை, மயில், சூரியன் மற்றும் பூக்கள் போன்றவைகளாக மாறின. தற்போது காலத்திற்கேற்ப வண்ணங்களும், வடிவங்களையும் மாற்றி பழமையின் தன்மை மாறாமல் இந்த கிராமத்து மக்கள் தயாரிக்கிறார்கள்.
இப்போது இந்த கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் அளவிற்கு பிப்லி கலை வளர்ந்துள்ளது. இந்த மாற்றத்தில் துணிகளை ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்பட்டு அதில் கண்ணாடிகள் மற்றும் வடிவங்களை அமைப்பதில் புதிய யுக்தியை இக்கிராம மக்கள் புகுத்தி வியக்கவைக்கிறார்கள். எது எப்படி மாறினாலும் பழமையை நினைவுபடுத்தும் தானகவே இந்த பிப்லி கலை உள்ளது. விளக்கு நிழல்கள், சுவரில் தொங்கவிடக் கூடிய அலங்கார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களில் வண்ண வடிவங்கள் அமைப்பது என்று கண்ணைக் கவரும் வண்ணம் இந்த பிப்லி கலை உயர்ந்துள்ளது.
மேலும் பிங்க், ஊதா மற்றும் பல வண்ணங்களையும் பயன்படுத்தி மெருகு ஏற்றுகிறார்கள. முன்பு விழாக்களுக்கான குடைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த கலை பல வழிகளில் மாற்றம் கண்டு அதற்கு தனி மதிப்பைக் தருகிறது. தாமரைப்பூ, கிளிகள் என்று பல வழிகளிலும் பாரம்பரியமான வற்றை பிப்லி மூலம் அழகுற தயாரிக்கிறார்கள். ஊர்வலங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த பிப்லி வேலைப்பாடுகள் இப்போது வீட்டு பொருட்கள் மட்டுமன்றி குர்தா ஓவர் கோட் ஆகியவைகளில் காணப்படுகிறது. மும்பையில் ஒருவருக்கு விளக்கு நிழல் வேண்டுமென்றால் பிப்லியிலிருந்து ஆன்லைன் மூலம் கிடைக்கும் அளவிற்கு வியாபாரம் செழித்துள்ளது இதற்கு அரசு உதவிபுரிகிறது.
ஒடிசாவின் பாரம்பரிய நடனம் கொடிபுவா
ஒடிசாவின் பாரம்பரிய நடனம் கொடிபுவா. இது பெரும்பாலும் இளைஞர்களாலேயே ஆடப்படுகிறது. மேலும் இந்த இளைஞர்களே பெண் வேடமிட்டு ஒடிசி நடனம் ஆடுவார்கள். ஒரிசாவின் ரகுராஜ்பூரில் இது தொடங்கியது. இந்த வகை நடனத்திற்கு வண்ணமயமான சில்க் புடவைகள், நகைகள் அணிந்து ஒடிசா பக்கத்தின் வாத்தியங்களோடு ஆடுவார்கள்.
இந்த ஊரில் பேப்பர்களிலிருந்து பொம்மைகள் தயாரிப்பதில் புகழ்பெற்றது. இந்த வகை பொம்மைகள் புராணக்கதைகளை விளக்கக்கூடிய பாத்திரங்களை தயாரிக்கிறது. மேலும் எந்த நாட்டிலும் இல்லாத மாட்டுச் சாணத்தில் விளையாட்டுப் பொருட்களை இந்த கிராமத்து மக்கள் தயாரிக்கிறார்கள்.
இந்த ஊரில் இராமாயண மகாபாரத கதைகளைச் சித்தரிக்கும் பத்த சித்ரா என்ற கலைவண்ணத்திலும் இந்த மக்கள் ஈடுபடுகிறார்கள். பாரம்பரியத்தை விட்டு விடாமல் அதை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக விரிவுபடுத்தும் இக்கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.